💡 திருவப்பூரில் திருவிழா கோலம்… மாசிக்கு முன் மகா கும்பாபிஷேக தேதி வெளியீடு… | ஆன்மிகம்

✍️ |
HYP 5675790 cropped 01012026 091821 1849068muthumariamman wate 2 3x2 Thedalweb திருவப்பூரில் திருவிழா கோலம்… மாசிக்கு முன் மகா கும்பாபிஷேக தேதி வெளியீடு... | ஆன்மிகம்
📌 Last Updated:Jan 01, 2026 4:46 PM ISTதிருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வரும் ஜனவரி 28, 2026 (தை 14, புதன்) அன்று காலை 9 மணி முதல் 10 மணிக்குள்…


Last Updated:

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வரும் ஜனவரி 28, 2026 (தை 14, புதன்) அன்று காலை 9 மணி முதல் 10 மணிக்குள் நடைபெற உள்ளது.

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் 
திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் 

புதுக்கோட்டை மாவட்டம், திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நாள் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

[ADSENSE-RESPONSIVE-UNIT]

சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் புதைந்து கிடந்து பூசாரி ஒருவரின் அருள்வாக்கின்படி அம்மனின் திருவுருவை பூமியில் இருந்து தோண்டி எடுத்து பச்சை கூடாரத்தில் பிரதிஷ்டை செய்து அப்பகுதி மக்கள் வழிபட்டு வந்து, அதன் பிறகு அம்மன் அருள் மூலம் அப்பகுதி மக்களால் வழிபாடு செய்யப்பட்ட பிரசித்தி பெற்ற கோவில் திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில்.

மக்கள் தொன்று தொட்டு இந்த அம்மனை வழிபட்டு வரும் இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசித்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். மாசி திருவிழாவுக்கு முன்பாக பூச்சொரிதல் விழா நடைபெறும்.

இதையும் வாசிக்க: ரயிலில் பயணிக்கப் போகிறீர்களா.? – தென் மாவட்ட இணைப்பு ரயில்களுக்கு புதிய டைமிங்…

இக்கோவிலுக்கு குழந்தை வரம் வேண்டுவோர், தீராத நோய்கள் நீங்கிட வருவோர், வேலை வாய்ப்பு கேட்டு வருவோர், குடும்ப பிரச்சினைகள் தீர்த்திட வேண்டி வருவோர், திருமணம் கைகூட, தடைப்பட்ட திருமணம் நடந்தேற வருவோர் என அனைவரது குறைகளையும் நீக்கி அருள் மாறிப் பொழிகின்றாள் அன்னை முத்துமாரி என்றும், மேலும் அம்மை நோய் கண்டவர்கள் குடும்பத்தில் யாரேனும் ஒருவர் வந்து தினமும் வழிபட அம்மை நோய் விரைவில் குணமடையும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. அந்த வகையில் புதுக்கோட்டை, திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா செய்வதற்காக பாலாலயம் எழுப்பப்பட்டு திருப்பணிகள் நடந்து வந்தது.

இந்த நிலையில் திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வரும் ஜனவரி 28, 2026 (தை 14, புதன்) அன்று காலை 9 மணி முதல் 10 மணிக்குள் நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக கோவில் கோபுரங்கள் புதுப்பிக்கப்பட்டு, முகப்பு மண்டபம் கட்டும் பணி நிறைவு பெறும் நிலையில் உள்ளது. மேலும் யாகசாலை அமைப்பதற்கான பந்தல்கால் நடும் விழா டிசம்பர் 29, 2025-ல் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

guru 1 2026 03 85ca86bb53ac912c3f006a9faf68c083 1200x675 Thedalweb குரு பெயர்ச்சியால் செல்வத்தில் திளைக்க போகும் 3 ராசிகள்... உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

💡 குரு பெயர்ச்சியால் செல்வத்தில் திளைக்க போகும் 3 ராசிகள்… உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஜோதிடத்தின்படி, கிரகங்களின் குருவாகவும், அதிர்ஷ்டத்திற்குக் காரணமாகவும் கருதப்படும் குரு, விரைவில்…