நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியத்துடன் வாழ யாருக்குத்தான் ஆசை இல்லை? ஆனால், அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதுதான் பலருக்கும் புரியாத புதிராகிவிடுகிறது. ஆரோக்கிய வாழ்வுக்கு அடிப்படையே உணவுதான். உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொள்வதன் மூலம் உடலில் உள்ள செல்கள் முதிர்வடையும் செயல்பாட்டை ஓரளவுக்குத் தாமதப்படுத்துவதுடன், நோய்நொடி இல்லாமல் வாழவும் முடியும். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உதவும் சில காய்கறி மற்றும் பழங்கள்பற்றி ஊட்டச்சத்து நிபுணர் சோபியா கூறும் தகவல்கள்.

ஆரோக்கிய வாழ்வுக்கு

பாதாம் Thedalweb ஆரோக்கிய வாழ்வுக்கு 6 உணவுகள் (Healthy food for everyday life)
பாதாம்

வைட்டமின் ஈ மற்றும் நல்ல கொழுப்பு நிறைந்தது. இரும்பு, கால்சியம், மக்னீசியம் போன்ற தாது உப்புகள், நார்ச்சத்துகள் ஆகியவையும் இதில் அதிக அளவில் உள்ளன. நாள் ஒன்றுக்கு மூன்று பாதாம் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள நல்ல கொழுப்பின் அளவு சீராக இருக்கும். இதில் உள்ள தாமிரம் மற்றும் மக்னீசியம் உடலுக்கு ஆற்றலை அளிக்கும். பாதாமில் ஃபோலிக் அமிலம் அதிகம் உள்ளது. இது ஆரோக்கியமான செல் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.

ஆப்பிள் Thedalweb ஆரோக்கிய வாழ்வுக்கு 6 உணவுகள் (Healthy food for everyday life)
ஆப்பிள்

அமெரிக்காவில் ஆப்பிள் தொடர்ந்து சாப்பிடும் 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களை கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் தொடர்ந்து கண்காணித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் இந்தப் பெண்களுக்கு இதயம் தொடர்பான நோய்கள் வருவதற்கான வாய்ப்பு பெருமளவு குறைந்ததைக் கண்டறிந்தனர். ஆப்பிள், எல்.டி.எல். என்ற கெட்ட கொழுப்பைக் குறைக்கிறது. இதில் அதிக அளவில் ஆன்டிஆக்சிடன்ட் உள்ளது. இந்த ஆன்டிஆக்சிடன்ட்கள் திசுக்களைப் பாதிக்கும் ரசாயன மூலக்கூறுகளை எதிர்த்துப் போராடி திசுக்கள் சேதம் அடைவதைத் தடுக்கின்றது. இதனால் திசுக்கள் விரைவாக முதிர்வடையும் தன்மை குறைவதுடன், நோய்கள் வராமலும் தடுக்கப்படுகிறது.

எலுமிச்சை Thedalweb ஆரோக்கிய வாழ்வுக்கு 6 உணவுகள் (Healthy food for everyday life)
எலுமிச்சை

தினமும் எலுமிச்சைச் சாறு குடிப்பது என்பது வெறும் தினசரி வைட்டமின் சி தேவையை 100 சதவிகிதம் பூர்த்தி செய்வது மட்டுமல்ல; நல்ல கொழுப்பான ஹெச்.டி.எல். அளவை அதிகரிக்கவும் உதவும். மேலும், இது எலும்பை உறுதிப்படுத்தும். எலுமிச்சையில் உள்ள சிட்ரஸ், திசுக்கள் வீக்கம் அடையும் பிரச்னையைச் சரிசெய்வதுடன் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியையும் தடுக்கும்.

சோயாபீன் Thedalweb ஆரோக்கிய வாழ்வுக்கு 6 உணவுகள் (Healthy food for everyday life)
சோயாபீன்

சோயாபீனை தாவர இறைச்சி என்று சொல்லலாம். அந்த அளவுக்கு அதில் புரதச் சத்து உள்ளது. உடலில் புரதச் சத்து குறையும்போது நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, சோர்வு போன்றவை ஏற்படுகிறது. இந்தப் பிரச்னையைத் தவிர்க்கும் ஆற்றல் சோயாபீனுக்கு உள்ளது. சோயாபீனில் உள்ள ‘லெசிதின்’ (lecithin) என்ற வேதிப் பொருள் கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களை எளிதில் கிரகித்து திசுக்கள் மற்றும் உறுப்புகளை வலுப்படுத்தும். மேலும், இது கொழுப்பு அளவைக் குறைத்து, வளர்ச்சிதை மாற்றப் பணிகளை மேம்படுத்தும். ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது. அதே நேரத்தில் இது நல்ல கொழுப்பை எதுவும் செய்வதில்லை!

பூண்டு Thedalweb ஆரோக்கிய வாழ்வுக்கு 6 உணவுகள் (Healthy food for everyday life)
பூண்டு

நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் ஒரு பொருள். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பெருகச் செய்வதுடன், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியையும் தடுக்கும். இது எல்.டி.எல். எனப்படும் கெட்ட கொழுப்பு அளவைக் குறைத்து இதயத்தைப் பாதுகாக்கும். மேலும் கொழுப்பையும் கட்டுப்படுத்தும். இதில் உள்ள அலிசின் (allicin) உயர் ரத்த அழுத்தத்தைக் குறிப்பிடத் தகுந்த அளவில் குறைக்கிறது. கல்லீரலில் கொழுப்புப் படிவதைத் தடுக்கும் ஆற்றல் பூண்டுக்கு உண்டு.

டார்க் சாக்லேட் Thedalweb ஆரோக்கிய வாழ்வுக்கு 6 உணவுகள் (Healthy food for everyday life)
டார்க் சாக்லேட்

குறைந்த அளவில் டார்க் சாக்லேட் அல்லது கறுப்பு சாக்லேட்டை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை எடுத்துக்கொள்வது உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். ரத்த ஓட்டத்தைச் சீராக்கும், ரத்தம் கட்டிப்போகும் பிரச்னையைத் தவிர்க்கும். ஆன்டிஆக்சிடன்ட் நிறைந்தது. இதில் உள்ள தாமிரம் மற்றும் பொட்டாசியம் தாது உப்புகள் பக்கவாதம், இதயம் சம்பந்தப்பட்ட நோய்களில் இருந்து காக்கும். இரும்புச் சத்து மிகுதியாக உள்ளதால் ரத்தசோகை பிரச்னை உள்ளவர்கள் இதைச் சாப்பிடலாம். மேலும் உயர் ரத்த அழுத்தம், ‘டைப் 2’ சர்க்கரை நோய் வராமல் தடுக்கும் ஆற்றல் டார்க் சாக்லேட்டுக்கு உண்டு.

Leave a Reply