வல்லாரைக்கீரையை ஒரு துவையலாகவோ அல்லது வெறும் வல்லாரைக்கீரையை அரைத்து, விழுதாகவோ, தண்ணீர் விட்டு விழுங்கிடலாம். இதை போன்று தினமும் தொடர்ந்து செய்து வரும்போது, எந்த வித தோல் நோயாக இருந்தாலும் சரியாகிவிடும்.


நமது மூளைக்கு தேவைப்படும் ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் நிறைந்தது இந்த வல்லாரைக்கீரை. அதனால்தான் இந்த வல்லாரைக்கீரைக்கு சரஸ்வதி என்று மற்றொரு பெயரும் உள்ளது.

மந்தமாக படிக்கும் குழந்தைகள், தொடர்ந்து இந்த வல்லாரைக் கீரையை, காலையில் வெறும் வயிற்றில் மூன்று வல்லாரைக் கீரை தொடர்ந்து பச்சையாகக் கொடுத்து வரும் பொழுது நன்கு மூளை வளர்ச்சி அடையும். 

வல்லாரை இலையை வாயில போட்டு நன்றாக மென்று அந்த சாறை குடித்து வந்தால் குடலில் இருக்கக்கூடிய புண், குடல் நோய், வாய் புண், வாய் துர்நாற்றம் அனைத்தும் சரியாகி விடும்.

வல்லாரை கீரையை, தினமும் சாப்பிடுபவர்களுக்கு கண் மங்கல் முற்றிலும் சரியாகும். கண் பார்வை தெளிவடையும். கண்களுக்கு நன்கு குளிர்ச்சியை தரக்கூடியது.

அஜீரணக் கோளாறுகள் எல்லாவற்றையும் நீக்கக்கூடியது இந்த வல்லாரைக்கீரை. வல்லாரைக் கீரையை நன்றாக அரைத்து தோசை மாவில் சேர்த்து , தோசையாக செய்து கொடுக்கலாம்.

இந்த தோசையும் மிகவம் சுவையுடன் இருக்கும். குழந்தைகளுடைய மூளை வளர்ச்சிக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

 இளநரை இருப்பவர்களும் சரி, அல்லது தலையில் வெள்ளை முடி இருப்பவர்களும் சரி தொடர்ந்து இந்த வல்லாரைக் கீரையை சாப்பிட்டுட்டு வரும்பொழுது, அந்த வெள்ளை முடி கருமையாக மாற ஆரம்பிக்கும்.

வல்லாரை இலையுடன் சம அளவு கீழாநெல்லி இலை சேர்த்து அரைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நீர் எரிச்சல் தீரும்.

குழந்தைகளுக்குத் தினமும் 10 வல்லாரை இலைகளை பச்சையாக மென்று சாப்பிடக் கொடுத்தால் மூளை நரம்புகள் வலுப்பெறும். தொண்டையில் ஏற்படும் அவஸ்தைகள் குறையும்.

வல்லாரை, ரத்த சோகையைப் போக்கி ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

வல்லாரைப் பொடியைக் கொண்டு பல் துலக்கினால் பல்லில் உள்ள கறைகளைப் போக்கும். பல் ஈறுகளைப் பலப்படுத்தும்.

இளைப்பு, இருமல், தொண்டைக்கட்டு போன்றவற்றை வல்லாரை போக்கும். காசநோயாளிகளுக்கு வல்லாரை சிறந்த மருந்தாகும்.

வல்லாரை, கண் எரிச்சல், கண்ணில் நீர் வடிதல் போன்றவற்றைப் போக்கி கண் நரம்புகளுக்கு நன்மை அளிக்கும்.

நீரிழிவு நோயாளிகள் வல்லாரைக் கீரை உண்பது நல்லது. இக்கீரை மலச்சிக்கலைப் போக்கி, வயிற்றுப் புண், குடல்புண்ணை ஆற்றுகிறது.

யானைக்கால் வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் வல்லாரை இலையை அரைத்துக் கட்டினால் நோயின் தாக்கம் குறையும். அதுபோல விரைவீக்கம், வாயு வீக்கம், கட்டிகளின் மீது பூசி வந்தால் குணம் கிட்டும்.

வல்லாரை இலையை முறைப்படி எண்ணெயாக்கி, தினமும் தலையில் தேய்த்து வந்தால் உடல் சூடு தணியும். உடல் எரிச்சல் நீங்கும்.

வல்லாரை செடியின் இலையை நிழலில் உலர்த்தி நன்குப் பொடித்து, பாலில் கலந்து தினமும் இரவு படுக்கைக்குச் செல்லும்முன் குடித்தால் வயிற்றுப் பூச்சிகள் அழிந்துபோகும்.

வல்லாரை இலையை நன்கு சுத்தம் செய்து, அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து சட்னியாக அரைத்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாணவ, மாணவிகளுக்கு ஏற்படும் மூளைச் சோர்வை நீக்கி, ஞாபக மறதியைக் குணமாக்கும். ஆனால் வல்லாரைச் சட்னியில் புளியை அறவே தவிர்க்க வேண்டும். உப்பு சேர்த்துக்கொள்ளலாம்.

Related Searches :

heath food 1 Thedalweb நச்சுக்களை நீக்கும் அற்புத மருந்து வல்லாரை கீரை !!
ஆரோக்கிய உணவுப் பழக்கங்கள்!(Healthy foods to gain weight)

இயற்கை வைத்தியத்தில் தாதுஉப்புகள் அதிகம் உள்ள இளங்கீரைகள், புதிதாய்ப் பறித்த இளங்காய்கறிகள், பழங்கள் போன்றவை முதல் தரமான உணவுகளாகும். புரதப் பொருட்கள், மாவுப் பொருட்கள், சர்க்கரைப் பொருட்கள், கொழுப்புப் பொருட்கள் உள்ள தானியங்கள், பயிறுகள், கிழங்குகள், பருப்புகள் ஆகியவை இரண்டாம் தரமான உணவுகள். இந்த இரண்டையுமே நமது அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.(Read more)

%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%87 %E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87 Thedalweb நச்சுக்களை நீக்கும் அற்புத மருந்து வல்லாரை கீரை !!
உணவே மருந்து – மருந்தே உணவு ( Food is medicine – medicine is food )

உணவே மருந்து – மருந்தே உணவு என்கிற பழமொழிக்கேற்ப இன்றைய அவசர உலகில் நாம் நமது உடலுக்கு ஏற்ற உணவு வகைகளைச் சாப்பிடாமல் ஏதோ கடனுக்கு என்று நமது விருப்பப் படி சாப்பிடுவதாலும் நேரத்திற்குச் சாப்பிடாமல் கண்டபடி சாப்பிடுவதாலும், நமது உடலுக்கு ஏற்காத உணவு வகைகளை நாக்கிற்கு ஆசைப்பட்டு சாப்பிடுவதாலும் நமது உடல் நோய் எதிர்ப்புச் சக்தியைத் தானாகவே இழந்துவிடுகிறது. இதனால் எளிதில் நமது உடம்பை சாதாரண நோய் முதல் தீராத நாட்பட்ட நோய்கள் தாக்கி (Read more)

12 Thedalweb நச்சுக்களை நீக்கும் அற்புத மருந்து வல்லாரை கீரை !!
weight loss tips at home tamil – மின்னல் வேகத்தில் எடையைக் குறைக்க உதவும் தெரியுமா? எப்படி சாப்பிடுவது?

அஞ்சறைப் பெட்டியில் உள்ள முக்கியமான ஒரு நறுமணமிக்க பொருள் தான் பெருஞ்சீரகம் என்றும் அழைக்கப்படும் சோம்பு விதைகள். இந்த விதைகள் நல்ல மணத்துடன் இருப்பதால், இச்சிறிய விதைகள் வாய் புத்துணர்ச்சிக்காக பயன்படுத்தப்படுகின்றன. அதோடு சோம்பு விதைகள் சில குழம்பு, ஊறுகாய் மற்றும் இனிப்பு பலகாரங்களிலும் மணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படுகின்றன. (Read more)