சமீபத்தில் வெளிவந்த தகவலின்படி, கூகுள் குரோம் பயனாளர்கள் உடனே லேட்டஸ்ட் வெர்ஷனை அப்டேட் செய்துகொள்ளுமாறு இந்தியன் கம்ப்யூட்டர் எமர்ஜன்சி ரெஸ்பான்ஸ் டீம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இது சார்ந்த தகவலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

அதாவது மத்திய தொலைத்தொடர்புத்துறையின் ஒரு பகுதியான இந்தியன் கம்ப்யூட்டர் எமர்ஜன்சி ரெஸ்பான்ஸ் டீம் சார்பில் கூகுள் குரோம் பயன்படும் வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதன்படி கூகுள் குரோமில் பல பாதிப்புகள் உள்ளதாகவும், பின்பு குறிப்பிட்ட கம்ப்யூட்டரை இலக்காக கொண்டு ரிமோட் அட்டார்கர்ஸ் தாங்கள் நினைத்ததை செயல்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது கணினியில் உள்ள தனிப்பட்ட தகவல்களை அவர்களால் எளிதில் பெற முடியும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையிலை இந்த சிக்கல்களை சரிசெய்ய கூகுள் நிறுவனம் ஏற்கனவே சாஃப்ட்வர் அப்டேட்டை வெளியிட்டுள்ளது. எனவே பயனர்கள் கூகுள் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் வெர்ஷனை அப்டேட் செய்துகொள்ளுமாறும் இந்தியன் இந்தியன் கம்ப்யூட்டர் எமர்ஜன்சி ரெஸ்பான்ஸ் டீம் கோரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் 22 வகையான பாதுகாப்பு குறித்த பிரச்சனைகள் சரிசெய்யப்பட்டு குரோம் அப்டேட் வெளியிடப்பட்டுள்ளதாக கூகுள் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்த தகவலின்படி,கூகுள் நிறுவன அலுவலக வளாகத்தில் கதவை திறப்பது, டேபிள்களை துடைப்பது, குப்பைகளை அகற்றுவது, நாற்காலிகளை வரிசைப்படுத்துவது என அன்றாட பணிகளை செய்ய ரோபோக்கள் களம் இறக்கப்பட்டுள்ளன. பின்பு இது சார்ந்த தகவலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

குறிப்பாக இந்த புதிய வகை ரோபோ மாடல்களை ஆல்பாபெட்டின் X வடிவமைத்துள்ளது எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதாவது கூகுள் நிறுவனத்தின் அலுவலகத்தில் தற்போது 100 ரோபோக்கள் உலாவிக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல் தானியங்கு முறையில் இயங்கும் இவை Prototype- என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இவை Everyday Robotsஎன்று அழைக்கப்படுகிறது. குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அந்நிறுனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த புதியவகை ரோபோ மாடல்களை உருவாக்க பல ஆண்டுகளாக முயற்சியை மேற்கொண்டோம். பின்பு ரோபோக்களுக்கு கட்டமைக்கப்பட்ட ஒரு இடத்தில் எப்படி செயல்படுவது என்ற புரிதலை கற்றல் மூலமாக கொடுக்க முயன்றோம். அதேபோல் இதுவரையில் எங்களது ஆய்வு கூடத்தில் வலம் வந்த ரோபோக்கள், இனி அலுவலகத்தின் சில இடங்களில் வலம் வர உள்ளன என்றுதெரிவித்துள்ளார் தலைமை ரோபோ அலுவலர் Hans Peter Brøndmo. மேலும் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் இந்த ரோபோ மாடல்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் சுருக்கமாக கூறவேண்டும் என்றால் ரோபோக்கள் எந்த மாரியான வேலையை செய்ய வேண்டும் என்பது அதில் பொருத்தப்படும் கம்ப்யூட்டர்களில் புரோகிராம்களாக எழுதப்பட்டு வடிவமைக்கப்படுகின்றன. எனவே இந்த புரோகிராம்களின் அடிப்படையில் அந்த ரோபோ தனக்கு கொடுக்கப்பட்ட வேலைய செய்கிறது.

Related articles

இணையதளம்

இன்டர்நெட் (Internet)

உலகெங்கிலும் உள்ள பல்வேறு கணினி நெட்வொர்க்குகளை ஒன்றோடொன்று இணைக்க அனுமதிப்பதன் மூலம் தகவல் தொடர்பு மற்றும் வர்த்தக முறைகளில் புரட்சியை ஏற்படுத்திய ஒரு அமைப்பு கட்டமைப்பு . சில நேரங்களில் “நெட்வொர்க்குகளின் நெட்வொர்க்” என்று குறிப்பிடப்படுகிறது, இணையம் 1970 களில் அமெரிக்காவில் தோன்றியது, ஆனால் 1990 களின் முற்பகுதி வரை பொது மக்களுக்கு தெரியவில்லை. 2020 வாக்கில், ஏறக்குறைய 4.5 பில்லியன் மக்கள், அல்லது உலக மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இணைய அணுகல் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

வகையான நெட்வொர்க்குகள்(Types of Networks)

தனிப்பட்ட பகுதி வலையமைப்பு (Personal Area Network (PAN))

நெட்வொர்க்கின் மிகச்சிறிய மற்றும் அடிப்படை வகை, ஒரு பான் ஒரு வயர்லெஸ் மோடம், ஒரு கணினி அல்லது இரண்டு, தொலைபேசிகள், அச்சுப்பொறிகள், டேப்லெட்டுகள் போன்றவற்றால் ஆனது, மேலும் ஒரு கட்டிடத்தில் ஒரு நபரைச் சுற்றி வருகிறது. இந்த வகையான நெட்வொர்க்குகள் பொதுவாக சிறிய அலுவலகங்கள் அல்லது குடியிருப்புகளில் காணப்படுகின்றன, மேலும் அவை ஒரு சாதனத்திலிருந்து ஒரு நபர் அல்லது அமைப்பால் நிர்வகிக்கப்படுகின்றன.

இன்டர்நெட் இல்லாத போதும் ஜிமெயில் பயன்படுத்தும் வசதி வருகிறது!

ஜிமெயில் பயனர்களுக்காக இணையதளத்தில் ஒரு மிக முக்கியமான அம்சம் அளிக்கப்பட உள்ளது. இணையதளத்திற்கான ஜிமெயில், இப்போது ஆப்லைனிலும் கிடைக்கும் வகையில் அமைக்கப்பட உள்ளது. அதாவது இணையதள இணைப்பு இல்லாத இடத்தில் கூட, ஜிமெயிலின் முக்கியமான அம்சங்களை நீங்கள் பயன்படுத்த முடியும்.