ஊரடங்கு காலகட்டம் என்பது அனைவருக்கும் ஒருவித அசௌகரியத்தை உண்டாக்கி வருகிறது. பல அசௌகரியங்கள் இருந்தாலும் இதில் ஒரு சில நன்மைகள் இருக்கத் தான் செய்கிறது. பலரும் தற்போது வீட்டில் இருப்பதால் தங்கள் உடலை நல்ல முறையில் பாதுகாப்பதற்கு இது ஒரு சிறந்த தருணம். சிலர் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாகிக் கொள்கின்றனர், சிலர் நன்றாக ஓய்வெடுக்கின்றனர்.

இப்படி ஒவ்வொருவருக்கும் ஒரு நன்மை இருக்கும் போது ஒரு சிலர் தங்கள் சருமத்தை சிறந்த முறையில் பராமரித்து வருகின்றனர். வீட்டில் இருந்தபடி சருமத்தைப் பாதுகாப்பது எப்படி என்பது குறித்த சில குறிப்புகள் இதோ உங்களுக்காக..

சில வழிகள்!

avoid having fruits Thedalweb Skin care tips during the COVID-19 in tamil - பெருந்தொற்று காலத்தில் அழகை அதிகரிக்க நினைக்கிறீங்களா?
சரியானதை உட்கொள்ளுங்கள்

வீட்டில் இருப்பதால் எந்நேரமும் எதாவது ஒன்றை கொறித்துக் கொண்டு இருக்க வேண்டாம். காலை உணவை மிக அதிகமாக உட்கொள்ளுங்கள். மதிய உணவை ஆரோக்கியமானதாக மாற்றிக் கொள்ளுங்கள், இரவு மிகவும் லேசான உணவை உட்கொள்ளுங்கள். உங்கள் வீட்டு சமயலறையில் இருக்கும் பொருட்களைக் கொண்டு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ளுங்கள். சீரகம், மஞ்சள், இஞ்சி, பூண்டு, கருமிளகு போன்றவற்றை அடிக்கடி உணவில் இணைத்துக் கொள்ளுங்கள். வீட்டில் இருக்கும் போது சமச்சீரான மற்றும் புத்துணர்ச்சி அளிக்கும் உணவுகளை எடுத்துக் கொள்வதால் அது உங்கள் சருமத்தை ஜொலிக்க வைக்கும்.

drawing water Thedalweb Skin care tips during the COVID-19 in tamil - பெருந்தொற்று காலத்தில் அழகை அதிகரிக்க நினைக்கிறீங்களா?
நிறைய தண்ணீர் பருகுங்கள்

உங்கள் சருமம் நீர்ச்சத்துடன் பிரெஷ்ஷாக இருக்க தினமும் 8-10 கிளாஸ் தண்ணீர் பருகுங்கள். இதனால் உங்கள் உடலில் இருக்கும் கழிவுகள் வெளியேறும். வெளியில் செல்லும் காலங்களை விட, வீட்டில் இருக்கும் போது இதனை செய்வது மிகவும் எளிதான காரியம்.

cell bluelight Thedalweb Skin care tips during the COVID-19 in tamil - பெருந்தொற்று காலத்தில் அழகை அதிகரிக்க நினைக்கிறீங்களா?
நீல ஒளியில் இருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்

மொபைல், லேப்டாப் போன்ற உபகரணங்களில் இருந்து நீல ஒளி வெளிப்படும். இது உங்கள் கண்களை பாதிப்பதோடு மட்டுமில்லாமல் உங்கள் சருமத்தையும் பாதிக்கிறது. ஆகவே தொலைக்காட்சி, ஃபோன், லேப்டாப் போன்றவற்றைப் பயன்படுத்தும் போது சன்ஸ்க்ரீன் பயன்படுத்துவதால் உங்கள் சருமம் பாதுகாக்கப்படுகிறது. இதனால் உங்கள் சரும துளைகள் பாதிக்கப்படாமல், வயது முதிர்வு, எண்ணெய் வடிதல் போன்றவை தடுக்கப்படுகின்றன.

womansleep Thedalweb Skin care tips during the COVID-19 in tamil - பெருந்தொற்று காலத்தில் அழகை அதிகரிக்க நினைக்கிறீங்களா?
போதுமான தூக்கம்

வீட்டில் இருப்பதால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், உங்களுக்கு பிடித்தமான திரைப்படங்கள் ஆகியவற்றை நள்ளிரவு வரை விழித்திருந்து பார்த்துக் கொண்டு உங்கள் தூக்க வழக்கத்தை மாற்ற வேண்டாம். சீக்கிரம் தூங்கி, சீக்கிரம் விழிக்க கற்றுக் கொள்ளுங்கள். தினமும் குறைந்தது 8 மணி நேரம் தூங்குவதை உறுதி செய்து கொள்ளுங்கள். இதனால் கருவளையம், கண் வீக்கம், வயது முதிர்விற்கான அறிகுறி போன்றவை தடுக்கப்படும்.

scrubcoffee Thedalweb Skin care tips during the COVID-19 in tamil - பெருந்தொற்று காலத்தில் அழகை அதிகரிக்க நினைக்கிறீங்களா?
சருமத்தை எக்ஸ்போலியேட் செய்யுங்கள்

வீட்டில் தயாரிக்கும் அல்லது கடையில் வாங்கும் ஸ்க்ரப் பயன்படுத்தி வாரத்திற்கு ஒரு முறை உங்கள் சருமத்தில் உள்ள இறந்த அணுக்கள் மற்றும் பாக்டீரியா போன்றவற்றை அகற்றுங்கள். இரவில் உறங்குவதற்கு முன் உங்கள் முகத்தை கழுவுங்கள். தினமும் இரண்டு முறை முகத்தை சுத்தம் செய்து கொள்ளுங்கள். இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள் அகற்றப்பட்டு இரவில் சருமம் புத்துணர்ச்சி அடைய உதவுகிறது.

facebuty Thedalweb Skin care tips during the COVID-19 in tamil - பெருந்தொற்று காலத்தில் அழகை அதிகரிக்க நினைக்கிறீங்களா?
சருமத்தை மாய்ஸ்சரைஸ் செய்யுங்கள்

பெருந்தொற்று காலத்தில் அடிக்கடி கைகளைக் கழுவுவது பரிந்துரைக்கப்படுகிறது. கைகளைக் கழுவுவது மற்றும் கிருமி நீக்கம் செய்வது போன்றவற்றால் சருமம் வறண்டு போகலாம். இதனால் சருமத்தில் விரிசல் அல்லது வறட்சி ஏற்படலாம். ஆகவே அவ்வப்போது சருமம் மற்றும் கைகளை மாஸ்சரைஸ் செய்து கொள்ளுங்கள். கைகளைக் கழுவும் ஒவ்வொரு நேரமும் க்ரீம் பயன்படுத்தி ஈரப்பதத்தை அதிகரித்துக் கொள்ளுங்கள்.

vitaminc Thedalweb Skin care tips during the COVID-19 in tamil - பெருந்தொற்று காலத்தில் அழகை அதிகரிக்க நினைக்கிறீங்களா?
வைட்டமின் சி மற்றும் ஓரல் ஆன்டி-ஆக்சிடன்ட்

சீரம் என்பது நீங்கள் பயன்படுத்தக்கூடிய ஒரு முக்கியமான சரும பராமரிப்பு பொருளாகும். வைட்டமின் சி அதிகம் உள்ள பொருட்களை பயன்படுத்துவதால் ப்ரீ ரேடிக்கல்களால் உண்டாகும் சேதம் தடுக்கப்பட்டு, சருமம் பிரகாசமாகிறது. வைட்டமின் மற்றும் மினரல்கள் அதிகம் உள்ள ஓரல் ஆன்டி-ஆக்சிடன்ட் எடுத்துக் கொள்வதால், சருமம் புத்துணர்ச்சி பெற்று பாதுகாக்கப்படுகிறது.

neem Thedalweb Skin care tips during the COVID-19 in tamil - பெருந்தொற்று காலத்தில் அழகை அதிகரிக்க நினைக்கிறீங்களா?
வேப்பிலை

வேப்பிலை உங்கள் வீட்டில் இருந்தால், அந்த இலையை பரு வந்த இடத்தில் உள்ள தழும்பின் மீது சிறிது நேரம் வைக்க வேண்டும். இப்படி தினமும் பருக்களின் மீது வேப்பிலையை வைத்து வந்தால், அதில் உள்ள மருத்துவ பண்புகளால், தழும்புகள் மறையும்.

sandalwood Thedalweb Skin care tips during the COVID-19 in tamil - பெருந்தொற்று காலத்தில் அழகை அதிகரிக்க நினைக்கிறீங்களா?
சந்தனம்

சந்தன கட்டையை நீரில் சில மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின் அந்த கட்டையை எடுத்துவிட்டு, ஒரு பஞ்சுருண்டை பயன்படுத்தி அந்நீரை தழும்புகள் உள்ள இடத்தில் தடவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு பல முறை என ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால், முகத்தில் உள்ள பரு தழும்புகள் மறைவதைக் காணலாம்.இல்லாவிட்டால், சந்தன கட்டையை ஒரு கல்லில் ரோஸ் வாட்டர் பயன்படுத்தி தேய்த்து பேஸ்ட் தயாரித்துக் கொள்ள வேண்டும். பின் அந்த பேஸ்ட்டை இரவு தூங்கும் முன் தழும்புகளின் மீது தடவி, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் நீரில் கழுவ வேண்டும்.

Leave a Reply