நீங்கள் Post Office இல் சேமிக்கு கணக்கை தொடங்க ஆர்வமாக உள்ளீர்களா? ஆம் என்றால் நீங்கள் முதலில் அஞ்சல் துறையில் உள்ள சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்துகொள்வது அவசியமாகும். ஏனெனில் அப்பொழுது தான் உங்களுக்கேற்ற சிறந்த சேமிப்பு திட்டத்தை தேர்வு செய்ய முடியும்.

இந்த பதிவின் மூலம் உங்களுக்கு போஸ்ட் ஆஃபிஸில் உள்ள திட்டங்கள், வட்டி விகிதம், முதிர்வு காலம் போன்றவற்றை பற்றி விரிவாக விளக்குகிறேன். இந்த பதிவை முழுமையாக படித்த பிறகு நீங்கள் தபால் துறையில் உள்ள சேமிப்பு திட்டங்களை பற்றி நன்கு அறிந்திருப்பீர்கள்.

post saving plan Thedalweb போஸ்ட் ஆபிஸ் சிறந்த சேமிப்பு திட்டங்கள் | Post Office Savings Scheme in Tamil
Post Office Savings Scheme in Tamil

தபால்துறை சேமிப்பு திட்டங்கள் | Post Office Savings Schemes in Tamil 2022

இன்றைய காலத்தில் சேமிப்பு என்பது அனைவரது வாழ்விலும் மிகவும் அவசியமான ஒன்றாகும். பணத்தை முன்கூட்டியே சேமிப்பதால் எதிர்காலத்தில் எந்த சிரமமும் இல்லாமல் வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்கலாம். 

உங்களின் Savings Account யை வங்கிகளிலோ அல்லது தபால் நிலையத்திலோ திறக்கலாம். தற்போது தபால் நிலையங்களில் சேமிப்பு கணக்கை தொடங்க நடுத்தர மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். ஏனெனில் பெரும்பாலும் அனைத்து கிராமங்களிலும் தபால் நிலையங்கள் செயல்படுகின்றன.

வங்கிகளை போலவே Post Office இல் தொடங்கும் சேமிப்பு கணக்குகளுக்கு  Mobile Baking, Internet Banking, UPI மற்றும் ATM Card போன்ற பல்வேறு சேவைகளை தபால் நிலையங்கள் வழங்குகின்றன. எனவே தபால் சேமிப்பு கணக்குகளில் ஆன்லைன் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம்.

சரி இப்பொழுது Post Office இல் இருக்கும் பல்வேறு Savings Schemes யை பற்றி Tamil மொழியில் ஒன்றன்பின் ஒன்றாக காணலாம்.

தபால் நிலைய சேமிப்பு கணக்கு | Post Office Savings Account (SB) 

வங்கிகளில் இருப்பதை போன்ற சேமிப்பு கணக்கை 4% வட்டியுடன் தபால் நிலையத்தில் தொடங்கலாம். இந்த வகையான சேமிப்பு கணக்கில் பணத்தை எப்பொழுது வேண்டுமானாலும் கணக்கில் போடலாம் மற்றும் எடுக்கலாம். இதில் தனிநபர் கணக்கு (Individual Account) மற்றும் ஜாயிண்ட் கணக்காக (Joint Account) திறக்க அனுமதிக்கிறது.

தபால் நிலைய சேமிப்பு கணக்கில் குறைந்தபட்சமாக Rs.500 ரூபாயை பராமரிக்க வேண்டும். இதை கணக்கை திறக்கும்போதே டெபாசிட் செய்ய வேண்டும். கணக்கை திறக்கும்போது Nomination செய்வது கட்டாயமாகும்.

கணக்கில் இருந்து குறைந்தபட்சமாக Rs.50 ரூபாயை எடுக்கலாம். அதற்கும் குறைவான தொகையை எடுக்க முடியாது. அதிகபட்சமாக எவ்வளவு பணத்தை வேண்டுமானாலும் டெபாசிட் செய்யலாம்.

Cheque Book, ATM Card மற்றும் eBanking / Mobile Banking போன்ற வசதிகளை பெற முடியும்.

வருமான வரி சட்டம் 80TTA படி, கணக்கில் உள்ள பணத்தால் பெறப்படும் வட்டியில் ஒரு நிதியாண்டிற்கு Rs.10,000  வரை வரிவிலக்கு பெற முடியும்.

போஸ்ட் ஆபீஸ் தொடர் வைப்புக்கணக்கு | Post Office Recurring Deposit (RD)

போஸ்ட் ஆபீஸ் இல் மாத மாதம் செலுத்தக்கூடிய RD கணக்கை திறக்க முடியும். இதில் ஒரு வருடத்திற்கு 5.8% வட்டி (Interest) வழங்கப்படும்.

இந்த வகையான சேமிப்பு கணக்கில் குறைந்தபட்சம் Rs.100 ரூபாயில் இருந்து தொடங்கலாம். அதிகபட்சமாக எவ்வளவு வேண்டுமானாலும் டெபொசிட் செய்யலாம்.

Recurring Deposit கணக்கின் முதிர்வு காலம் 5 (60 மாதங்கள்) ஆண்டுகள் ஆகும். அதாவது ஒவ்வொரு மாதமும் தொடர்ச்சியாக 5 ஆண்டுகளுக்கு செலுத்த வேண்டும். 5 ஆண்டுகளுக்கு பிறகு முதிர்வு தொகையை பெறலாம்.

தனிநபராகவும், ஜாயிண்ட் அக்கௌன்ட் ஆகவும் (அதிகம்பட்சம் 3 நபர்கள்) திறக்கலாம். நீங்கள் எத்தனை RD கணக்குகள் வேண்டுமானாலும் Open செய்யலாம்.

ஒருவேளை நீங்கள் கணக்கை 5 ஆண்டுகளுக்கு முன்னதாகவே Close செய்ய வேண்டும் என்று விரும்பினால், அதற்கான அபராத கட்டணத்தை செலுத்தி Close செய்யலாம்.

டைம் டெபாசிட் கணக்கு | Time Deposit Account (RD)

Time Deposit Account என்றால் என்ன?

Time Deposit Account என்பது நீங்கள் ஒப்புக்கொள்ளப்பட்ட காலத்திற்கு உங்களின் பணத்தை கணக்கில் விட்டுவிடுவதாகும். அதாவது நீங்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை 2 ஆண்டுகளுக்கு கணக்கில் விட்டுவிட வேண்டும். அந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு பணமானது முதிர்வடையும். பிறகு அந்த தொகையை எடுத்துக்கொள்ளலாம்.

இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் Rs.1000 ரூபாயில் இருந்து டெபாசிட் செய்யலாம். இதற்கான வட்டியானது ஒவ்வொரு காலாண்டிற்கும் கணக்கிடப்படுகிறது. இருப்பினும் வருடத்திற்கு ஒரு முறை தான் வட்டி தொகை செலுத்தப்படும்.

Interest Rate of Time Deposit Account: 

காலம் (Period)வட்டி விகிதம் (Interest Rate)
1 Year 5.5%
2 Year 5.5%
3 Year 5.5%
5 Year 6.7%

தனிநபர் கணக்கு அல்லது ஜாயிண்ட் கணக்காக திறக்கலாம். இது போன்று எத்தனை கணக்குகள் வேண்டுமானாலும் திறக்கலாம். 1, 2, 3 மற்றும் 5 வருடங்கள் இவற்றில் ஏதாவது ஒரு காலத்தை தேர்வு செய்யலாம். நீங்கள் தேர்வு செய்த காலத்திற்கு பிறகு பணம் திரும்ப கொடுக்கப்படும்.

முதிர்வு தொகையை பெருபவர் தேவைப்பட்டால் மீண்டும் காலத்தை நீட்டித்துக்கொள்ளலாம். 5 வருட காலத்திற்கு டெபாசிட் செய்தால் பிரிவு 80C கீழ் வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

மாத வருமான திட்டம் | Monthly Income Scheme (MIS)

போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு திட்டங்களில் Monthly Income Scheme திட்டமும் ஒன்றாகும். இந்த திட்டத்தில் முதலீடு செய்தால் டெபாசிட் செய்த பணத்திற்கான வட்டியை ஒவ்வொரு மாதமும் பெறலாம்.

Post Office Monthly Income Scheme திட்டத்தில் 6.6% சதவீதம் ஆண்டு வட்டியாக வழங்கப்படுகிறது. இது ஒரு மாதத்திற்க்கு கணக்கிடப்பட்டு ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும்.

ஒரு தனிநபர் கணக்கில் அதிகபட்சமாக Rs.4.5 லட்சம் வரை Deposit செய்யலாம். Joint Account ஆக இருந்தால் Rs.9 லட்சம் வரை deposit செய்யலாம்.

இந்த MIS திட்டத்தில் குறைந்தபட்சம் Rs.1000 ரூபாயில் இருந்து தொடங்கலாம். 

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் | Post Office Senior Citizen Savings Scheme (SCSS)

60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மட்டுமே இத்திட்டத்திற்கு தகுதியுடையவர் ஆவர். 60 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் இந்த திட்டத்தில் இணைய முடியாது. 

Read How to Open PPF Account in Post Office

இந்த SCSS திட்டத்தில் டெபாசிட் செய்யப்படும் பணத்திற்கு 7.4% வட்டி வழங்கப்படும். இது மற்ற சேமிகப்பு கணக்குகளை காட்டிலும் வட்டி விகிதம் அதிகம் ஆகும். 

Rs.1000 ரூபாயில் இருந்து இந்த திட்டத்தில் டெபாசிட் செய்யலாம். இதில் அதிகபட்சமாக Rs.15 லட்சம் வரைக்கும் டெபாசிட் செய்யலாம். இந்த திட்டத்தின் கீழ் செய்யப்படும் முதலீடு, வருமான வரி சட்டம் 80C கீழ் வரி விலக்கு பெற தகுதியுடையது. 

மூத்த குடிமக்கள் கணக்கை தனிநபராகவோ அல்லது துணையுடன் கூட்டாகவோ மட்டுமே திறக்க முடியும். 

15 வருட பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் | 15 year Public Provident Fund Account (PPF )

PPF திட்டம் என்பது பொது வருங்கால வைப்பு நிதி திட்டமாகும். இந்த திட்டத்தில் Account யை Open செய்த பிறகு தொடர்ந்து 15 ஆண்டுகள் பணத்தை டெபாசிட் செய்துகொண்டே வர வேண்டும். 15 ஆண்டுகளுக்கு பிறகு பணம் முதிர்ச்சி அடையும். நீங்கள் விரும்பினால் முதிர்ச்சி அடைந்த தொகையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடித்துக்கொள்ளலாம்.

இந்த திட்டத்தில் முதலீடு செய்யப்படும் பணத்திற்கு ஆண்டுக்கு 7.1% வட்டியாக அளிக்கப்படுகிறது. மேலும் இந்த வட்டி கூட்டு வட்டியாக (Compounded Yearly) செலுத்தப்படும்.

இதில் ஒரு நிதியாண்டிற்கு குறைந்தபட்சம் Rs.500 ரூபாயில் இருந்து அதிகபட்சம் Rs.1,50,000 ரூபாய் வரை முதலீடு செய்யலாம். இந்த தொகையை தவணையாகவோ (​Installments) அல்லது மொத்த தொகையாகவோ (lump-sum) செலுத்தலாம். 

தனி நபர் கணக்காக மட்டுமே இதை Open செய்ய முடியும். ஜாயிண்ட் அக்கௌன்ட் ஆக திறக்க முடியாது. 

இதை இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் Post Office அல்லது Bank இல் Open செய்யலாம். ஒரு நபர் ஒரு PPF கணக்கை மட்டுமே திறக்க இயலும். இதற்கான வட்டி ஒவ்வொரு நிதியாண்டில் இறுதியில் செலுத்தப்படும். வருமான வரி சட்டத்தின் படி இந்த திட்டத்தின் மூலம் ஈட்டப்படும் வட்டிக்கு வரி விலக்கு உண்டு.

செல்வமகள் சேமிப்பு திட்டம் | Sukanya Samriddhi Accounts

செல்வமகள் சேமிப்பு திட்டம் என்பது பெண் குழந்தைகளுக்கான மிகசிறந்த சிறு சேமிப்பு திட்டமாகும். பெண் குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக தபால் துறை இந்த சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

பிறந்த குழந்தை முதல் 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் பெற்றோர்களோ அல்லது பாதுகாவலரோ திறக்கலாம். ஒரு குழந்தையின் பெயரில் ஒரு கணக்கை மட்டுமே திறக்க முடியும்.

ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக இரண்டு பெண்குழந்தைகளுக்கு மட்டுமே இந்த செல்வமகள் சேமிப்பு கணக்கை திறக்க முடியும். ஒருவேளை ஒரு குடும்பத்தில் இரட்டையர்கள் இருந்தால் அப்பொழுது ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளை திறக்கலாம். 

ஒரு நிதியாண்டிற்கு குறைந்தபட்சம் Rs.250 ரூபாயில் இருந்து அதிகபட்சம் Rs.1,50,000 ரூபாய் வரை முதலீடு செய்யலாம். இந்த செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் தொடர்ந்து 15 ஆண்டுகள் முதலீடு செய்யலாம். இதில் முதலீடு செய்யும் பணத்திற்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

இதற்கான வட்டி விகிதம் வருடத்திற்கு 7.6% ஆகும். வட்டியானது கூட்டு வட்டி வீதத்தில் கணக்கிடப்படுகிறது.

பெண் குழந்தை 18 வயதை கடந்தவுடன் அல்லது 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவுடன் பணத்தை திரும்ப பெறலாம். ஒருவேளை 5 ஆண்டுகளுக்கு பிறகு கணக்கை முன்னதாகவே Close செய்ய விரும்பினால், சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு மூடலாம்.

தேசிய சேமிப்பு சான்றிதழ் | National Savings Certificates (NSC)

NSC திட்டம் என்பது ஒரு நிலையான சேமிப்பு திட்டமாகும். ஒரு வங்கியிலோ அல்லது தபால் நிலையத்திலோ தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்தில் முதலீடு செய்யலாம். இது சிறிய மற்றும் நடுத்தர வருவாய் முதலீட்டாளர்களுக்கான சேமிப்பு பத்திர திட்டமாகும்.

Read Post Office Senior Citizen Saving Scheme (SCSS): சேமிப்பு திட்டம்

சில ஆண்டுகளுக்கு முன்பு அச்சிடப்பட்ட பத்திரங்கள்  வழங்கப்பட்டன. பிறகு இந்த பத்திரங்கள் டிஜிட்டல் வடிவில் வழங்கப்படுகின்றன. ஒருவர் தன்னுடைய பெயரிலோ அல்லது குழந்தைகளின் பெயரிலோ டிஜிட்டல் பத்திரங்களை வாங்க முடியும்.

இந்த திட்டத்தில் முதலீடு செய்யப்படும் பணமானது முதிர்ச்சி அடைய 5 ஆண்டுகள் ஆகும். இதில் குறைந்தபட்சம் Rs.1000 ரூபாயில் இருந்து முதலீடு செய்யலாம். இதற்க்கு அதிகபட்ச முதலீடு வரம்பு ஏதும் இல்லை. அதாவது நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.

இந்த திட்டத்தில் எத்தனை கணக்குகள் வேண்டுமானாலும் திறக்கலாம். வருமான வரி சட்டம் 80C கீழ் வரிவிலக்கு பெறலாம்.

முதலீட்டு பத்திரத்தை சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஒருவரின் பெயரில் இருந்து மற்றொருவரின் பெயருக்கு Transfer செய்துகொள்ளலாம்.

கிசான் விகாஸ் பத்ரா | Kisan Vikas Patra (KVP )

தபால் துறையில் உள்ள சேமிப்பு திட்டங்களில் கிசான் விகாஸ் பத்ரா ஒரு முக்கியமான திட்டம் ஆகும். இந்த திட்டம் கணிசமான வருவாயை ஈட்டி தருகிறது. இது ஒரு மத்திய அரசின் திட்டம் என்பதால் பாதுகாப்பான மற்றும் லாபகரமான திட்டமாக கருதப்படுகிறது.

கிசான் விகாஸ் பத்திர திட்டத்தில் முதலீடு செய்யப்படும் பணத்திற்கு 6.9% கூட்டு வட்டி வழங்கப்படுகிறது. 

இதில் மொத்த தொகையாக மொத்தம் 124 மாதங்கள் (10 வருடங்கள் 4 மாதம்) முதலீடு செய்ய வேண்டும். முதிர்வு காலத்திற்கு பிறகு இரட்டிப்பு தொகையாக கிடைக்கும்.

குறைந்தபட்சம் Rs.1000 ரூபாயில் இருந்து முதலீடு செய்யலாம். இதற்க்கு அதிகபட்ச முதலீடு வரம்பு ஏதும் இல்லை. Single அல்லது Joint Accont ஆக Open செய்யலாம்.

மேலே குறிப்பிட்ட வட்டி விகிதங்கள் அனைத்தும் https://www.indiapost.gov.in என்ற தபால் நிலையத்தின் இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்டது.

இந்த பதிவில் போஸ்ட் ஆபிசில் உள்ள சிறந்த சேமிப்பு திட்டங்களை (Post Office Savings Schemes in Tamil) பற்றி தெரிந்து கொண்டீர்கள். இவற்றில் உங்களுக்கு பொருத்தமான சேமிப்பு திட்டத்தை தேர்வு செய்து முதலீடு செய்ய ஆரம்பியுங்கள். இதை பற்றிய கருத்துக்களை  பதிவிடவும். 

மேலும் தபால் துறை சேமிப்பு திட்டங்களை விரிவாக தெரிந்துகொள்ள கீழே உள்ள பதிவுகளை படிக்கவும்.Post Office Bank Account – Eligibility, Features & Interest RatePost Office Monthly Income Scheme – மாத வருமான திட்டம்Post Office Recurring Deposit (RD) Interest Rate – தொடர் வைப்புHow to Open PPF Account in Post Office Post Office Senior Citizen Saving Scheme (SCSS): சேமிப்பு திட்டம்National Savings Certificates (NSC) Post OfficeKisan Vikas Patra (KVP): Post Office – Eligibility, Interest, BenefitsSukanya Samriddhi Yojana (SSY) Scheme Eligibility, Interest RateHow to Open IPPB Mobile Banking: India Post Payments Bank How to Register Dakpay UPI App of India Post Payment Bank

போஸ்ட் ஆபிஸ் சிறந்த சேமிப்பு திட்டங்கள் | Post Office Savings Scheme in Tamil

Leave a Reply