மாதுளையில் இலை, பூ, பிஞ்சு, பழம், வேர், பட்டை ஆகிய அனைத்து பாகங்களும் மருத்துவத்தில் பயன்படுபவை. மேலும் வைட்டமின் சி நிறைந்துள்ளது என்பதால் நோய் எதிர்ப்பு தொடர்பான கோளாறுகளைச் சீர்செய்கிறது.

Medicinal Benefits of Pomegranate Leaves !!

இருமல் சளி தொண்டையிலுள்ள நோய்த் தொற்று முதலானவற்றைக் குணமாக்க, மாதுளை இலைகளை கொண்டு காபி தயாரித்து பருகலாம். ஒரு கைப்பிடி அளவு மாதுளை இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க விடவும். இலைகள் நன்கு வெந்ததும் அதனை வடிகட்டி தினமும் இரண்டு முறை குடித்து வந்தால் இருமல் சளிப் பிரச்சினை தீரும்.

0 kJk0h6XhTfL6cIVF Thedalweb மாதுளை இலையில் உள்ள மகத்தான மருத்துவ  பயன்கள் !!

தூக்கமின்மைப் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் ஒரு கைப்பிடி அளவு மாதுளை இலைகளை விழுதாக அரைத்து 200 மிலி தண்ணீரில் கலந்து கொதிக்க விட்டு அந்நீர் 50மிலி குறையும் வரை கொதிக்கவைத்து, பின் இதனை வடிகட்டி இரவில் தூங்குவதற்கு முன்பு பருகி வந்தால் ஆழ்ந்த தூக்கத்துக்கு வழி வகுக்கும்.

Medicinal Benefits of Pomegranate Leaves

பருக்கள் மீது மாதுளை இலையை சாறாக்கிப்பூசி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். தொப்பையைக் குறைக்க உதவுகிறது. கட்டுடல் அழகை பேண மாதுளை இலை சாற்றைப் பருகி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

pic 1 Thedalweb மாதுளை இலையில் உள்ள மகத்தான மருத்துவ  பயன்கள் !!

செரிமானப் பிரச்சினையைச் சீர்செய்ய மாதுளை இலைகளை மருந்தாக உட்கொள்ளலாம். அவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் செரிமானத்தை தூண்ட உதவுகிறது. இதன் மூலம் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும்.

அஜீரணம், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகளும் நீங்கும். இந்த பிரச்சினைகளுக்கு மாதுளை இலைகளை தேநீராக தயாரித்து பருகலாம்.

Related Articles :

Mappillai Samba rice benefits in Tamil
Mappillai Samba rice benefits in Tamil

மாப்பிள்ளை சம்பா அரிசியில் இவ்வளவு சத்து இருக்கா?

பொதுவாக பாரம்பரிய உணவுகள் எப்போதும் நம் உடலுக்கு ஆரோக்கியமானது தான். அதை யாரும் மறுக்க முடியாது. உதாரணத்திற்கு பாரம்பரிய அரிசி வகைகளை எடுத்து கொண்டோமேயானால் அதில் நிறைய ரகங்கள் இருக்கிறது. அதில் ஒன்று மாப்பிள்ளை சம்பா அரிசி. இந்த அரியில் உள்ள மருத்துவ குணங்கள், இதனால் நம் உடலுக்கு உண்டாகும் பயன்கள், அதை எப்படி சமைத்து சாப்பிடலாம்.

கொழுப்பு, உடல் எடை குறைக்கும் - கொள்ளு நன்மைகள் 
கொழுப்பு, உடல் எடை குறைக்கும் – கொள்ளு நன்மைகள் 

கொள்ளு ஊற வைத்தோ, வறுத்தோ சாப்பிடலாம். ரசம், துவையல், குழம்பு என விதவிதமாகச் சமைத்தும் சாப்பிடலாம்.

கொழுத்தவனுக்கு கொள்ளு; இளைத்தவனுக்கு எள்ளு” பலமுறை கேட்ட முதுமொழி. ஆனால், அர்த்தம் நிறைந்தது. கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு அத்தனை சக்தி உண்டு. அதற்காக, இதை வெறும் கொழுப்பைக் குறைக்கும் உணவு என்று சாதாரணமாக நினைத்துவிடக் கூடாது. `ஏராளமான மருத்துவப் பலன்களையும் உள்ளடக்கியது’ என்கிறார்கள் மருத்துவர்கள். இது ஓர் ஆரோக்கிய உணவு. ஊற வைத்தோ, வறுத்தோ சாப்பிடலாம். ரசம், துவையல், குழம்பு என விதவிதமாகச் சமைத்தும் சாப்பிடலாம். நன்கு அரைத்து, சாறு எடுத்து சூப்பாகச் செய்தும் அருந்தலாம். இதை  ஊறவைத்த நீரில்கூட எண்ணற்ற மருத்துவப் பலன்கள் இருக்கின்றன. 

தாய்ப்பால் சுரப்புக்கு கல்யாணமுருங்கை
தாய்ப்பால் சுரப்புக்கு கல்யாணமுருங்கை

கல்யாண முருங்கை முள் முருங்கை, முருக்க மரம், கல்யாண முருக்கன், முள் முருக்கு என்று பல பெயர்களில் கிராமங்களில் அழைக்கப்படுகிறது. இந்த மரத்தின் இலை, விதை, பட்டை என அனைத்துமே மருத்துவ பயன்களை கொண்டிருக்கின்றன.,

இவை வெற்றிலை, மிளகு என கொடிவகை தாவரங்கள் பயிரிடப்படும் போது அவை வளர்வதற்கு ஏற்ப இவை வளர்க்கப்படுகிறது. காரச்சுவையும் வெப்பத்தன்மையும் கொண்ட இவை பெண்களுக்கான மரம் என்று சொல்லப்படுகிறது. இது குறித்து ஏற்கனவே பார்த்திருக்கிறோம். இதையும் இந்த பதிவில் இணைக்கிறேன். இந்த கல்யாண முருங்கை செய்யும் ஆரோக்கிய நன்மைகள்