💡 அஷ்டமி பூப்பிரதஷனம் படியளக்கும் நிகழ்ச்சி- ராமநாதசுவாமி கோவில் யானை‌யின் நெகிழ்சி செயல்… | ஆன்மிகம்

✍️ |
Ramanathaswamy Temple Ashtami Poopradhashanam 2026 01 8c77cc7333035c18c6c45862aa4595f7 3x2 Thedalweb அஷ்டமி பூப்பிரதஷனம் படியளக்கும் நிகழ்ச்சி- ராமநாதசுவாமி கோவில் யானை‌யின் நெகிழ்சி செயல்... | ஆன்மிகம்
📌 Last Updated:Jan 11, 2026 5:52 PM ISTஇன்று (ஜன.11) அஷ்டமி பூப்பிரதட்சணத்தை முன்னிட்டு அதிகாலை மூன்று மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு ஸ்படிக லிங்கம் பூஜை நடைபெற்று பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். + அஷ்டமி பூப்பிரதஷனம் படியளக்கும்…


Last Updated:

இன்று (ஜன.11) அஷ்டமி பூப்பிரதட்சணத்தை முன்னிட்டு அதிகாலை மூன்று மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு ஸ்படிக லிங்கம் பூஜை நடைபெற்று பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். 

Rapid Read
+
[ADSENSE-RESPONSIVE-UNIT]

அஷ்டமி

அஷ்டமி பூப்பிரதஷனம் படியளக்கும் நிகழ்ச்சி- ராமநாதசுவாமி கோவில் யானை‌யின் நெகிழ்சி செயல்

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் அஷ்டமி பூப்பிரதட்சணம் படியளக்கும் நிகழ்ச்சியை‌ முன்னிட்டு கோவிலில் இருந்து சுவாமி அம்பாள் வெளிவந்தபோது யானை ராமலட்சுமி தனது துதிக்கை தூக்கி வணங்கியதை சுற்றுலா பயணிகள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர்.

தீர்த்தம், மூர்த்தி, ஸ்தலம் என்ற மூன்று பெருமைகளையும் கொண்டு காசிக்கு நிகரான புண்ணிய ஸ்தலமாக ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள ராமநாதசுவாமி கோவிலானது உள்ளதால் நாள்தோறும் பல்வேறு மாவட்ட மற்றும் மாநிலத்தில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இதையும் வாசிங்க: Kovai Rain Alert: கோவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை எப்படி இருக்கும் – வெதர்மேன் கொடுத்த ஜில் அப்டேட்…

இன்று அஷ்டமி பூப்பிரதட்சணத்தை முன்னிட்டு அதிகாலை மூன்று மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு ஸ்படிக லிங்கம் பூஜை நடைபெற்று பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து ராமநாதசுவாமி – பர்வதவர்த்தினி அம்மன் படியளக்கும் நிகழ்ச்சிக்காக கோவிலில் இருந்து பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளி நான்கு ரதவீதிகளிலும் வீதி உலா நடைபெற்றது. அப்போது கோவில் யானை ராமலட்சுமி தனது துதிக்கையை உயர்த்தி சுவாமி – அம்பாளை வணங்கியது. இதனை சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர்.

சுவாமி வீதி உலாவை முன்னிட்டு கோவில் நடை காலை 7 மணிக்கு சாத்தப்பட்டு, சுவாமி – அம்பாள் மீண்டும் கோவிலுக்கு வந்த உடன் பகல் 12 மணிக்கு கோவில் நடை‌திறந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

guru 1 2026 03 85ca86bb53ac912c3f006a9faf68c083 1200x675 Thedalweb குரு பெயர்ச்சியால் செல்வத்தில் திளைக்க போகும் 3 ராசிகள்... உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

📌 குரு பெயர்ச்சியால் செல்வத்தில் திளைக்க போகும் 3 ராசிகள்… உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஜோதிடத்தின்படி, கிரகங்களின் குருவாகவும், அதிர்ஷ்டத்திற்குக் காரணமாகவும் கருதப்படும் குரு, விரைவில்…