க்ரீன் டீயை விட அதிக அளவு ஆன்டி-ஆக்சிடண்டுகள் நிறைந்த எளிமையான உணவுகள் | Anti-oxidant niraintha unavugal

Anti-oxidant niraintha unavugal

நம்முடைய உடலில் உள்ள அணுக்களை ( Anti-oxidant niraintha unavugal)ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுபவை தான் ஆன்டி-ஆக்சிடண்டுகள். இவற்றைத் தான் ஆக்சிஜனேற்றிகள் என்று சொல்வார்கள். நம்முடைய உடலில் இருக்கும் ப்ரீ-ரேடிக்கல்ஸை அழித்து உடலை நோய் நிலைக்கு எடுத்துச் செல்லாமல் பாதுகாக்கும் கவசம் என்றே இதை சொல்லலாம்.

சமீபத்தில் க்ரீன் டீயில் ஆன்டி- ஆக்சிடண்டுகள் மிக அதிகம் என்ற பிரச்சாரத்தால் பெரும்பான்மையானோர் க்ரீன் டீ வணிகச் சந்தைக்கு மார்க்கெட்டிங் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் க்ரீன் டீயை விட பல மடங்கு அதிக அளவிலான ஆன்டி-ஆக்சிடண்டுகள் நாம் உண்ணும் விலை குறைந்த எளிய உணவுகளில் நிறைந்திருக்கின்றன. அப்படி என்னென்ன உணவுகளில் அவை அதிகம் என்று தெரிந்து கொண்டு அந்த உணவுகளை அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள்.

க்ரீன் டீ

Anti-oxidant niraintha unavugal
Anti-oxidant niraintha unavugal

க்ரீன் டீயில் ஆன்டி – ஆக்சிடண்ட் அளவு அதிகம் தான். ஒரு கப் க்ரீன் டீயில் கிட்டதட்ட 436 மி.கிராம் அளவுக்கு ஆன்டி-ஆக்சிடண்டுகள் நிறைந்திருக்கின்றன.

அது ப்ரீ ரேடிக்கல்ஸை எதிர்த்துப் போராடுவதோடு, மெட்டபாலிசத்தைத் துண்டும் தன்மையைக் கொண்டிருக்கிறது. அதனால் எடையை குறைக்க நினைப்பவர்கள் இதை அதிக அளவில் தேர்வு செய்கிறார்கள்.

பிளாக் டீ

Anti-oxidant niraintha unavugal
Anti-oxidant niraintha unavugal

க்ரீன் டீயைப் போலவே பிளாக் டீயிலும் ஆன்டி- ஆக்சிடண்டுகள் அதிக அளவில் இருக்கின்றன.பொதுவாக பிளாக் டீ, பிளாக் காபியில் பித்தம் அதிகமாக இருக்கிறது என்று ஒதுக்கிவிடுகிறோம். ஆனால் 100 மில்லி பிளாக் டீயில் கிட்டதட்ட 239 மில்லிகிராம் அளவு ஆன்டி- ஆக்சிடண்ட்டுகள் நிறைந்திருக்கின்றன

​பசலைக்கீரை

Anti-oxidant niraintha unavugal
Anti-oxidant niraintha unavugal

பசலைக்கீரை நாம் அதிகமாக எடுத்துக் கொள்வதே இல்லை. ஆனால் முருஞ்கைக் கீரையை அடுத்து பசலைக்கீரையில் மிக அதிக அளவில் ஆக்சிஜனேற்றிகள் நிறைந்து காணப்படுகின்றன. குறிப்பாக லூட்டீன் மற்றும் கரோட்டீனாய்டு ஆகிய ஆன்டி- ஆக்சிடண்ட்டுகள் அதிகமாக இருப்பதால் மூளை வளர்ச்சியைத் தூண்டுவதில் மிகச் சிறப்பாகச் செயல்படுகிறது.

முட்டைகோஸ்

Anti-oxidant niraintha unavugal
Anti-oxidant niraintha unavugal

முட்டைகோஸ் நிறைய பேருக்குப் பிடிக்காது. காரணம் அதன் வாசனை. ஆனால் அதில் ஆன்டி- ஆக்சிடண்டுகள் மிக தாராளமாகக் கிடைக்கினறன. அவற்றோடு நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் மிக அதிகம்.

பூண்டு

Anti-oxidant niraintha unavugal
Anti-oxidant niraintha unavugal

பூண்டில் ஆன்டி- பயோடிக் மற்றும் ஆன்டி- மைக்ரோபியல் பண்புகள் மிக அதிகம். அதோடு ஆக்சிஜனேற்றிகளாகச் செயல்படும் வைட்டமின் ஏ, பி, சி மற்றும் ஜிங்க, செலீனியம் போன்றவை மிக அதிக அளவில் காணப்படுகின்றன.

இவை உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுவதோடு உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளைக் கரைக்கும் ஆற்றல் கொண்டது. உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றல் பூண்டுக்கு உண்டு.

புதினா

Anti-oxidant niraintha unavugal
Anti-oxidant niraintha unavugal

புதினாவில் அவ்வளவு சத்துக்கள் இருக்கிறதா என்று ஆச்சர்யப்படாதீர்கள். நீங்கள் ஆரோக்கியம் நிறைந்ததாகக் கருதுகிற க்ரீன் டீயை விட நூறு மடங்கு அதிகமாக புதினாவில் ஆன்டி- ஆக்சிடண்டுகள் அதிகமாக இருக்கின்றனவாம். விலை குறைவாக, நமக்கு தினசரி கிடைக்கக்கூடிய இப்படியொரு அற்புத உணவை நாம் பெரிதாகக் கண்டு கொள்வதே இல்லை. பிரியாணி போன்ற உணவுகளில் வாசனைக்காக மட்டும் பயன்படுத்கிறோம். இனியாவது இதன் அருமையைப் புரிந்து கொண்டு, உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொள்ளங்கள்.

குடைமிளகாய்

Anti-oxidant niraintha unavugal
Anti-oxidant niraintha unavugal

குடைமிளகாய் முழுக்க முழுக்க நீர்ச்சத்தால் ஆன ஒரு காய்கறி. இதில் ஏராளமான நன்மை பயக்கும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. குறிப்பாக, கரோட்டீனாய்டு என்றும் ஆக்சிஜனேற்றப் பண்பு இதில் அதிக அளவில் இருக்கிறது. அதோடு வைட்டமின் சி நிறைந்திருப்பதால் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும் தன்மை குடைமிளகாய்க்கு உண்டு.

​பீன்ஸ்

Anti-oxidant niraintha unavugal
Anti-oxidant niraintha unavugal

சோயா, கொண்டைக்கடலை, பாசிப்பயறு போன்ற பீன்ஸ் வகைகள் அனைத்திலும் புரதச்சத்தும் ஆன்டி- ஆக்சிடண்ட்டுகளும் மிக அதிகம். குறிப்பாக, நீரிழிவு நோயாளிகள் ரத்த சர்க்கரையைக் கட்டுக்குள் வைப்பதற்கு இந்த பீன்ஸ் வகைகளை தங்களுடைய உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொள்வது நல்லது.

நெல்லிக்காய்

Anti-oxidant niraintha unavugal
Anti-oxidant niraintha unavugal

புதினாவைப் போலவே, க்ரீன் ( Anti-oxidant niraintha unavugal ) டீயைக் காட்டிலும் கிட்டதட்ட 200 மடங்குக்கு மேலாக ஆன்டி- ஆக்சிடணட்டுகள் நெல்லிக்காயில் அதிகம் இருக்கிறதாம். அதனால் தான் தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வர நம்முடைய முன்னோர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள். இப்படியொரு அற்புத உணவு நம் கையில் இருந்தால் எந்தவித நோய்களும் நம்மை அண்டாது.