How to avoid phone blast

செல்போன்கள் ஏன் வெடிக்கிறது – காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள்!

Mobile Heating Issue

சமீப காலமாக ஸ்மார்ட்போன் வெடித்து சிதறும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. ஆனால், ஸ்மார்ட்ஃபோன் வெடிப்புக்கான காரணம் என்ன, அதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.

How to avoid phone blast

why do smartphones explode Thedalweb How to avoid phone blast
How to avoid phone blast

ஹைலைட்ஸ்:

  • ஸ்மார்ட்போன் வெடிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளன
  • சில தவறுகலால் இது நிகழ்கிறது
  • காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள்

How to avoid phone blast

ஸ்மார்ட்போன் வெடிக்கும் நிகழ்வு பயனர்களுக்கு ஒன்றும் புதிதல்ல. எவ்வளவு பிரீமியம் போனாக இருந்தாலும், ஒரு சில தவறுகளால் அது வெடித்துவிடுகிறது. சில நேரங்களில் இது நிறுவனத்தின் தவறாக இருந்தாலும், பயனர்களின் தவறுகளாலும் இது நிகழ்கிறது.

முக்கியமாக சொல்லவேண்டும் என்றால், இந்த தவறுகள் என்னவென்று பலருக்குத் தெரியாது. அப்படிப்பட்ட சில தவறுகளை குறித்து தான் இன்று விரிவாகப் பார்க்கப் போகிறோம். உற்பத்தித் தவறு செல்போன்கள் வெடிப்புக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

போனில் கொடுக்கப்பட்டுள்ள லித்தியம்-ஐயன் பேட்டரி சரியாக சோதிக்கப்படாவிட்டாலோ, செயலிழந்தாலோ அது வெடிக்கக்கூடும். பேட்டரியில் உள்ள செல்கள் அதிக வெப்பநிலையை அடையும் போது இது வழக்கமாக நிகழ்கிறது. சரியாக வெப்பத்தை வெளியேற்றும் அமைப்பு ஸ்மார்ட்போனில் இல்லையென்றால், இதுபோன்ற சம்பவங்கள் எளிதாக நடந்துவிடும்.

மூன்றாம் தரப்பு சார்ஜரைப் பயன்படுத்துதல்


இது ஒரு பொதுவான தவறு ஆகும். மூன்றாம் தரப்பு உற்பத்தியாளர்களின் சார்ஜர் மூலம் போனை சார்ஜ் செய்வது ஆபத்தானது. மூன்றாம் தரப்பு சார்ஜர்களில் பெரும்பாலும் போன்களைக் கொண்டு சோதிக்கப்படுவதில்லை. இதுபோன்ற சமயங்களில் இந்த சார்ஜர்கள் போனை சேதப்படுத்தி, போனில் ஷார்ட் சர்க்யூட்டை ஏற்படுத்தும்.

நீண்ட இரவு சார்ஜிங்


ஒரு இரவு முழுவதும் போனை சார்ஜரில் வைப்பது மிகவும் தீங்கு விளைவிக்கும். பெரும்பாலானோர் தூங்கும் போது போனை சார்ஜில் போட்டுவிட்டு அயர்ந்து தூங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இது பேட்டரியில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

How to avoid phone blast
How to avoid phone blast

போனை அதிகமாக சார்ஜ் செய்வதால் அதிக வெப்பம், அதிக சார்ஜ், ஷார்ட் சர்க்யூட் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். இருப்பினும், பல ஸ்மார்ட்போன்கள் இப்போது பேட்டரி நிலை 100 விழுக்காட்டை அடையும் போது, சார்ஜ் செய்வதை தடுக்கும் பிரத்யேக சிப் உடன் வருகிறது. ஆனால், பழைய போன்களில் இந்த வசதி இல்லை என்பது நினைவுக்கூரத்தக்கது.

நேரடி சூரிய ஒளியில் மொபைலை வைப்பது

How to avoid phone blast
How to avoid phone blast


அதிக வெப்பம் போனின் பேட்டரியை சேதப்படுத்தும். இது செல்களை நிலையற்றதாகி, வெப்ப முறிவை இழக்கச் செய்கிறது. இது ஆக்ஸிஜன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு போன்ற வாயுக்களை வெளியிடுகிறது. இதன் காரணமாகவும் ஸ்மார்ட்போன்கள் வெடிக்க அதிக வாய்ப்புள்ளது.

போனை பத்திரமாக வைத்திருப்பது அவசியம்


சில வெளிப்புற காரணங்களினால் கூட ஸ்மார்ட்போன்கள் வெடிக்க வாய்ப்புள்ளது. அதிக அழுத்தம் நிறைந்த உபகரணங்களுக்கு அருகாமையில் ஸ்மார்ட்போன்களை எடுத்து செல்வது நல்லதல்ல. இதுபோன்ற காரணங்களினால் கூட போன்கள் வெடித்து சிதறிய வரலாறுகள் உள்ளன.

How to avoid phone blast

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *