0மணி ரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் திரைப்படம் ‘தக் லைஃப்’. சிம்பு, த்ரிஷா, அபிராமி, கவுதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், அலி ஃபசல், ஐஸ்வர்யா லட்சுமி உட்பட பலர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இதில் கமல்ஹாசன் 3 வேடங்களில் நடிக்கிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படம் அடுத்த ஆண்டு ஜூன் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்தப் படத்தில் ‘மிர்சாபூர்’ வெப் சீரீஸ் மூலம் கவனம் பெற்ற அலி ஃபைசல் தொடர்புடைய காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டது. மணி ரத்னம் இயக்கத்தில் நடித்தது குறித்து அலி ஃபைசல் அளித்தப் பேட்டியில், “மணி ரத்னம் சார் இயக்கத்தில் நடித்ததும், அவருடன் பணியாற்றியதும் பெருமைக்குறியதாக கருதுகிறேன். கமல்ஹாசன் உள்ளிட்ட பிற நடிகர்களுடன் இணைந்து நடித்தது என் வாழ்வில் மறக்கவே முடியாத அனுபவம். ஒரு நடிகனாக எனக்குள் கடந்த 2 மாதங்களில் பல மாற்றங்களை உணர்கிறேன். தமிழ் கற்றுக்கொண்டு புதிய திரையுலக கலாச்சாரத்துக்குள் என்னை நுழைத்துக்கொண்டேன். அது என் எல்லைகளை பெரிதாக்கி மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மணி சார் மிகவும் ஆழமான சினி உலகை உருவாக்குகிறார். இந்த படம் இந்தியாவை கடந்தும் சினிமா ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதை என்னால் நம்பிக்கையுடன் சொல்ல முடியும். நாங்கள் எல்லோரும் சேர்ந்து உருவாக்கிய இந்தப் படத்தை அனைவரும் பார்க்க வேண்டும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…
https://bit.ly/MadrasNallaMadras