கோடிக்கணக்கான விண்மீன்களின் தொகுதியே அண்டம்! (GALAXY) கோடிக்கணக்கான அண்டங்களின் தொகுதியே பேரண்டம்! (UNIVERSE) பேரண்டத்தில் காணப்படும் பல்வேறு அண்டங்களில் ஒன்றுதான்……. பால்வெளி மண்டலம்!

solarsystem1 Thedalweb சூரியக் குடும்பம் (Solar System)

பால் வெளி மண்டலம்! (MILKY WAY)

milkyway Thedalweb சூரியக் குடும்பம் (Solar System)

இரவு வானில் ஒளிப்புள்ளிகள் போலப் புலப்படுகிறதில்லையா? அந்த விண்மீன்கள் எல்லாம் தொலைவில் உள்ள சூரியன்கள்தான்! ஆமாங்க!….,சூரியன்கள்! இப்போ பார்க்கிறோமே அதே மாதிரி நிறைய்ய்ய்ய சூரியன்கள் வான வெளியில் இருக்கு! அது மட்டுமில்லே! அவற்றுள் பல விண்மீன்கள் சூரியனை விட பல மடங்கு பெரியது! பல மடங்கு என்றால்….? நூறு அல்லது ஆயிரம் மடங்கு!…ரொம்ப தூரத்திலே இருக்கறதாலே நம்ம கண்களுக்கு வெறும் புள்ளி மாதிரித் தெரிகின்றன! சூரியன் உட்பட நம்ம கண்களுக்குத் தெரியும் அனைத்துமே பால்வெளி மண்டலத்தைச் சார்ந்தவை! பால் வெளியும் மிக அடர்த்தியான விண்மீன்களின் தொகுதிதான்!

சூரிய மண்டலம்! (SOLAR SYSTEM)

solarsystem 1 Thedalweb சூரியக் குடும்பம் (Solar System)

நமது சூரிய மண்டலம் பால்வெளி மையத்திலிருந்து சுமார் 27,000 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளது! (ஒரு ஒளியாண்டு என்பது….ஒளி ஓரு ஆண்டில் கடக்கும் தூரமாகும். உதாரணமாக…..ஒளி ஒரு வினாடியில் 2,99,792 கி.மீ தூரம் பயணிக்கும்! இதனை 60ஆல் பெருக்கி வரும் தொகையை மறுபடியும் 60ஆல் பெருக்கிக் கிடைக்கும் தொகையை 24ஆல் பெருக்கி, கிடைக்கும் தொகையை 365ஆல் பெருக்கிக் கிடைக்கும் தொகையாகும்! ((ஸ்ஸ்ஸ்ஸ்….ஹப்பாடா! வேண்டாம் விடையைக் கூறி விடுகிறேன்! தோராயமாக 1,000,000,000,000,000,000. வருடங்கள்!) சூரிய மண்டலம் சும்மா இருக்கவில்லை! சூரியன் தன் குடும்பத்துடன் வினாடிக்கு 220 கி.மீ. வேகத்தில் பால்வெளி மண்டலத்தைச் சுற்றி வருகிறது! சூரிய மண்டலம் ஒருமுறை பால் வெளி மண்டத்தைச் சுற்றி வரும் காலம் 22.5 கோடி வருடங்கள்! (யம்மாடியோவ்!)

சூரியன் (SUN)

sun Thedalweb சூரியக் குடும்பம் (Solar System)

சூரியக் குடும்பத்தின் நடுப்பகுதியில் உள்ளது! இது ஒரு மிகப்பெரிய வெப்பவாயுப்பந்து! இதன் ஈர்ப்பு சக்தியே சூரியக் குடும்பத்தைப் பிணைத்து வைத்துள்ளது! சூரியக் குடும்பத்தின் ஒளி மற்றும் வெப்பத்தின் அடிப்படை ஆதாரம் சூரியன்தான்! சூரியக் குடும்பத்தில் தானே ஒளிரும் ஒரே வான் பொருள் சூரியன் மட்டுமே! சூரியனின் நிறையானது புவியின் நிறையைவிட 33,03,000 மடங்கு ஆகும்! சூரியனின் மேற்பரப்பு வெப்பம் 6000டிகிரி செல்ஷியஸ்! நடுப்பகுதி வெப்பம் 15,000,000டிகிரி செல்ஷியஸ் ஆகும்! சூரியன் ஹைட்ரஜனும், ஹீலியமும் கலந்த ஒரு வாயுக் கலவையாகும். (92% ஹைட்ரஜன், 7.8%ஹீலியம், 0.2%இதர வாயுக்கள்! சூரியக் குடும்பத்தில் மொத்தம் எட்டு கோள்கள்! அவை புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி யூரேனஸ், மற்றும் நெப்டியூன். சூரியக் குடும்பத்தின் கோள்களை, திடக்கோள்கள், வாயுக் கோள்கள் என இருவகயாகப் பிரிக்கலாம்! புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், ஆகிய நான்கும் திடக் கோள்கள்! வியாழன், சனி, யுரேனஸ் நெப்டியூன் ஆகிய நான்கும் வாயுக்கோள்கள் ஆகும். வாயுக் கோள்கள் என்பது ஹைடரஜன், ஹீலியம் மற்றும் சிறு துகள்கள் கொண்டதாகும்!

புதன் (MERCURY)

Mercury1 Thedalweb சூரியக் குடும்பம் (Solar System)

சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோள் புதன் ஆகும்! இது மிக விரைவாக சூரியனைச் சுற்றும் கோளும் கூட! (பின்னே! கிட்டே இருக்கும் கோள் இல்லையா?) இதன் விட்டம் 4,849.6 கி.மீ ஆகும். கலவை ஹீலியம் 98% ஹைட்ரஜன் 2%! சூரியனிலிருந்து சராசரி 57.6 மில்லியன் கிலோ மீட்டர் தூரத்தில் புதன் உள்ளது! சூரியனை சுற்ற ஆகும் காலம் 87.97 நாட்கள்! சராசரி வெப்ப நிலை பகலில் 350டிகிரி செல்ஷியஸ் வெப்பமும் இரவில் 170டிகிரி செல்ஷியஸ் வெப்பமும் நிலவுகிறது! இதற்குத் துணைக்கோள் எதுவும் கிடையாது!

வெள்ளி (VENUS)

venus Thedalweb சூரியக் குடும்பம் (Solar System)

இது சூரியனிலிருந்து இரண்டாவது கோள் ஆகும்! சூரிய குடும்பத்தின் மி வெப்பமான கோள் வெள்ளியே! வெப்பம் 480டிகிரி செல்ஷியஸ்! இதுவே “விடிவெள்ளி”…. “மாலை நட்சத்திரம்’ என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. இன்னொரு அதிசயமான செய்தி! சூரியக் குடும்பத்தில் கிழக்கிலிருந்து,மேற்காக சுழலும் ஒரே திடக்கோள் இதுவே! இதன் விட்டம் 12,032 கி.மீ. ஆகும். இதன் கலவை, கார்பன் டை ஆக்ûஸடு 96.5%, நைட்ரஜன் 3.5%. சூரியனிலிருந்து வெள்ளி சுமார் 107.5 மில்லியன் கி.மீ தூரம் உள்ளது. இது சூரியனைச் சுற்றி வருவதற்கு 224.7 நாட்கள் ஆகிறது! தன்னைத்தானே சுற்றுவதற்கு ஆகும் காலம் 246.16 நாட்கள்! சராசரி வெப்பநிலை 456.85டிகிரி செல்ஷியஸ்.

பூமி (EARTH)

earth Thedalweb சூரியக் குடும்பம் (Solar System)

சூரியனிடமிருந்து மூன்றாவது இடத்தில் உள்ளது நம் வாழும் பூமி. உயிர் வாழ்வதற்கு ஏற்ற தட்ப வெப்ப நிலை உள்ளதால் இது உயிர்க்கோளம் என்று அழைக்கப்படுகிறது. இதன் விட்டம் 12,732.2 கி.மீ. ஆகும். கலவை ஆக்ஸிஜன் 47%…, சிலிக்கான்27%…அலுமினியம் 8%…, இரும்பு 5%…,கால்ஷியம் 4%…, மெக்னீசியம், பொட்டாசியம், சோடியம் மூன்றும் சேர்ந்து 2%. சூரியனிலிருந்து சராசரி தூரம் 149.8மிலியன் கி.மீ. சூரியனைச் சுற்றிவர ஆகும் காலம் 365.30நாட்கள்! தன்னைத் தானே சுற்ற ஆகும் காலம் 24மணி. சராசரி வெப்பநிலை 15 டிகிரி செல்ஷியஸ்! துணைக்கோள் ஒன்று! (கரெக்ட்! சந்திரன்தான்!)

செவ்வாய் (MARS)

mars Thedalweb சூரியக் குடும்பம் (Solar System)

இது சூரியனிலிருந்து இரண்டாவது கோள் ஆகும்! சூரிய குடும்பத்தின் மி வெப்பமான கோள் வெள்ளியே! வெப்பம் 480டிகிரி செல்ஷியஸ்! இதுவே “விடிவெள்ளி”…. “மாலை நட்சத்திரம்’ என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. இன்னொரு அதிசயமான செய்தி! சூரியக் குடும்பத்தில் கிழக்கிலிருந்து,மேற்காக சுழலும் ஒரே திடக்கோள் இதுவே! இதன் விட்டம் 12,032 கி.மீ. ஆகும். இதன் கலவை, கார்பன் டை ஆக்ûஸடு 96.5%, நைட்ரஜன் 3.5%. சூரியனிலிருந்து வெள்ளி சுமார் 107.5 மில்லியன் கி.மீ தூரம் உள்ளது. இது சூரியனைச் சுற்றி வருவதற்கு 224.7 நாட்கள் ஆகிறது! தன்னைத்தானே சுற்றுவதற்கு ஆகும் காலம் 246.16 நாட்கள்! சராசரி வெப்பநிலை 456.85டிகிரி செல்ஷியஸ்.

வியாழன் (JUPITER)

jupiter Thedalweb சூரியக் குடும்பம் (Solar System)

அளவில் மிகப் பெரிய கோள்! 2டிகிரி சாய்வு மட்டுமே உள்ளதால் இதில் பருவகாலங்கள் இல்லை. விட்டம் 1,41,968 கி.மீ. கலவை ஹைட்ரஜன் 90%, ஹீலியம் 10%, சூரியனிலிருந்து சராசரி தூரம் 772.8 மில்லியன் கி.மீ. சூரியனைச் சுற்ற ஆகும் காலம் 11.86 வருடங்கள்! தன்னைத்தானே சுற்ற ஆகும் காலம் 9 மணி 50 நிமிடம். சராசரி வெப்பநிலை 19.85டிகிரி செல்ஷியஸ். துணைக்கோள்கள் 67!

சனி (SATURN)

saturn Thedalweb சூரியக் குடும்பம் (Solar System)

ஆறாவது இடத்தில் உள்ள இது சூரிய மண்டலத்தின் இரண்டாவது பெரிய கோள்! இதன் விட்டம் 1,19,295 கி.மீ. கலவை ஹைட்ரஜன் 90%, ஹீலியம் 3%. சூரியனிலிருந்து சராசரி தூரம் 1,417,6 மில்லியன் கி.மீ. சூரியனைச் சுற்ற ஆகும் காலம் 29.46 வருடங்கள்! தன்னைத்தானே சுற்ற ஆகும் காலம் 10.34 மணி. சராசரி வெப்பநிலை 139.5 டிகிரி செல்ஷியஸ். துணைக்கோள்கள் 60!

யுரேனஸ் (URANUS)

uranus Thedalweb சூரியக் குடும்பம் (Solar System)

சூரியனிலிருந்து ஏழாவது கோள் இது. 98 டிகிரி சாய்ந்துள்ளது. இதன் விட்டம் 52.096 கி.மீ. சூரியனிலிருந்து சராசரி தூரம் 2,8,852 மில்லியன் கி.மீ. சூரியனைச் சுற்ற ஆகும் காலம் 84.01 வருடங்கள். தன்னைத்தானே சுற்ற ஆகும் காலம் 17.17 மணி. சராசரி வெப்ப நிலை 197.15 டிகிரி செல்ஷியஸ். துணைக்கோள் 27

நெப்டியூன் (NEPTUNE)

neptune Thedalweb சூரியக் குடும்பம் (Solar System)

சூரியனிலிருந்து எட்டாவது கோள். இதன் விட்டம் 49,000கி.மீ. கலவை ஹைட்ரஜன் 80%…, ஹீலியம் 19% சூரியனிலிருந்து சராசரி தூரம் 4,497 மில்லியன் கி.மீ. சூரியனைச் சுற்றி வர ஆகும் காலம் 164.8 வருடங்கள்! தன்னைத் தானே சுற்ற ஆகும் காலம் 16.7 மணி. சராசரி வெப்ப நிலை 200.5 செல்ஷியஸ். துணைக்கோள் 13.

சந்திரன் (MOON)

moon Thedalweb சூரியக் குடும்பம் (Solar System)

இது பூமியின் துணைக்கோள் என்பது அனைவரும் அறிந்ததே! இது சூரியனை நேரடியாகச் சுற்றுவதில்லை. மாறாக பூமியைத்தான் சுற்றி வருகிறது. பூமியிலிருந்து சராசரியாக 3,84,401 கி.மீ தொலைவில் பூமியைச் சுற்றி வருகிறது. சந்திரன், பூமியைச் சுற்றி வர ஏறத்தாழ 27.3 நாட்களும், சந்திரன் தன்னைத்தானே சுற்றிக்கொள்ள ஏறத்தாழ 27.3 நாட்களும் எடுத்தக்கொள்கிறது. எனவேதான் பூமியிலிருந்து பார்த்தால் சந்திரனின் ஒரு பக்கம் மட்டுமே நமக்குத் தெரிகிறது. பகலில் 100 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலையும் இரவு 173 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலையும் நிலவுகிறது.
பூமியில் உள்ளது போன்ற வளிமண்டலம் காற்று சந்திரனில் இல்லை. சந்திரனில் ஈரப்பசை உள்ளது. ஆனால் திரவ நிலையில் நீர் இல்லை. பூமியில் உள்ளது போல் மலைகள், சமவெளிகள், பள்ளத்தாக்குகள் எனப்பல நிலைத்தோற்றங்கள் சந்திரனில் உள்ளன. சந்திரன், பூமியைச் சுற்றி வரும்போது அதன் இருள் பகுதி பூமியை நோக்கி அமைவதே அமாவாசை. அமாவாசையன்று பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சந்திரன் வருகிறது. சந்திரனின் ஒளி படர்ந்த பகுதி முழுமையாக பூமியை நோக்கி அமைவதே பெளர்ணமி! சூரியனுக்கும் நிலவுக்கும் இடையில் பூமி வருவதே பெளர்ணமி.

குள்ளக்கோள்கள் (DWARF PLANETS)

புளுட்டோ, ரெஸ், ஏரிஸ், மேக்மேக், ஹலமீயே போன்றவை குள்ளக் கோள்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. சந்திரனைவிட அளவில் மிகச் சிறிய இவையும் சூரியனைச் சுற்றி வருகின்றன.

குறுங்கோள்கள் / எரிகற்கள் (ASTEROIDS)

asteroids Thedalweb சூரியக் குடும்பம் (Solar System)

செவ்வாய்க்கும், வியாழன் கோளுக்கும் இடையே உள்ள சிறுசிறு கற்கள் பெரும் பாறைகள் ஆகியவற்றின் தொகுதியே இந்தக் குறுங்கோள்கள். இவற்றில் சிலவற்றிற்கு இந்தியப் பெயர்களும் சூட்டப்பட்டுள்ளது. இந்திய வானவியல் அறிஞர் வைனுபாப்பு, அணுசக்தித் துறையின் தந்தை சாராபாய், கணித மேதை இராமானுஜம் ஆகியோரின் பெயர்களில் குறுங்கோள்கள் உள்ளன. பாறைத் துண்டுகள் புவி ஈர்ப்பு மையத்திற்குள் வரும்போது ஏற்படும் உராய்வின் காரணமாக எரிகிறது! இவ்வாறு எரிந்து விழும் துண்டுகளே எரிகற்கள் (ASTEROIDS) எனப்படுகிறது. எரிகற்கள் வேகமாக பூமியை நோக்கி வருவதால் முழுமையாக எரியாமல் புவியின் மேற்பரப்பில் விழுகின்றன. இது வீழ்கற்கள் எனப்படும்.

மேலும் சில தகவல்கள்!

நட்சத்திரங்கள் (STARS)

தானாக ஒளிரும் தன்மை கொண்டவையே நட்சத்திரங்கள் எனப்படுகின்றன.

எரி நட்சத்திரம் (METEOROIDS)

வானில் வால் நட்சத்திரங்கள் விட்டுச் சென்ற துகள்கள் பூமியின் வளி மண்டலத்தின் மீது உராய்வதால் ஏற்படும் ஒளிக்கீற்றே எரிநட்சத்திரம்.

வால் நட்சத்திரம் (COMET)

வால் நட்சத்திரம் என்பது ஒரு விண்மீன் அன்று! பனி தூசு முதலிய பொருட்களால் ஆன பனிப்பாறையே. சூரியனுக்கு அருகே வரும்போது பனி உருகி ஆவியாவதாலும், சூரிய ஒளியை பிரதிபலிப்பதாலும் வால் போல் நீண்டு தோன்றுகிறது. வால் நட்சத்திரத்தின் வால் எப்போதும் சூரியனுக்கு எதிர் திசையிலேயே அமையும்!
பேரண்டத்தின் புதிர்கள் எண்ணற்றவை! அவைகள் யாவற்றிற்கும் விடைகாண இந்த மனிதப் பிறவி போதாது! நமக்குத் தெரிந்த தகவல்கள் சொற்பமே! எல்லையற்ற பிரபஞ்சத்தின் அமைப்பு நம்மை திகைக்க வைத்துக் கொண்டேதான் இருக்கிறது.

Leave a Reply