தீபாவளிக்கு வெளியாகிறது பிரதீப் ரங்கநாதனின் ‘டியூட்’! | pradeep ranganathan dude to release on diwali
‘டிராகன்’ படத்துக்குப் பிறகு ‘டியூட்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் பிரதீப் ரங்கநாதன்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் மமிதா பைஜு நாயகி. சரத்குமார், ரோகிணி உள்பட பலர் நடிக்கின்றனர். கீர்த்தீஸ்வரன் இயக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு உள்பட 5 மொழிகளில் வெளியாகிறது. இந்நிலையில் இதன் ‘நல்லாரு போ’ என்ற இரண்டாவது பாடல் நேற்று வெளியானது. இந்நிலையில் இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்ஐகே’ தீபாவளிக்கு வெளியாகும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் ‘டியூட்’ தீபாவளிக்கு வெளியாவதால் ‘எல்ஐகே’ வெளியீடு தள்ளிப் போகும் என்கிறார்கள்.