மச்சு பிச்சு – வியப்பூட்டும் சில தகவல்கள்! | Machu Picchu

Machu Picchu

மர்ம அதிசயம் மச்சு பிச்சு – Machu Picchu – Amazing Facts)மறைந்திருக்கும் வரலாற்று உண்மைகள்!

Machu Picchu
Machu Picchu

உலகெங்கும் உள்ள வரலாற்றுத் தலங்கள் (Machu Picchu )அந்தந்த நாட்டு முன்னோர்களின் சிறப்பை பறைசாற்றி நிற்கின்றன. அந்தவகையில் தென்னமெரிக்க நாடான பெருவில் அமைந்திருக்கும் மச்சு பிச்சு நகரம் தனிச்சிறப்புடன் விளங்கிக் கொண்டிருக்கிறது.

63047359 Thedalweb மச்சு பிச்சு - வியப்பூட்டும் சில தகவல்கள்! | Machu Picchu
மச்சு பிச்சு

பதினைந்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மச்சு பிச்சு நகரம், செங்குத்தான ஆண்டிஸ் மலைத்தொடரில், கடல் மட்டத்திற்கு மேல் 2400 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. பச்சாகுட்டி (Pachakuti) என்ற இன்கா மன்னரின் ஆட்சிக்காலத்தில் இந்த நகரம் கட்டப்பட்டிருக்கிறது.

63047385 Thedalweb மச்சு பிச்சு - வியப்பூட்டும் சில தகவல்கள்! | Machu Picchu
மச்சு பிச்சு

செங்குத்தான மலைத்தொடரின் உச்சியில் 1000 பேர் வாழும்படியாக ஒரு நகரத்தை உருவாக்கியிருக்கிறார்கள் தொழில்நுட்ப வசதிகள் எதுவும் இல்லாத அந்த காலத்தில், மக்களின் உழைப்பை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு மலை உச்சியில் இந்நகரம் அமைக்கப்பட்டுள்ளது.

63047353 Thedalweb மச்சு பிச்சு - வியப்பூட்டும் சில தகவல்கள்! | Machu Picchu
மச்சு பிச்சு

மச்சு பிச்சு நகரம், அடர்ந்த காட்டுக்குள்ளே யாரும் எளிதில் அடைய முடியாத இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள அமைப்புகள், கற்களால் ஆன வடிவங்கள் ஏதோ சூரிய அல்லது இறை வழிபாட்டிற்கான இடமாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

63047404 Thedalweb மச்சு பிச்சு - வியப்பூட்டும் சில தகவல்கள்! | Machu Picchu
மச்சு பிச்சு

தேயிலைத் தோட்டங்களில் படிப்படியாக பயிரைச் சாகுபடி செய்ய அமைக்கப்பட்டிருப்பதைப் போல மலைச்சரிவில் படிப்படியாக கட்டடங்களை கட்டியிருப்பது இன்கா மக்களின் கலாச்சாரத்தைப் போற்றுகிறது.

63047342 Thedalweb மச்சு பிச்சு - வியப்பூட்டும் சில தகவல்கள்! | Machu Picchu
மச்சு பிச்சு

மழைக்காலத்தில் வெள்ளத்தால் கட்டடங்கள் அடித்துச் செல்லாமல் இருக்கும் படியாக வடிகால்களையும், விவசாயத்திற்குத் தேவையான நீர் ஆதாரங்களையும் உருவாக்கியிருப்பது இம்மக்களின் கட்டிட கலைக்கு சான்றாக இருக்கிறது.

63047336 Thedalweb மச்சு பிச்சு - வியப்பூட்டும் சில தகவல்கள்! | Machu Picchu
மச்சு பிச்சு

பெரு நாட்டின் மீது ஸ்பானிஷ் படைகள் தாக்குதல் நடத்தியதால் தப்பி ஓடிய இன்கா மக்கள் கஸ்கா என்ற தங்கள் நகரத்தை விட்டு அடர் காடுகள், பள்ளத்தாக்குகளில் தஞ்சம் புகுந்தனர்.

63047316 Thedalweb மச்சு பிச்சு - வியப்பூட்டும் சில தகவல்கள்! | Machu Picchu
மச்சு பிச்சு

காட்டுக்குள் தங்கிய இன்கா மக்களை ஸ்பானிஷ் படை நெருங்க முடியாமல் விலகி விட்டது. ஆனால் கானகத்தில் நுழைந்த இன்கா மக்கள் தங்களுக்கென ஒரு பெரிய நகரை காட்டுக்குள்ளேயே நிர்மாணித்தனர்.

63047316 1 Thedalweb மச்சு பிச்சு - வியப்பூட்டும் சில தகவல்கள்! | Machu Picchu
மச்சு பிச்சு

வில்கபாம்பா என அவர்கள் அந்த நகருக்குப் பெயரிட்டனர். நகரை நிர்மாணித்த இன்கா மக்கள் தங்களுடைய நிம்மதியான வாழ்க்கையைக் கெடுத்த ஸ்பானியர்களுக்கு சண்டை, போர் என குடைச்சல் கொடுத்துக் கொண்டே இருந்தனர். ஸ்பானியர்களும் திரும்பித் தாக்கிக் கொண்டே இருந்தார்கள்.

63047320 Thedalweb மச்சு பிச்சு - வியப்பூட்டும் சில தகவல்கள்! | Machu Picchu
மச்சு பிச்சு

சுமார் முப்பத்து ஆறு ஆண்டுகள் இந்த சண்டை விட்டு விட்டு நடந்தது. ஸ்பானியர்கள் கடைசியில் 1572ல் மாபெரும் கொடூரத் தாக்குதலை நிகழ்த்தினார்கள். இன்கா மக்களை வயது, பாலியல் வேறுபாடு ஏதுமின்றி கொன்று குவிக்க ஆரம்பித்தார்கள். ஸ்பானிய படைகள் கடைசியில் வில்காபாமாவையும் தாக்கியது.

63047310 Thedalweb மச்சு பிச்சு - வியப்பூட்டும் சில தகவல்கள்! | Machu Picchu
மச்சு பிச்சு

இன்கா மக்களின் கடைசி மன்னன் துப்பாக் அமாரு சிறை பிடிக்கப்பட்டான். மன்னனைச் சிறைப்பிடித்த ஸ்பானியர்கள் அவரை கஸ்கோ நகருக்குக் கொண்டு பிளாசா டி ஆர்மாஸ் என்னுமிடத்தில் வந்து படுகொலை செய்தனர்….

63047306 Thedalweb மச்சு பிச்சு - வியப்பூட்டும் சில தகவல்கள்! | Machu Picchu
மச்சு பிச்சு

ஸ்பானியர்களின் படையெடுப்பின் காரணமாக இன்கா பேரரசு முழுவதும் சிதைக்கப்பட்டு மக்கள் சிதரடிக்கப்பட்டனர். இன்கா பேரரசை ஸ்பானியர்கள் கைப்பற்றியதில் இருந்து, இப்படி ஒரு நகரம் இருப்பது தெரியாததால் கைவிடப்பட்ட நிலையில் இருந்து வந்தது “மச்சு பிச்சு”.

63047299 Thedalweb மச்சு பிச்சு - வியப்பூட்டும் சில தகவல்கள்! | Machu Picchu
ஹிராம் பிங்கம்

பல நூற்றாண்டுகளாக மறக்கப்பட்டிருந்த இந்த நகரத்தை 1911 இல் அமெரிக்க வரலாற்றியலாளர் ஹிராம் பிங்கம் என்பவர் மீளக் கண்டுபிடித்தார். 1983 முதல் யுனெஸ்கோ அமைப்பின் கலாச்சார சிறப்புமிக்க இடங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

Explore with Street View

https://artsandculture.google.com/story/mAWxq7mCQ7kNKw

Share Link