செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பச்சை நிற பொருள்!

நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர் (Perseverance rover), கடந்த சில காலமாக செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் பயணித்து, ஆய்வு செய்து வருகிறது.

அப்படியாக பெர்சவரன்ஸ் ரோவர் நிகழ்த்திய சமீபத்திய ஆய்வொன்றின் வழியாக கிடைத்த தரவு (Data) விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது!

அப்படி என்ன கிடைத்துள்ளது? பெர்சவரன்ஸ் ரோவரின் புதிய கண்டுபிடிப்பானது, செவ்வாய் எனும் சிவப்பு நிற கிரகத்தில் பச்சை நிறமும் உள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது. அதாவது செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் பச்சை நிறத்திலான மண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!

green-sand-on-mars-nasa

செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பச்சை நிற பொருள்!

செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பச்சை நிற பொருள்!

இதெப்படி சாத்தியம்? மார்ஸ் கிரகத்தின் மேற்பரப்பில் பெர்சவரன்ஸ் ரோவரால் கண்டுபிடிக்கப்பட்ட பச்சை நிற மண் ஆனது ‘ஆலிவின்’ துகள்கள் (Grains of Olivine) ஆகும். இங்கே இன்னொரு சுவாரசியமான விடயம் என்னவென்றால்.. ஆலிவின் என்பது பூமியில் பொதுவாக அறியப்பட்ட ரத்தின பெரிடோட்டின் (Gemstone peridot) ஒரு வெர்ஷன் ஆகும். இன்னும் தெளிவாக கூற வேண்டும் என்றால் ஸ்லைட்லி லெஸ் ஸ்பெக்டாகுலர் வெர்ஷன் (Slightly Less Spectacular Version) ஆகும்!

செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பச்சை நிற பொருள்!

செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பச்சை நிற பொருள்!

இதற்கும்.. பூமியில் உள்ள கடற்கரைகளுக்கும் உள்ள தொடர்பு! முன்னரே குறிப்பிட்டபடி, நமது பூமியில் மிகவும் ஏராளமான ஆலிவின் துகள்கள் உள்ளன, அவைகள் அப்பர் மேன்டிலில் (Upper Mantle) உள்ளன. அறியாதோர்களுக்கு பூமியின் அப்பர் மேன்டில் என்பது கிரகத்தின் உள்ளே இருக்கும் மிகவும் அடர்த்தியான பாறை அடுக்கு ஆகும். அதில் ஆலிவின் துகள்களும் அடக்கம்; ஹவாயில் உள்ள கடற்கரைகள் அடர் பச்சை நிறத்தில் தோன்றுவதற்கும் இது தான் பொறுப்பு!

தேடியது வேறு…கிடைத்தது வேறு! நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர் ஆனது செவ்வாய் கிரகத்தின் ஜெஸெரோ பள்ளத்திற்குள் (Jezero crater) நுழைந்த போது, ஏராளமான சிவப்பு நிறத்திலான தாதுக்கள் கண்டுபிடிக்கப்படும் என்று ​​​​ஆராய்ச்சியாளர்கள் நம்பினர். ஆனால் செவ்வாய் கிரகத்தில் “பச்சை நிறத்திலான மண்” கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, அவர்களை ஆச்சரியத்தின் உச்சிக்கே அழைத்து சென்றுள்ளது!

செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பச்சை நிற பொருள்!
செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பச்சை நிற பொருள்!

ஏன்.. இவ்வளவு ஆச்சரியம்? ஏனென்றால் இந்த ஆலிவின் துகள்களானது, செவ்வாய் கிரகத்தில் பூமியில் இருப்பதை போன்றே திரவ நீர், காற்று மற்றும் காந்தப்புலம் இருப்பதைக் குறிக்கும் மிகவும் எதிர்பாராத ஒரு கண்டுபிடிப்பு ஆகும். ஜெஸெரோ க்ரேட்டர் ஆனது வண்டல் பாறைகளைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அங்கே பல எரிமலை பாறைகளே கண்டறியப்பட்டுள்ளன. மேலும் அந்த பாறைகளில் பெரும்பாலானவை பெரிய அளவிலான ஆலிவின் துகள்களால் ஆனவை!

செவ்வாயில் உயிர்கள் வாழ்ந்து இருந்தால்? பெர்சவரன்ஸ் ரோவரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த பாறைகளை ஆராய்ச்சி செய்வதன் வழியாக, செவ்வாய் கிரகத்தின் ஆரம்பகால நிலைமைகளைப் புரிந்துகொள்ள முடியும் மற்றும் அங்கே எப்போதாவது, ஏதாவது உயிரினங்கள் வாழ்ந்து இருந்தால், அதைப்பற்றி அறிந்துகொள்ள முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள்.

“அதை” பூமிக்கு கொண்டு வர 2 ஹெலிகாப்டர்கள்! இதற்கிடையில், நாசா தனது மார்ஸ் சாம்பிள் ரிட்டர்ன் புரோகிராமின் (Mars Sample Return Program) ஒரு பகுதியாக செவ்வாய் கிரகத்தின் பாறைகள் மற்றும் தூசிகளை பூமிக்கு கொண்டு வர, மேலும் இரண்டு ஹெலிகாப்டர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளது. இதற்காக நாசா, ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்துடன் (European Space Agency) இணைந்து ஒரு செவ்வாய் கிரக பயணத்தை திட்டமிட்டு வருகிறது.

வேற்று கிரகத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட முதல் ‘சாம்பிள்’! அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவும், நாசா, ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையமும் சேர்ந்து செய்யும் இந்த பணி வெற்றிகரமாக முடிவடைந்தால், வேறொரு கிரகத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட முதல் அறிவியல் மாதிரியாக (Scientific samples) செவ்வாய் கிரக பாறைகள் இருக்கும்! அதன் பிறகு நடக்கும் ஆராய்ச்சிகள் மற்றும் அது தொடர்பான முடிவுகள், மனித இனத்தின் மகத்தான சாதனைகளாக கூட மாறலாம்!

Photo Courtesy: NASA

செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பச்சை நிற பொருள்!

Related Articles :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *