knee ugly 1 Thedalweb how to get rid of dark knees quickly - உங்க முழங்கால் அசிங்கமா கருப்பா இருக்கா?

நம்மில் பலரும் அழகாக இருக்க வேண்டுமென்று அடிக்கடி முகம், கை, கால்களுக்கு பராமரிப்புக்களைக் கொடுப்போம். அழகு பராமரிப்பு என்று வரும் போது அதில் அதிகம் கண்டுக் கொள்ளாத ஒரு பகுதி என்றால் அது முழங்கை மற்றும் முழங்கால் பகுதியாகத் தான் இருக்கும். இந்த பகுதியில் உள்ள சருமம் சுருக்கங்களுடன் இருப்பதால், அங்கு அழுக்குகள் அதிகம் சேர்ந்து, கருமையாக காட்சியளிக்கின்றன. இதனால் சில இளம் பெண்கள் முழங்கால் அளவிலான உடையை உடுத்த ஆசை இருந்தும், கருமையின் காரணமாக அணிந்து கூட பார்க்க முடியாமல் கஷ்டப்படுவார்கள்.

உங்களின் முழங்கால் மற்றும் முழங்கை பகுதிகள் கருமையாக அசிங்கமாக உள்ளதா? அதை எப்படி போக்குவது என்று தெரியாமல் புலம்பிக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் இந்த கட்டுரை உங்களுக்கானது தான். ஏனெனில் கீழே முழங்கை மற்றும் முழங்கால் பகுதியில் உள்ள கருமையைப் போக்கும் சில எளிய இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து பின்பற்றி நன்மைப் பெறுங்கள்.

சில வழிகள்!

bakingsoda Thedalweb how to get rid of dark knees quickly - உங்க முழங்கால் அசிங்கமா கருப்பா இருக்கா?
பேக்கிங் சோடா மற்றும் பால்

ஒரு பௌலில் சிறிது பேக்கிங் சோடாவை எடுத்துக் கொண்டு, அத்துடன் சிறிது பால் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதை கருமையாக இருக்கும் முழங்கை மற்றும் முழங்கை பகுதியில் தடவி சிறிது நேரம் மென்மையாக தேய்த்து, 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் பேக்கிங் சோடாவில் உள்ள எக்ஸ்போலியேட்டிங் பண்புகள், சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கும் மற்றும் பால் வறட்சியைத் தடுக்கும்.

lemon Thedalweb how to get rid of dark knees quickly - உங்க முழங்கால் அசிங்கமா கருப்பா இருக்கா?
எலுமிச்சை

எலுமிச்சை சாற்றினை முழங்கை மற்றும் முழங்கால் பகுதியில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் நீரால் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2-3 முறை செய்து வந்தால், எலுமிச்சையில் உள்ள ப்ளீச்சிங் பண்புகள் கருமையைப் போக வைக்கும்.

curd 1 Thedalweb how to get rid of dark knees quickly - உங்க முழங்கால் அசிங்கமா கருப்பா இருக்கா?
தயிர்

பொதுவாக தயிருக்கு சரும கருமையைப் போக்கும் திறன் உள்ளது. அதோடு இது நல்ல மாய்ஸ்சுரைசரும் கூட. அத்தகைய தயிரை முழங்கை, முழங்கால் பகுதியில் தடவி குறைந்தது 20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ, விரைவில் அப்பகுதியில் உள்ள கருமை நீங்கி வெள்ளையாகும்.

curdhoney Thedalweb how to get rid of dark knees quickly - உங்க முழங்கால் அசிங்கமா கருப்பா இருக்கா?
மஞ்சள், பால் மற்றும் தேன்

மஞ்சளில் உள்ள ஆன்டிசெப்டிக் பண்புகள், பாலில் உள்ள ப்ளீச்சிங் பண்புகள் மற்றும் தேனில் உள்ள மாய்ஸ்சுரைசிங் பண்புகள், சரும கருமையைப் போக்கும். அதற்கு இந்த மூன்றையும் ஒன்றாக கலந்து பேஸ்ட் செய்து, கருமையாக உள்ள பகுதியில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் நீரால் கழுவ வேண்டும்.

oliveoil Thedalweb how to get rid of dark knees quickly - உங்க முழங்கால் அசிங்கமா கருப்பா இருக்கா?
சர்க்கரை மற்றும் ஆலிவ் ஆயில்

சர்க்கரை மற்றும் ஆலிவ் ஆயிலை ஒன்றாக கலந்து, முழங்கை மற்றும் முழங்கால்களில் தடவி 5 நிமிடம் மென்மையாக ஸ்கரப் செய்ய வேண்டும். இதனால் அப்பகுதியில் உள்ள இறந்த செல்கள் நீக்கப்பட்டு, சருமமும் மென்மையாகும்.

cucumber Thedalweb how to get rid of dark knees quickly - உங்க முழங்கால் அசிங்கமா கருப்பா இருக்கா?
வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயின் ஒரு துண்டை, முழங்கை மற்றும் முழங்காலில் சிறிது நேரம் தேய்த்து, 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இதனால் வெள்ளரிக்காயில் உள்ள ப்ளீச்சிங் பண்புகள், கருமையை நீக்கும் மற்றும் அதில் உள்ள நீர்ச்சத்து, சரும வறட்சியைத் தடுக்கும்.

buttermilk Thedalweb how to get rid of dark knees quickly - உங்க முழங்கால் அசிங்கமா கருப்பா இருக்கா?
மோர்

மோரில் உள்ள ப்ளீச்சிங் பண்புகள், சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க உதவுகிறது. மோரை தினமும் கருமையாக இருக்கும் முழங்கை மற்றும் முழங்கால் பகுதியில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி செய்தால், சீக்கிரம் கருமை நீங்கும்.

tomato Thedalweb how to get rid of dark knees quickly - உங்க முழங்கால் அசிங்கமா கருப்பா இருக்கா?
தக்காளி

ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் தக்காளி சாறு, 1 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பொடி சேர்த்து நன்கு பேஸ்ட் போல் தயாரித்து, முழங்கை மற்றும் முழங்காலில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்து, 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

papaya Thedalweb how to get rid of dark knees quickly - உங்க முழங்கால் அசிங்கமா கருப்பா இருக்கா?
பப்பாளி

பப்பாளி முழங்கால் மற்றும் முழங்கை பகுதியில் உள்ள கருமையை போக்கக்கூடியது. அதற்கு பப்பாளி துண்டை மென்மையாக பேஸ்ட் போல் நசுக்கி, முழங்கை மற்றும் முழங்கால் பகுதியில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு மூன்று முறை செய்து வந்தால், எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.

Leave a Reply