எட்டு வடிவ நடைப்பயிற்சி தினமும் 15 முதல் 30 நிமிடம் வரை ஒன்று அல்லது இருவேளை செய்தால் போதுமானது.

காலை நேரத்திலோ அல்லது நேரம் கிடைக்கும் போதோ, ஒரு அறையிலோ அல்லது வெட்டவெளியிலோ, கிழக்கு மேற்காக கோடு வரைந்து அதேபோல் 10 அடி விட்டு கோடுகளை வரைந்து அதற்குள் எட்டு வடிவில் நடைப்பயிற்சி செய்யவேண்டும்.

இப்பயிற்சியை தெற்கிலிருந்து வடக்கு நோக்கி அல்லது வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செய்ய வேண்டும். 15 வது நிமிட முடிவில் இருநாசித்துவாரங்களின் மூலம் உள்ளிழுக்கப்பட்ட முழு மூச்சுக்காற்றையும் உணரலாம்.

பின்னர் நடைப்பயிற்சியானது மேலும் 15 நிமிட நேரம் தொடர வேண்டும். இதற்கிடைப்பட்ட நேரத்தில் மார்புச்சளி தானாகவே வெளியே காரி உமிழ்வதாலோ அல்லது கரைந்து இறங்குவதை உணரலாம். 

நடையிலும் ஒரு பயிற்சி

உடலை வருத்தி செய்தால் தான் பயிற்சியா நடைபயிற்சியே போதும் என்ற கருத்து பொதுவானதாக இருக்கிறது. இது ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையிலும் உண்டு. ஆனால் பயிற்சியில் நடைபயிற்சியிலும் ஒரு பயிற்சி உண்டு என்பதை சித்தர் காலத்திலேயே கடைப்பிடித்திருக்கிறார்கள்.

பாரம்பரியமாக நமது முன்னோர்கள் கண்டறிந்த பயிற்சிகளெல்லாம் மேலை நாடுகளில் கடைப்பிடிக்கப்பட்டு அதன் ஆரோக்கியம் வெளிக்கொணரப்பட்டு மீண்டும் பொலிவு மாறாமல் புதுமையாக வருவதைப் போன்றுதான் இந்த 8 வடிவ நடைபயிற்சியும் இன்பினிட்டி வாக்கிங் என்ற பெயரில் நம் நாட்டுக்கே திரும்பி இருக்கிறது.

உடற்பயிற்சி என்பது உடலுக்கு மட்டும் பயிற்சி தரக்கூடியதாக இருக்க கூடாது. மனதுக்கும் பயிற்சி தரக்கூடியதாக இருக்க வேண்டும். அப்போதுதான் அந்தப் பயிற்சிகளின் மூலம் கிடைக்கும் ஆரோக்கியமும் பலனளிக்கும் என்பதை உணர்ந்தவர் கள் நம் முன்னோர்கள். அந்த வகையில் இந்த எட்டுவடிவ நடைபயிற்சியை வர்ம நடைபாதை பயிற்சி என்று அழைக்கலாம்.

நமது உடலில் இருக்கும் வர்மபுள்ளிகள் அதிகளவு உள்ளங்காலில் நிறைந்திருக்கிறது. இந்த 8 வடிவ நடைபயிற்சியை வெற்று காலில் செய்யும் போது கூழாங்கற்கள் மீது நடக்கும் போது அந்தப் புள்ளிகள் தூண்டப்பட்டு உடலில் உள்ள வர்மப் புள்ளிகளின் ஆற்றலை அதிகரிக்கிறது.

8 வடிவ பயிற்சி தொடக்கம்

மண் தரை, சிமெண்ட், சாலை என்று எங்கு வேண்டுமானாலும் பயிற்சி பெறலாம். ஆனால் கூழாங்கற்களைப் பதித்து அதில் நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.மேலும் வெளியில் சென்று பயிற்சி பெற வேண்டியதில்லை. நமது வீட்டு மொட்டை மாடி, தோட்டத்திலும் அருகில் இருக்கும் மைதானத்திலும் கூட இதைச் செய்யலாம்.

8 வடிவம் ஏன் சிறப்பு


வடிவத்தில் 8 என்பது முடிவில்லாதது. அதனால் தான் எட்டு போடுகிறவனுக்கு நோய் எட்டிப் போகும் என்னும் பழமொழியும், எட்டுப்போடு எல்லாம் பறந்தோடும் என்று சித்தர்களும் கூறுகிறார்கள்.

8 வடிவம் இப்படித்தான் போடணும்


வீட்டின் மொட்டை மாடியாக இருந்தாலும் வராண்டாவாக இருந்தாலும் தோட்டம் இருக்கும் பகுதியாக இருந்தாலும் 10 அடி இடத்தில் வடக்கு தெற்காக 8 என்னும் வடிவத்தை சாக்பீஸால் வரைந்து கொள்ளுங்கள். அதாவது நீளவட்டம் வடக்கில் இருந்து தெற்கு நோக்கியும் கிழக்கில் இருந்து மேற்காகவும் இருக்க வேண்டும்.

6க்கு 12 அடி அல்லது 8 க்கு 16 அடி அளவில் இருந்தாலும் கூட போதும் என்கிறார்கள் பயிற்சியாளர்கள்.குறிப்பு அகலம் 6 அடி யாக இருப்பது மிகவும் நல்லது என்கிறார்கள் பயிற்சியாளர்கள். இவை குறையும் போது குறைந்த வட்டப்பாதையில் நடக் கும் போது சிலருக்கு தலைச்சுற்றல் உபாதை ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு என்பதே காரணம்.

8 வடிவத்தில் இப்படித்தான் நடக்கணும்


எட்டு வடிவ கோட்டின் மீது நின்று பயிற்சியைத் தொடங்குங்கள். முதலில் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி 15 நிமிட நேரம் எட்டு வடிவ நடைபயிற்சியைச் செய்யுங்கள்.

8 வடிவ நடை என்பது

இந்த பயிற்சி 15 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் வரை செய்தாலே போதும் வேகமாக நடக்க வேண்டியதில்லை. மிதமான நடையே போதுமானது. முதல் 15 நிமிடங்கள் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி நடக்க வேண்டும். அடுத்த 15 நிமிடங்கள் தெற்கில் இருந்து வடக்கு நோக்கி நடக்க வேண்டும்.

தினமும் காலையில் ஒரு தம்ளர் தண்ணீர் குடித்து விட்டு பயிற்சி செய்யலாம். இரவு நேரத்தில் உணவை முடித்துவிட்டு 15 நிமிடங்கள் கழித்து பயிற்சி செய்யலாம். இவ்வாறு தினமும் இரண்டு வேளை இந்த பயிற்சியைச் செய்ய வேண்டும்.

8 வடிவ நடைபயிற்சியின் பலன்கள்

முதுமையை தள்ளி இளமையைத் தக்க வைப்பதில் சிறந்த பயிற்சி இது என்பதால் உடலை ஃபிட்டாக வைக்க விரும்புவர்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டிய பயிற்சி இது என்று சொல்லலாம்.

ஆரோக்கிய பலன்கள்

இந்தப் பயிற்சியின் முதல் நாளிலேயே இதன் பலனை உணரலாம். நாசிகளின் முழுமையான சுவாசத்தால் சளி பிரச்சனை இருப்பவர்கள் இந்த பயிற்சியின் முதல் நாளிலேயே குறைந்து வருவதை உணரலாம். அதுமட்டுமல்ல சைனஸ் பிரச்சனைக ளும் நீங்குகிறது.

மூக்கடைப்பு, மூச்சுவிடுவதில் சிரமம் இருப்பவர்கள் பயன்பெறலாம். ஆக்ஸிஜன் குறையின்றி உடலுக்கு செல்வதால் நுரை யீரலின் செயல்பாடு நன்றாக இருக்கும்.

இந்த நடப்பாதையால் கண்பார்வை கூர்மையடைகிறது. மைனஸ், ப்ளஸ் குறைபாட்டை மேலும் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்கிறது.

நடைபயிற்சியால் குறையும் இரத்த அழுத்தத்தை விட 8 வடிவ பாதையில் நடக்கும் போது அதிவேகமாகவே குறைந்து கட்டுக்குள் வருகிறது.

கூழாங்கல்லில் காலணிகள் இன்றி நடப்பதால் உள்ளங்கால் முதல் உச்சி வரை பலன் பெறலாம். பாதவெடிப்பு, குதிகால் வலி, இடுப்பு வலி, மூட்டு வலி பிரச்சனைகள், படிப்படியாக குணமடைகிறது.கட்டுப்படாத நீரிழிவையும் கட்டுக்கோப்பாக வைக்கும் வயது அதிகமானவர்களும் கூட இந்தப் பயிற்சியை மற்றொருவர் உதவியுடன் மேற்கொள்ளலாம்.

நாளடைவில் வயதானவர்களும் தன்னிச்சையாக பயிற்சி மேற்கொள்ளும் அளவுக்கு 8 வடிவ நடைபயிற்சி தயார்படுத்து கிறது. ஆரோக்கியத்தை உறுதியாக அளிப்பதோடு உடலுக்கு ஆற்றலையும் தருவதால் உடல் பருமனுக்கு பயிற்சி தேவை என்று நினைப்பவர்கள் இந்த 8 வடிவ பயிற்சியை மேற்கொண்டால் பலனும் அதிகம்.

இந்த பயிற்சியை காலை மாலை 1 மணிநேரம் செய்து வந்தால் உள்ளங்கை விரல்கள் ரத்த ஓட்டத்தினால் சிவந்திருப்பதை உணரலாம். 

70வயது 50 வயதாக குறையும். முதுமை இளமையாகும். சர்க்கரை வியாதி குறைந்து முற்றிலும் குணமடையும்.

 குளிர்ச்சியினால் ஏற்படும் தலைவலி மலச்சிக்கல் தீரும். முழுமையாக சுவாசிக்கப்படும் மூச்சுக்காற்றால் 5 கிலோ பிராண வாயு உள்ளே சென்று மார்புச்சளி நீக்கப்படுகிறது.

இரண்டு நாசிகளும் முழுமையாக சுவாசிப்பதால் நாசியில் உண்டாகும் சளியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது. கண்பார்வை அதிகரிக்கும், ஆரம்பநிலை கண்ணாடி அணிவது தவிர்க்கப்படுகிறது. மற்றவர்களுக்கு மூக்குக்கண்ணாட்யின் பாயிண்ட் அதிகமாகாமல் பாதுகாக்கப்படுகிறது. 

செவிகளின் கேட்கும் திறன் அதிகரிக்கிறது. உடலினுள் அதிகப்படியான 5 கிலோ பிராண வாயுவால் உடல் சக்தி பெறுகிறது.

காலையிலும் மாலையிலும் 1 மணிநேரம் இந்த பயிற்சியை செய்து வந்தால் (ஹெர்னியா) குடலிறக்கநோய் குணமாகும். அளவான நடைப்பயிற்சியால் இரத்த அழுத்தப் குறைக்கப்படுகிறது.

இரண்டுவேளை 30 நிமிடம் செய்தால், பாத வெடிப்பு, வலி, மூட்டு வலிகள் மறைந்து விடுகின்றன.

உடல் ஆரோக்கியமும் கட்டுக்கோப்பான உடலும்

உடல் ஆரோக்கியத்துக்கு பயிற்சி செய்வது நல்லது என்கிறார்கள். ஆனால் உடலை வருத்தி செய்யும் பயிற்சிகள் உடலுக்கு ஆரோக்கியத்துக்கு தரவேண்டும் என்றால் உடல் ரீதியாக மட்டுமல்லாமல் மன ரீதியாகவும் பயிற்சியினால் பலன் இருக்க வேண்டும்.

ஆனால் நடைமுறை வாழ்க்கையில் பெரும்பாலான நேரம் செலவழித்து பயிற்சி செய்தாலும் பலன் என்னமோ முழுதும் கிடைப்பதில்லை என்றே சொல்ல வேண்டும்.

8 வடிவ நடைபாதையை மேற்கொள்ளும்போது மற்ற பயிற்சிகளைக் காட்டிலும் பயிற்சியின் மீது ஒருமித்த கவனம் உண்டா கிறது. இதனால் பயிற்சியின் ஒட்டுமொத்த பலனும் தடையின்றி கிடைக்கிறது.

உடலைக் கட்டுக்கோப்பாக சிக்கென்று வைத்திருக்க வேண்டுமென்றால் உடல் உறுப்புகளின் ஆரோக்கியமும் முக்கியம். அனைத்து உறுப்புகளும் தடையின்றி சீராக செயல்பட்டால் மட்டுமே கட்டுக்கோப்பான உடலை நிரந்தரமாக பெறமுடியும்.

உங்கள் உடலை ஃபிட்டாக வைக்க வேண்டுமென்றால் ஜிம், யோகா, உடற்பயிற்சி இவற்றோடு 8 வடிவ பயிற்சியும் சேர்த்து செய்யுங்கள். பலனை கண்டு நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.

Related Searches :

heath food 1 Thedalweb எட்டு வடிவ நடைப்பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள் !!
ஆரோக்கிய உணவுப் பழக்கங்கள்!(Healthy foods to gain weight)

இயற்கை வைத்தியத்தில் தாதுஉப்புகள் அதிகம் உள்ள இளங்கீரைகள், புதிதாய்ப் பறித்த இளங்காய்கறிகள், பழங்கள் போன்றவை முதல் தரமான உணவுகளாகும். புரதப் பொருட்கள், மாவுப் பொருட்கள், சர்க்கரைப் பொருட்கள், கொழுப்புப் பொருட்கள் உள்ள தானியங்கள், பயிறுகள், கிழங்குகள், பருப்புகள் ஆகியவை இரண்டாம் தரமான உணவுகள். இந்த இரண்டையுமே நமது அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.(Read more)

%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%87 %E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87 Thedalweb எட்டு வடிவ நடைப்பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள் !!
உணவே மருந்து – மருந்தே உணவு ( Food is medicine – medicine is food )

உணவே மருந்து – மருந்தே உணவு என்கிற பழமொழிக்கேற்ப இன்றைய அவசர உலகில் நாம் நமது உடலுக்கு ஏற்ற உணவு வகைகளைச் சாப்பிடாமல் ஏதோ கடனுக்கு என்று நமது விருப்பப் படி சாப்பிடுவதாலும் நேரத்திற்குச் சாப்பிடாமல் கண்டபடி சாப்பிடுவதாலும், நமது உடலுக்கு ஏற்காத உணவு வகைகளை நாக்கிற்கு ஆசைப்பட்டு சாப்பிடுவதாலும் நமது உடல் நோய் எதிர்ப்புச் சக்தியைத் தானாகவே இழந்துவிடுகிறது. இதனால் எளிதில் நமது உடம்பை சாதாரண நோய் முதல் தீராத நாட்பட்ட நோய்கள் தாக்கி (Read more)

12 Thedalweb எட்டு வடிவ நடைப்பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள் !!
weight loss tips at home tamil – மின்னல் வேகத்தில் எடையைக் குறைக்க உதவும் தெரியுமா? எப்படி சாப்பிடுவது?

அஞ்சறைப் பெட்டியில் உள்ள முக்கியமான ஒரு நறுமணமிக்க பொருள் தான் பெருஞ்சீரகம் என்றும் அழைக்கப்படும் சோம்பு விதைகள். இந்த விதைகள் நல்ல மணத்துடன் இருப்பதால், இச்சிறிய விதைகள் வாய் புத்துணர்ச்சிக்காக பயன்படுத்தப்படுகின்றன. அதோடு சோம்பு விதைகள் சில குழம்பு, ஊறுகாய் மற்றும் இனிப்பு பலகாரங்களிலும் மணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படுகின்றன. (Read more)