ஓல்டு இஸ் கோல்டு என்பார்கள். அது உண்மை தான். பழங்கால பொருட்கள் என்றுமே தங்கம் போன்றவை தான். விலைமதிப்புமிக்க பொருட்கள் தான்.

பழைய பொருட்களை சேகரிப்பது பலருக்கு இது ஒரு பொழுதுபோக்காக இருக்கும். பலருக்கு இது தான் வணிகமாகவே இருக்கும். இன்னும் சிலர் தங்களிடம் உள்ள பழைய நாணயம் மற்றும் பொருட்களை வைத்து அடுத்து என்ன செய்வது என தெரியாமல் தவிப்பர். இப்படி பல கேள்விகளுக்கு மத்தியில் பழைய காலத்தில் 5 ரூபாய் நோட்டினை பற்றித் தான் நாம் இந்த கட்டுரையில் பார்க்கவிருக்கிறோம்.

இது பெரியளவில் விலை கிடைக்காவிட்டாலும், 5 ரூபாய்க்கு 30,000 ரூபாய் கிடைக்கிறது. எனினும் இதற்கு ஒரு கண்டிசனும் உண்டு என தகவல்கள் வெளியாகியுள்ளன.

காயின் பட்டியல்

அந்த பழைய 5 ரூபாய் நோட்டில் ஒரு டிரக்டரின் படம் இருக்க வேண்டும் என கூறப்படுகின்றது. ஏற்கனவே நாம் சில கட்டுரைகளில் இது குறித்து பார்த்துள்ளோம். காயின் பஜார் (coinbazzar.com) அதன் தளத்தில் பலவேறு வகையான நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகள், பழைய பொருட்கள் என பலவற்றையும் பட்டியலிட்டுள்ளது.

indiancoins Thedalweb இது உண்மையா.. ? ரூ.5 நோட்டுக்கு 30,000 ரூபாய் வரை பெற முடியுமா.. எப்படி சாத்தியம். எங்கு அணுகுவது...!

ஆயிரக்கணக்கில் ஏலம்

ஆக அதன்படி, 1 ரூபாய் மற்றும் 2 ரூபாய், 5 ரூபாய் நாணயங்கள் மற்றும் தாள்கள் ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு ஏலம் விடலாம். இதே சமீபத்தில் வெளியான மாத வைஷ்ணவி தேவியின் படம் பொறிக்கபட்ட, 1 ரூபாய்க்கு நீங்கள் 45,000 ரூபாய் வரை பெற முடியும் என்ற அறிவிப்பு வெளியானது. அதில் 26 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அரசு வெளியிட்ட 1 ரூபாய் தாளுக்கு 45,000 ரூபாய் வரை பெற்றுக் கொள்ளலாம் என கூறப்பட்டது.

coins edited Thedalweb இது உண்மையா.. ? ரூ.5 நோட்டுக்கு 30,000 ரூபாய் வரை பெற முடியுமா.. எப்படி சாத்தியம். எங்கு அணுகுவது...!

நிபந்தனைகள் உண்டு

எனினும் இதற்கு சில கன்டிசன்களும் உண்டு. ஒன்று இந்த ரூபாய் நோட்டு 1957ம் ஆண்டு அச்சிடப்பட்டதாக இருக்க வேண்டும். அதில் அப்போதைய நிதியமைச்சர் ஹிருபாய் எம் பட்டேலின் கையெழுத்து இருக்க வேண்டும். அதே வரிசை எண் 123456 என்ற வரிசை எண் இருக்க வேண்டும்.

நினைவு நாணயங்களின் மதிப்பு

ஓ.என்.ஜி.சியின் நினைவு நாணயமான 5 ரூபாய் நாணயம், 10 நாணயங்கள் 200 ரூபாய்க்கு ஏலம் விடப்படுவதாகவும், மேலும் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் டி சுப்பாராவ் கையெப்பம் கொண்ட, 000786 என்ற எண் கொண்ட 100 ரூபாய் நோட்டு, 1,999 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும், இன்னும் பல காயின்கள், நோட்டுகள் ஆயிரக்கணக்கில் விலை போவதாகவும் காயின் பஜார் தளத்தில் சிலவற்றை பார்க்க முடிகிறது.

5 rs note1 Thedalweb இது உண்மையா.. ? ரூ.5 நோட்டுக்கு 30,000 ரூபாய் வரை பெற முடியுமா.. எப்படி சாத்தியம். எங்கு அணுகுவது...!

பழைய 10 ரூபாயும் பல அம்சங்களும்

இதே பழைய 10 ரூபாய் நோட்டு சில நிமிடங்களில் 25,000 ரூபாய் வரையில் பெறலாம். குறிப்பாக ஒரு பக்கத்தில் அசோக தூணும், மறுபுறம் ஒரு படகும் இருக்க வேண்டும் என்ற குறிப்பு உள்ளது. இது 1943ல் இந்தியாவில் பிரிட்டீஸ் ஆட்சியின் போது வெளியிடப்பட்ட நோட்டு எனவும் கூறப்படுகிறது. இதில் அப்போதைய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சிடி தேஷ்முக்-கின் கையெழுத்து இருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

லட்சக்கணக்கில் இல்லை

இதற்காக காயின் பஜார், இந்தியா மார்ட் உள்ளிட்ட பல இணைய தளங்கள் ஏலம் விடுகின்றன. அதில் உங்களது நாணயங்களின் புகைப்படங்களை பதிவேற்றம் செய்து அதற்கேற்ப தொகையினையும் பெறலாம். எனினும் ஆயிரக்கணக்கில் உங்களது நாணயங்களின் மதிப்பு இருக்கலாம். ஊடக அறிக்கைகளை போல, லட்சக்கணக்கில் பெற முடியாது என்பது தான் உண்மை.