📌 அனுமன் ஜெயந்தி விழா!! 1,00,008 வடை மாலையில் ஜொலித்த நாமக்கல் ஆஞ்சநேயர்… | ஆன்மிகம்

✍️ |
HYP 5650236 cropped 19122025 162722 img20251219wa0022 watermar 1 3x2 Thedalweb அனுமன் ஜெயந்தி விழா!! 1,00,008 வடை மாலையில் ஜொலித்த நாமக்கல் ஆஞ்சநேயர்... | ஆன்மிகம்
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Dec 19, 2025 5:24 PM ISTHanuman Jayanti Namakkal | நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு மனம் உருகி வழிபட்ட பக்தர்கள்.+ அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து ஆஞ்சநேயர் சுவாமியை தரிசனம் செய்தனர்

2
மார்கழி மாத அமாவாசையில் வரும் மூலம் நட்சத்திர தினத்தன்று அனுமன் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது

3
அனுமன் ஜெயந்தியை ஒட்டி நாமக்கல்லில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
ஒரே கல்லில் ஆன 18 அடி உயரம் கொண்ட நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து 8 வடைகள் மாலையாக அணிவிக்கப்பட்டு சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டது.காலை 4.40 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்பட்டனர்

5
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தர்கள்

📌 Last Updated:Dec 19, 2025 5:24 PM ISTHanuman Jayanti Namakkal | நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு மனம் உருகி வழிபட்ட பக்தர்கள்.+ அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து ஆஞ்சநேயர் சுவாமியை…


Last Updated:

Hanuman Jayanti Namakkal | நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு மனம் உருகி வழிபட்ட பக்தர்கள்.

+

அதிகாலை

அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து ஆஞ்சநேயர் சுவாமியை தரிசனம் செய்தனர். 

மார்கழி மாத அமாவாசையில் வரும் மூலம் நட்சத்திர தினத்தன்று அனுமன் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. அனுமன் ஜெயந்தியை ஒட்டி நாமக்கல்லில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஒரே கல்லில் ஆன 18 அடி உயரம் கொண்ட நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து 8 வடைகள் மாலையாக அணிவிக்கப்பட்டு சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டது.

காலை 4.40 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்பட்டனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தர்கள் மட்டுமின்றி பிற மாநிலங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து ஆஞ்சநேயர் சுவாமியை தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட நறுமண பொருட்களை கொண்டு அபிஷேகமும் அதனை தொடர்ந்து சுவாமிக்கு தங்க கவசம் அலங்காரமும் செய்யப்பட்டது.

அனுமன் ஜெயந்தியை ஒட்டி ஆஞ்சநேயர் கோவில் முழுவதும், ஒரு டன் வண்ண பூக்கள் கொண்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் ஆஞ்சநேயரை எளிதாக தரிசனம் செய்யும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு 2 வழிகளில் இலவச தரிசனமும், 250 ரூபாய் கட்டணத்தில் தரிசனம் செய்திடவும் அனுமதிக்கப்படுவர் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

இதையும் வாசிக்க: ஊட்டி பனி நம்ம கோவையிலும் இருக்கும் – வெதர்மேன் கொடுத்த ஜில் அப்டேட்…

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் நகரில் கோட்டை, பூங்கா சாலை வழியாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டது. மேலும் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு, 30 இடங்களில் கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டு 500க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

nellai 2025 12 97d64167f8205e94f91b770010accc06 3x2 Thedalweb முடிவடைந்த பணிகள்... ஜனவரி முதல் பயன்பாட்டுக்கு வரும் நெல்லையப்பர் கோயில் வெள்ளி தேர்..! | ஆன்மிகம்

⚡ முடிவடைந்த பணிகள்… ஜனவரி முதல் பயன்பாட்டுக்கு வரும் நெல்லையப்பர் கோயில் வெள்ளி தேர்..! | ஆன்மிகம்

📌 Last Updated:Dec 21, 2025 7:00 PM ISTபாளையங்கோட்டையில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று…

SABARIMALA 1 2025 11 10e633f8666bd7814910425fe8e11fb8 3x2 Thedalweb Sabarimala | சபரிமலையில் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடு.. மீறினால் கடும் நடவடிக்கை என எச்சரிக்கை..! | ஆன்மிகம்

🔥 Sabarimala | சபரிமலையில் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடு.. மீறினால் கடும் நடவடிக்கை என எச்சரிக்கை..! | ஆன்மிகம்

📌 இதனிடையே, சபரிமலையில் பதினெட்டு படி, சோபானம், சந்நிதானத்தின் திருமுற்றம், மாளிகைப்புறம் உள்ளிட்ட பகுதிகளில் மொபைல் போன் மற்றும்…