🚀 மன குறையை நீக்கும் பாதயாத்திரை… முருகன் பக்தர்களின் நம்பிக்கை பயணம் இது ! | திருநெல்வேலி

✍️ |
HYP 5701762 cropped 13012026 201212 img 20260113 201151 waterm 2 3x2 Thedalweb மன குறையை நீக்கும் பாதயாத்திரை... முருகன் பக்தர்களின் நம்பிக்கை பயணம் இது ! | திருநெல்வேலி
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Jan 16, 2026 4:55 PM ISTமுருகனுக்குரிய விசேஷ நாட்களில் பல நாட்கள் விரதம் இருந்து காவடி சுமந்து, முருகனை பாதயாத்திரையாக சென்று தரிசித்தால், கர்ம வினைகள் நீங்கி மன அமைதி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.+ முருகன் பாதயாத்திரைதைப்பூச திருவிழா பிப்ரவரி 1ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது

2
இதையொட்டி, கடந்த சில நாட்களாக மாலை அணிந்து விரதம் தொடங்கிய ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள், அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பாத யாத்திரையாக புறப்பட்டுள்ளனர்

3
தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களைச் சேர்ந்த பாபநாசம், அம்பாசமுத்திரம், சேரன்மாதேவி, முக்கூடல், மானூர், தேவர்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள், நெல்லை வழியாக திருச்செந்தூரை
[ADSENSE-RESPONSIVE-UNIT]

📌 Last Updated:Jan 16, 2026 4:55 PM ISTமுருகனுக்குரிய விசேஷ நாட்களில் பல நாட்கள் விரதம் இருந்து காவடி சுமந்து, முருகனை பாதயாத்திரையாக சென்று தரிசித்தால், கர்ம வினைகள் நீங்கி மன அமைதி கிடைக்கும் என்பது பக்தர்களின்…


Last Updated:

முருகனுக்குரிய விசேஷ நாட்களில் பல நாட்கள் விரதம் இருந்து காவடி சுமந்து, முருகனை பாதயாத்திரையாக சென்று தரிசித்தால், கர்ம வினைகள் நீங்கி மன அமைதி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

Rapid Read
+

முருகன்

முருகன் பாதயாத்திரை

தைப்பூச திருவிழா பிப்ரவரி 1ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, கடந்த சில நாட்களாக மாலை அணிந்து விரதம் தொடங்கிய ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள், அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பாத யாத்திரையாக புறப்பட்டுள்ளனர். தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களைச் சேர்ந்த பாபநாசம், அம்பாசமுத்திரம், சேரன்மாதேவி, முக்கூடல், மானூர், தேவர்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள், நெல்லை வழியாக திருச்செந்தூரை நோக்கி நடைபயணமாகச் செல்கின்றனர்.

ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமிகள் என பல்வேறு வயதினரும் பச்சை நிற ஆடை அணிந்து, பால்குடம், காவடி எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக பாத யாத்திரையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அலங்கரிக்கப்பட்ட லோடு ஆட்டோ, மினி லாரி உள்ளிட்ட வாகனங்களில் முருகப் பெருமானின் உருவப்படம் மற்றும் சிலைகளை வைத்து, திருப்புகழ் பாடல்களைப் பாடியபடி பலர் பயணிக்கின்றனர். பயணத்தின் போது அவர்கள் முடிவு செய்த இடங்களில் ஓய்வெடுத்து மீண்டும் நடைபயணத்தைத் தொடருகின்றனர்.

இந்த பாத யாத்திரை குறித்து பக்தர்கள் கூறுகையில், “திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடைபெறும் தைப்பூச விழாவில் பாத யாத்திரை ஒரு தனிச்சிறப்பாக விளங்குகிறது. இதற்காக சிலர் மார்கழி மாதத்திலேயே துளசி மாலை அணிந்து விரதத்தைத் தொடங்குகின்றனர். இன்னும் சிலர் தை மாதம் தொடங்கியதும் முருகனை நினைத்து விரதம் மேற்கொள்கிறார்கள். அதனால் தை மாதம் தொடங்கியவுடன் திருச்செந்தூரில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கிறது. தைப்பூசத்தை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘முருகா… முருகா…’ என்ற சரணகோஷம் முழங்க காவடி சுமந்து நடைபயணமாக வருகிறார்கள்.

இதையும் வாசிக்க : தை அமாவாசை…. மதுரையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு சிறப்பு ரயில் இயக்கம்..!

பாத யாத்திரை என்பது கடினமான ஒரு ஆன்மிகப் பயணம். இதற்கு உடல் ஆரோக்கியத்துடன் மன பலமும் அவசியம். நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் நடந்தே சென்று இறைவனை தரிசிப்பது, ஒருவரின் பொறுமை, தைரியம், தன்னம்பிக்கை ஆகியவற்றை வளர்க்கிறது. விருப்பத்துடன் கடினமான ஒரு செயலையை நிறைவேற்றுவது, மனிதனுக்குள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது. கர்ம வினைகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தையும், சிந்தனை தெளிவையும் இத்தகைய பிரார்த்தனைகள் வழங்குகின்றன. உடலை வருத்திக் கொண்டு விரதம் இருப்பது, உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சியைத் தருகிறது.

பல வழிமுறைகளில் மக்கள் இறைவழிபாடு செய்து வருகின்றனர். திருப்பதிக்கு பாதயாத்திரை செல்வது, ஐயப்பனுக்கு பல நாட்கள் கடுமையான விரதம் இருந்து வழிபடுவது, தமிழ் கடவுளான முருகனுக்குரிய விசேஷ நாட்களில் பாதயாத்திரை மேற்கொள்வது போன்ற பல்வேறு வழிபாட்டு முறைகள் உள்ளன.முருகனுக்குரிய விசேஷ நாட்களில் பல நாட்கள் விரதம் இருந்து காவடி சுமந்து, முருகனை பாதயாத்திரையாக சென்று தரிசித்தால், கர்ம வினைகள் நீங்கி மன அமைதி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது” என தெரிவித்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

Tortoise Vastu 2026 03 94c350dd4c3da8e353c300180b7ab0b3 1200x675 Thedalweb Tortoise | உங்க வீட்டில் ஆமை சிலை வைத்திருக்கிறீர்களா? இந்த தவறை மட்டும் செஞ்சிடாதீங்க..! | ஆன்மீகம் போட்டோகேலரி

📌 Tortoise | உங்க வீட்டில் ஆமை சிலை வைத்திருக்கிறீர்களா? இந்த தவறை மட்டும் செஞ்சிடாதீங்க..! | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஆமையைக் கொண்டுவருவதற்கு இதுவே மிகவும் புனிதமான நாள் 2 வாஸ்து…

Tiruparankundram 2026 03 018d0e81c99485b98e18d9758c99f612 1200x675 Thedalweb திருப்பரங்குன்றம் தீப விவகாரம்.. உத்தரவு மீறினால் கடும் நடவடிக்கை.. மதுரை உயர்நீதிமன்றம் வார்னிங்..!! | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

⚡ திருப்பரங்குன்றம் தீப விவகாரம்.. உத்தரவு மீறினால் கடும் நடவடிக்கை.. மதுரை உயர்நீதிமன்றம் வார்னிங்..!! | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

📌 Last Updated:Mar 05, 2026 7:27 AM ISTமலை மீதுள்ள தீபத்தூணில் 5 பேரை வழிபட நடத்த…