சுவையான வாத்துக்கறி குழம்பு

✍️ smurali35 |
tasty duck curry recipe thedalweb Thedalweb சுவையான வாத்துக்கறி குழம்பு
68 / 100 SEO Score

இதுவரை சிக்கன், மட்டன், வான்கோழி ( சுவையான வாத்துக்கறி குழம்பு)ஆகியவற்றைக் கொண்டு எப்படி குழம்பு, கிரேவி செய்வதென்று பார்த்தோம். இன்று நாம் பார்க்கப் போவது வாத்துக்கறி குழம்பு. இந்த குழம்பு மிகவும் சுவையாக இருப்பதோடு, உடலுக்கு வாத்துக்கறி மிகவும் நல்லதும் கூட. எனவே இந்த வாரம் இதனை முயற்சித்துப் பாருங்கள்.

சரி, இப்போது அந்த வாத்துக்கறி குழம்பை எப்படி எளிய முறையில் செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வாத்துக்கறி – 1/2 கிலோ

வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

பூண்டு – 7-10

பற்கள் தக்காளி – 1 (நறுக்கியது)

மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்

கொத்தமல்லி – சிறிது

எண்ணெய் – தேவையான அளவு

சீரகம் – 1/4 டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிது

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முட்டை மலாய் மசாலா முதலில் வாத்துக்கறியை நன்கு சுத்தமாக நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் வெங்காயம், பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பின்பு அதில் தக்காளி, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகுத் தூள் சேர்த்து பிரட்டி, அத்துடன் வாத்துக்கறியை சேர்த்து கிளறி, மூடி வைத்து சிறிது நேரம் வேக வைக்க வேண்டும்.

பிறகு அதில் 2-4 கப் தண்ணீர் ஊற்றி, நன்கு கொதிக்க விட வேண்டும். கறியானது நன்கு வெந்து, கிரேவி போன்று சற்று கெட்டியானதும், அதில் கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், வாத்துக்கறி குழம்பு ரெடி!!!

🔗 Share this post

smurali35

📚 Related Posts

No related posts found.