சம்பளம் பெறும் ஊழியர்களுக்கான நம்பகமான முதலீட்டுத் திட்டம் தவிர, பணியாளர் வருங்கால வைப்பு நிதியானது பல நன்மைகளுடன் வருகிறது. எந்தவொரு பிரீமியமும் இல்லாமல் EPFO ​​கணக்கு வைத்திருப்பவர்களுக்குக் கிடைக்கும் காப்பீட்டுத் திட்டத்தின் வசதி அத்தகைய ஒரு நன்மையாகும். இந்த காப்பிட்டுத் திட்டத்தின் படி, EPFO பயனர்கள் ஒவ்வொருவரும் சுமார் 7 லட்சம் மதிப்பிலான தொகையை இலவச நன்மையாகப் பெற முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நன்மையை EPFO பயனர்கள் எப்படிப் பெறலாம்?

EPFO பயனர்களுக்கு 7 லட்சம் மதிப்பிலான காப்பிட்டு தொகை

யாருக்கெல்லாம் இந்த நன்மை பொருந்தும், இந்த 7 லட்சம் மதிப்பிலான காப்பிட்டு தொகையைப் பெறுவதற்கு தனியாக பயனர்கள் விண்ணப்பிக்க வேண்டுமா அல்லது எப்படி இந்த திட்டத்திற்கு விண்ணப்பிப்பது போன்ற உங்களுடைய அனைத்து கேள்விகளுக்கும் இந்த பதிவில் முழுமையாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. EPFO கணக்கு வைத்துள்ளவர்கள் அவர்களின் கணக்கில் எவ்வளவு இருப்புத் தொகை இருக்கிறது என்பதை ஆன்லைனில் எப்படி சோதனை செய்து பார்ப்பது போன்ற தகவலையும் அறிந்துகொள்ளுங்கள்.

உங்கள் இருப்புத்தொகையை ஆன்லைனில் செக் செய்ய முடியுமா?

அனைத்து அலுவலகத்திலும் பிஎப் இருப்புத்தொகைப் பிடிக்கப்படுகிறது. இவை ஒவ்வொரு சம்பளத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை உங்கள் அலுவலகம் உங்கள் நலத்திட்டத்திற்காக ஒதிக்கிவைக்கும். வருங்கால வைப்பு நிதி அல்லது பிஎப் கணக்குகளே பெரும்பாலானவர்களுடைய பணி ஓய்வுக் காலத்தின் பிந்தைய காலத்திற்கான முக்கிய சேமிப்பாக விளங்குகிறது. பிஎப் பொருத்தமாட்டில் உங்கள் இருப்புத்தொகையை ஆன்லைனில் மிக எளிமையாக செக் செய்யமுடியும்.

பிஎப் கணக்கின் தகவலை எப்படி சரி பார்ப்பது?

மேலும் உங்கள் பிஎப் கணக்கில் குறிப்பாக எவ்வளவு சேமிப்பு இருப்புத்தொகை இருக்கிறது போன்றவற்றை எளிமையாக ஆன்லைனில் தற்போது எளிமையாக அறியமுடியும். முதலில் பிஎப் கணக்கு எண் சரியாகக் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். உங்கள் பிஎப் கணக்கைப் பற்றிய தகவலைப் பொறுத்தவரை இது மிக முக்கியமான தகவல் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

வழிமுறை #01

ஆன்லைன் சென்று http://www.epfindia.com/site_en/KYEPFB.php இந்த வலைப்பக்கத்தின் கீழ் நுழையவேண்டும். உங்கள் பிஎப் கணக்கு பராமரிக்கப்படும் மாநில அலுவலகத்தை தேர்ந்தெடுக்கவும்.

இதை அப்படியே செய்யுங்கள்

மாநிலத்தைத் தேர்ந்தெடுத்தவுடன், அந்த மாநிலத்துடன் தொடர்புடைய நகர அலுவலகங்களின் பட்டியல் கீழே பட்டியலிடப்படும்.

பட்டியலில் இருந்து உங்கள் நகர குறிப்பிட்ட பிஎப் அலுவலகம் தேர்வு செய்யவேண்டும்.

எடுத்துக்காட்டாக, உங்கள் மாநில அலுவலகம் கர்நாடகா மற்றும் உள்ளூர் அலுவலகம் பெங்களூரில் இருந்தால், பெங்களூரை நகரமாகத் தேர்வு செய்யவேண்டும்.

தேர்வுசெய்தபின் அவற்றில் பிஎப் கணக்குஎண், பெயர்,மொபைல்எண் அதில் கொடுக்கப்பட்ட அனைத்து தகவல்களையும் விண்ணப்பங்களில் பூர்த்திசெய்யவேண்டும்.

அனைத்து தகவல்களையும் சமர்ப்பித்தபின் உங்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பப்படும் மொபைல் எண் மூலம் அனைத்து தகவல்களையும் அறியமுடியும்.

யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் (UAN) என்றால் என்ன?

யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் (UAN ) ஊழியர் சேமலாப நிதி அமைப்பினால் 2014ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. யுஏஎன் (UAN)இணையதளத்தில் உங்கள் பிஎப் எண்ணைப் பயன்படுத்திப் பதிவு செய்து யுஏஎன் எண்ணை உருவாக்க வேண்டும். பின்னர் அதைப் பயன்படுத்தி உள்நுழைந்து சந்தாதார்கள் பிஎப் பங்களிப்பு மற்றும் நடப்பு இருப்புத் தொகை போன்றவற்றைக் காணலாம். இந்த வழிமுறையைப் பின்பற்றி உங்களின் இருப்புத் தொகையைச் சரி பார்க்கலாம்.

ரூ. 7 லட்சம் வரை உறுதிசெய்யப்பட்ட ஆயுள் காப்பீட்டு

ஊழியர்களின் டெபாசிட் இணைக்கப்பட்ட காப்பீடு அல்லது EDLI திட்டம், 1976ன் கீழ், வருங்கால வைப்பு நிதி கணக்கு வைத்திருப்பவர்கள் எந்த பிரீமியமும் செலுத்தாமல் ரூ. 7 லட்சம் வரை உறுதிசெய்யப்பட்ட ஆயுள் காப்பீட்டு நன்மைகளுக்குத் தகுதியுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பால் (EPFO) இயக்கப்படும் இந்த வசதி ஒவ்வொரு PF கணக்கு வைத்திருப்பவருக்கும் கிடைக்கும் என்பது கவனிக்கத்தக்கது. உங்கள் பெயரில் PF கணக்கு இருக்கிறது என்றால், நிச்சயமாக நீங்களும் இந்த காப்பீடு தொகைக்கு தகுதியானவர் தான்.

இன்னும் பலவிதமான பலன்கள் கிடைக்கும் சலுகைகள்

இடிஎல்ஐ திட்டத்தின் கீழ் உள்ள வசதிகள் காப்பீட்டுப் பலன்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படாமல், இன்னும் பலவிதமான பலன்களிலும் பரவி கிடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. EPFO சமீபத்தில் தனது டிவிட்டர் பக்கத்தில் உள்ள அதன் டைம்லைனில் EDLI இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டத்தின் நன்மைகளை எடுத்துக்காட்டும் ஒரு புதிய வீடியோவைப் பகிர்ந்துள்ளது. இதன் மூலம் EPFO பயனர்களுக்கு கிடைக்கும் 7 லட்சம் மதிப்பிலான காப்பிட்டு திட்டத்தின் நன்மைகள் பற்றி தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

அதிகபட்ச உறுதியளிக்கப்பட்ட காப்பீட்டு நன்மைகள்

சரி, யாருக்கெல்லாம் இந்த காப்பீடு தொகை கிடைக்கும் என்பதை தெரிந்துகொண்டோம், இப்போது எப்படியான சூழ்நிலையின் கீழ் இந்த உறுதியளிக்கப்பட்ட காப்பீட்டு தொகை வழங்கப்படும் என்று பார்க்கலாம். சேவையில் இருக்கும் இபிஎப் உறுப்பினர் மரணம் அடைந்தால், பிஎஃப் கணக்கு வைத்திருப்பவரின் சட்டப்பூர்வமா வாரிசு அல்லது நாமினிக்கு ரூ.7 லட்சம் வரை பலன்கள் வழங்கப்படும். ஏப்ரல் 2021 முதல் பலன்களுக்கான வரம்பு ரூ.6 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்ச உறுதியான பலன்கள்

இடிஎல்ஐ திட்டம் 1976 இன் கீழ் குறைந்தபட்ச உறுதி செய்யப்பட்ட பலன் ரூ. 2.5 லட்சமாகும். 7 லட்சம் வரை இலவச பலன்கள் கிடைக்கிறது. காப்பீட்டுத் திட்டத்தின் பலன்களைப் பெற பணியாளர்கள் எந்தப் பிரீமியமும் செலுத்த வேண்டியதில்லை மற்றும் EPF/PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இது முற்றிலும் இலவசம். இந்தக் காப்பீட்டுத் திட்டத்திற்கான பிரீமியம் நிறுவனத்தின் முதலாளியால் செலுத்தப்படுகிறது மற்றும் மாத ஊதியத்தில் 0.50 சதவிகிதம் என்ற விதத்தில் ரூ.15,000 ஆக உள்ளது.

இந்த காப்பீடு யாருக்கெல்லாம் கிடைக்கும்? PF கணக்கு வைத்திருப்பவர் இதை எப்படிப் பதிவு செய்வது?

EPFO உறுப்பினர்கள் கூடுதலாக இந்தத் திட்டத்தில் எதையும் பதிவு செய்ய வேண்டியதில்லை. நீங்கள் EPFO ​​உறுப்பினர்களாகவோ அல்லது சந்தாதாரர்களாகவோ இருக்கும் பட்சத்தில் EDLI திட்டப் பலன்களுக்கு உங்களுக்கு முழு உரிமை உண்டு. இது ஒவ்வொரு PF உறுப்பினருக்கும் தானாகப் பதிவு செய்யப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக நீங்கள் தனியாகப் பதிவென்று எதுவும் செய்யத் தேவையில்லை.

னம் பணம் என்ன முறையில் வழங்கப்படும்?

இது நேரடி வங்கி பரிமாற்றம் மூலம் அதன் பயனர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்படும். EDLI திட்டப் பலன்கள் நாமினி அல்லது பணியாளரின் சட்டப்பூர்வமான வாரிசு வங்கிக் கணக்கில் நேரடியாக இணைக்கப்பட்டு, அதில் வழங்கப்படும். EPf கணக்கு வைத்திருப்பவர்கள் இறந்தால், பலன்கள் நேரடியாக இந்த வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். எவ்வாறாயினும், திட்டத்தின் நாமினி அல்லது சட்டப்பூர்வமா வாரிசுகளின் பலன்களைப் பெறுவதற்கு 51F படிவத்தைப் பூர்த்தி செய்து EPFO ​​க்கு சமர்ப்பிக்க வேண்டும். திட்டத்தைப் பற்றிய கூடுதல் தகவலுக்கு, EPFO ​​இணையதளத்தைப் பார்க்கவும்