How to make roti at home
முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் (how to make roti at home)கோதுமை மாவை போட்டு, உப்பையும், சர்க்கரையும் சேர்த்து உங்கள் கைகளால் நன்றாக கிளறி விட வேண்டும். அதன் பின்பாக எண்ணெய் ஊற்றி, தயிரையும் ஊற்றி, முதலில் அந்த மாவில், எல்லா இடங்களிலும் இந்த பொருட்கள் படும்படி பிசைந்து விட்ட பின்பு தான், தேவையான அளவு தண்ணீரை தெளித்து தெளித்து பிசைய வேண்டும். (ரொம்பவும் புளித்த தயிரையும் ஊற்றி விடக்கூடாது.)
தண்ணீரை ஊற்றி விடாதீர்கள். ஏற்கனவே தயிர் ஊற்றி இருப்பதால், பிசுபிசுப்பு தன்மை அதிகமாகிவிட்டால், சப்பாத்தி நன்றாக இருக்காது. கையில் மாவு ஒட்டாத பதத்திற்கு தண்ணீர் தெளித்து பக்குவமாக மாவை பிசைந்து கொடுக்க வேண்டும். உங்களது விரல்களால் தான் உதிரி உதிரியாக மாவை பிசைந்து, அதன் பின்பு கெட்டித்தன்மைக்கு கொண்டு வரவேண்டும். எடுத்த எடுப்பிலேயே போட்டு அழுத்தி மாவை கட்டி ஆக்கிவிடாதீர்கள். மாவு நன்றாக பிசைந்த பின்பு, ஒரு மூடி போட்டு 5 நிமிடங்கள் வரை அதை அப்படியே விட்டு விடுங்கள்.
இப்போது தோசைக்கல்லை நன்றாக சூடு படித்துவிட்டு சப்பாத்தியை போட்டு 30 செகண்ட் ஒரு பக்கம் வெந்ததும், மீண்டும் திருப்பி போட்டு 30 செகண்ட்ஸ் மறுபக்கம் வேக வேண்டும். போட்ட உடனேயே எண்ணையையோ, நெய்யோ ஊற்றி விடக் கூடாது. இரண்டு பக்கமும் முக்கால்வாசி வெந்த சப்பாத்தி, தானாக உப்பி வரும். நீங்கள் கரண்டியை வைத்து லேசாக அழுத்தி விட்டாலே போதும். இறுதியாக உங்களுக்கு தேவையான அளவு எண்ணெயையோ அல்லது நெய் மேலே தடவி சப்பாத்தியை எடுத்து விட வேண்டியது தான்.
இந்த சப்பாத்தி அவ்வளவு சாஃப்டாக, அவ்வளவு லேயர் லேயராக வரும். கஷ்டப்பட்டு தான் சாப்பிட வேண்டும் என்ற எந்த அவசியமும் கிடையாது. வாயில் வைத்தவுடன் சப்பாத்தி தானாக கரைந்து போய்விடும். உங்கள் வீட்டில் ஒரே முறை இந்த சப்பாத்தி ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க. கட்டாயம் வீட்டில் உள்ள குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை விருப்பமாக சாப்பிடுவார்கள். இதற்கு சைட் டிஷ்ஷாக வெஜிடபிள் குருமா, மஸ்ரூம் கிரேவி, பன்னீர் கிரேவி எதை வேண்டுமென்றாலும் பரிமாறிக் கொள்ளலாம் அது உங்களுடைய இஷ்டம் தான்.
வடமாநிலத்தில் உள்ளவர்கள் இதுபோன்ற(how to make roti at home) சப்பாத்தியை தங்களுடைய வீடுகளில் செய்வார்கள். வித்தியாசமான முறையில், சாஃப்டாக இரண்டு மூன்று நாட்கள் ஆனாலும், கெட்டுப் போகாமல் இருக்கக்கூடிய சப்பாத்தியை எப்படி செய்வது, என்று தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நீங்கள் வெளியூர்களுக்கு செல்வதாக இருந்தால், தக்காளி தொக்கையும் இந்த சப்பாத்தியும் செய்து கூட எடுத்துக்கொண்டு போகலாம். ராஜஸ்தானி சப்பாத்தியை எப்படி செய்வது பார்த்து விடலாமா?
முதலில் 1 கப் அளவு கோதுமை மாவை எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது 300 கிராம் அளவுள்ள கோதுமை மாவுக்கு, என்னென்ன பொருட்கள், எந்த அளவில் சேர்க்க வேண்டும் என்றுதான் இந்த குறிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. உங்களது மாவின் அளவை அதிகப்படுத்திக் கொண்டால் அதில் சேர்க்கப்படும் அளவுகளையும் அதிகப்படுத்திக் கொள்ளுங்கள். கோதுமை மாவு – 300 கிராம், சர்க்கரை – 1 ஸ்பூன், உப்பு – 1/2 ஸ்பூன், நல்லெண்ணெய் – 2 ஸ்பூன், தயிர் – 4 டேபிள்ஸ்பூன். மாவு பிசைய தேவையான அளவு தண்ணீர்.