✅ சாரல் மழையில் மீனாட்சியின் அஷ்டமி சப்பரம்… மக்களுக்கு இறைவன் படி அளக்கும் லீலை நிகழ்வு | ஆன்மிகம்

✍️ |
HYP 5697135 cropped 11012026 181913 videocapture 2026011118161 2 3x2 Thedalweb சாரல் மழையில் மீனாட்சியின் அஷ்டமி சப்பரம்... மக்களுக்கு இறைவன் படி அளக்கும் லீலை நிகழ்வு | ஆன்மிகம்
📌 Last Updated:Jan 12, 2026 6:27 PM ISTஇந்த அரிசியை வீட்டில் வைத்து வேண்டிக் கொண்டால், நோய் நொடி நீங்கி பசிப்பணி நீங்கும் என்பது முன்னொரு காலத்தின் நம்பிக்கை என்று சொல்லப்படுகின்றது.+ மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்அஷ்டமி…


Last Updated:

இந்த அரிசியை வீட்டில் வைத்து வேண்டிக் கொண்டால், நோய் நொடி நீங்கி பசிப்பணி நீங்கும் என்பது முன்னொரு காலத்தின் நம்பிக்கை என்று சொல்லப்படுகின்றது.

+
[ADSENSE-RESPONSIVE-UNIT]

மதுரை

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்அஷ்டமி சப்பரம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவை போன்று மார்கழி மாதத்தில் வரக்கூடிய தேய்பிறை அஷ்டமி நாளில் உலகில் உள்ள அனைத்து ஜீவராசிக்கும் இறைவன் படி அளக்கும் லீலையைக் குறிக்கும் வகையில், இந்த ஆண்டிற்கான அஷ்டமி சப்பர திருவிழா நடைபெற்றது.

அதிகாலையிலேயே மதுரை மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரருக்குக் கோயிலில் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, பிறகு கோயிலிலிருந்து புறப்பாடாகித் தேர் முட்டி சாலையில், அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடனும், மீனாட்சியம்மன் தனித் தனி சப்பரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தனர்.

சிவனடியார்கள் கயிலாய வாத்தியம் முழங்க கீழமாசி வீதியில் புறப்பாடாகிய சப்பரம் யானைக்கல், கீழ வெளி வீதி, தெற்கு வெளிவீதி, மேல வெளிவீதி, வக்கீல் புதுத்தெரு வழியாக வலம் வந்து மீண்டும் கோயிலுக்கு வந்தடைந்தது. மீனாட்சியம்மன் எழுந்தருளும் சப்பரத்தைப் பெண் பக்தர்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்துச் செல்வது இந்த அஷ்டமி சப்பர திருவிழாவின் விசேஷமான நிகழ்வாகும்.

இதையும் வாசிக்க: தமிழகத்தை காஷ்மிராக்கிய குளிர்… வானிலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் – என்ன நடக்கிறது தெரியுமா.?

இந்த சப்பர பவனியின் முன் சிவாச்சாரியார்கள் அரிசியைத் தூவியபடி செல்லும்போது கீழே சிதறிக் கிடந்த அரிசியைக் கூடியிருந்த பக்தர்கள் எடுத்துக் கொண்டு வீடுகளுக்குச் செல்வர். இந்த அரிசியை வீட்டில் வைத்து வேண்டிக் கொண்டால், நோய் நொடி நீங்கி பசிப்பணி நீங்கும் என்பது முன்னொரு காலத்தின் நம்பிக்கை என்று சொல்லப்படுகின்றது. மேலும், காலை முதல் சாரல் மழை பெய்துவரும் நிலையிலும் மழையில் நனைந்தபடி பக்தர்கள் பக்தி முழக்கங்களை எழுப்பியவாறு தேரினை வடம்பிடித்து இழுத்து சென்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

guru 1 2026 03 85ca86bb53ac912c3f006a9faf68c083 1200x675 Thedalweb குரு பெயர்ச்சியால் செல்வத்தில் திளைக்க போகும் 3 ராசிகள்... உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 குரு பெயர்ச்சியால் செல்வத்தில் திளைக்க போகும் 3 ராசிகள்… உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஜோதிடத்தின்படி, கிரகங்களின் குருவாகவும், அதிர்ஷ்டத்திற்குக் காரணமாகவும் கருதப்படும் குரு, விரைவில்…