💡 அர்ஜுனனுக்கு பெருமாள் சிலையை பரிசளித்த இந்திரன்.. பயபக்தியுடன் வழிபடும் மக்கள் ! | திருநெல்வேலி

✍️ |
HYP 5671763 cropped 30122025 101721 img 20251230 061618 waterm 2 3x2 Thedalweb அர்ஜுனனுக்கு பெருமாள் சிலையை பரிசளித்த இந்திரன்.. பயபக்தியுடன் வழிபடும் மக்கள் ! | திருநெல்வேலி
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Dec 30, 2025 11:36 AM ISTபாளையங்கோட்டையில் ராஜகோபால சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி பரமபதவாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறப்பு வைபவம் நடைபெற்றது.+ அர்ஜுனனுக்கு பெருமாள் சிலையை பரிசளித்த இந்திரன்.வைகுண்ட ஏகாதசிக்கு முந்தைய தினம் வரை பகல் பத்து வைபவமும், பரமபத வாசல் திறக்கப்பட்ட பிறகு ராபத்து உற்சவமும் பெருமாள் கோவில்களில் நடத்தப்பட்டு வருகிறது

2
இதனை தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அழகிய மன்னார்ராஜகோபால சுவாமி கோவிலில் கடந்த 20ஆம் தேதி சுவாமி தாயார்களுக்கு ஏகாந்த திருமேனி அலங்காரத்துடன் துவங்கிய வைகுண்ட ஏகாதசி மகோத்சவம் நடந்து வருகிறது

3
வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு இந்த கோவிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
மதியம் ஒரு மணி வரை பெருமாள் அனந்தசயன சேவையும்,

📌 Last Updated:Dec 30, 2025 11:36 AM ISTபாளையங்கோட்டையில் ராஜகோபால சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி பரமபதவாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறப்பு வைபவம் நடைபெற்றது.+ அர்ஜுனனுக்கு பெருமாள் சிலையை பரிசளித்த இந்திரன்.வைகுண்ட ஏகாதசிக்கு முந்தைய தினம்…


Last Updated:

பாளையங்கோட்டையில் ராஜகோபால சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி பரமபதவாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறப்பு வைபவம் நடைபெற்றது.

Rapid Read
+

அர்ஜுனனுக்கு

அர்ஜுனனுக்கு பெருமாள் சிலையை பரிசளித்த இந்திரன்.

வைகுண்ட ஏகாதசிக்கு முந்தைய தினம் வரை பகல் பத்து வைபவமும், பரமபத வாசல் திறக்கப்பட்ட பிறகு ராபத்து உற்சவமும் பெருமாள் கோவில்களில் நடத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அழகிய மன்னார்ராஜகோபால சுவாமி கோவிலில் கடந்த 20ஆம் தேதி சுவாமி தாயார்களுக்கு ஏகாந்த திருமேனி அலங்காரத்துடன் துவங்கிய வைகுண்ட ஏகாதசி மகோத்சவம் நடந்து வருகிறது. வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு இந்த கோவிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டது. மதியம் ஒரு மணி வரை பெருமாள் அனந்தசயன சேவையும், மாலை 5 மணிக்கு பெருமாள் ராஜகோபாலன் பரமபதவாசல் எழுந்தருளும் வைபவமும் நடக்கிறது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கும் வைபவம் நடக்கிறது.

இந்த கோவில் சிறப்பு மற்றும் சொர்க்கவாசல் வழிபாடு குறித்து பக்தர் நவநீதன் கூறுகையில், “முற்காலத்தில் சமுத்திரத்திற்கு நடுவே தோயமாபுரம் என்ற பட்டணம் இருந்தது. அங்கு வாழ்ந்த அரக்கர்கள் முப்பத்து முக்கோடி தேவர்களையும், முனிவர்களையும் உலக மக்களையும் மிகவும் துன்புறுத்தி வந்தனர். இந்நிலையில் பாண்டவர்களில் ஒருவரான அர்ஜூனன் இந்திரலோகத்துக்குச் செல்ல விரும்ம்பினான். அதன் பொருட்டு தேவேந்திரனிடம் அனுமதி வேண்டினான். அதற்கு இந்திரன், அர்ஜுனா நீ தராளமாக இந்திர லோகத்திற்கு வரலாம். அதற்கு முன் நீ செய்ய வேண்டிய காரியம் ஒன்று உள்ளது. கடலுக்கு நடுவில் தோயமாபுரத்தில் வாழும் அரக்கர் கூட்டதை நீ அழித்து, தர்மத்தை நிலைநாட்ட வேண்டும் என்று கூறினார்.

அர்ஜூனனும் இந்திரன் கூறியபடியே அரக்கர்களை எதிர்த்து போரிட்டான். ஆனால் அவர்களை வெல்வது அவ்வளவு எளிதாக இல்லை. அரக்கர்களை அழித்தாலும் அவர்கள் மீண்டும் எழுந்து வந்து போரிட்டனர். அர்ஜூனன் செய்வது அறியாமல் திகைத்து நின்றான். அப்பொது வானிலிருந்து “அர்ஜுனா அசுரர்கள் உன்னை கேலி செய்தால் மட்டுமே நீ அவர்களை வெல்ல முடியும். இதுதான் அவர்கள் பெற்றிருக்கும் வரம்” என்று ஓர் அசரீரி ஒலித்தது. உடனே அர்ஜூனன் மனதில் ஒரு திட்டம் தோன்றியது. போரில் தோற்று புறமுதுகு காட்டி ஓடுவது போல் ஓடினான். அதைக்கண்ட அசுரர்கள் அர்ஜூனனை பார்த்துகேலி செய்து கைதட்டி சிரித்தார்கள். அர்ஜூனனும் இதைதானே எதிர்பார்த்தான். உடனடியாக, தன்னிடம் இருந்த பாசுபத அஸ்திரத்தை ஏவி ஒட்டுமொத்த அசுரர் கூட்டத்தையும் கொன்று குவித்தான்.

அர்ஜுனனின் இந்த வீரதீர செயலை பாராட்டி அதுவரை தான் வணங்கி வந்த ஸ்ரீஇராஜ கோபாலரின் விக்கிரகத்தை பரிசாக கொடுத்தான் இந்திரன். அந்த ஸ்ரீஇராஜ கோபாலரின் விக்கிரகத்தை அனுதினமும் பயபக்தியுடன் பூஜித்து வணங்கி வந்தான் அர்ஜூனன். பிற்காலத்தில் அந்த விக்கிரகம், பெருமாள் திருவுள்ளப்படி அர்ஜூனனால் கங்கையில் சேர்க்கப்பட்டது. பின் ஒரு நாள் தென்னகதிதிலிருந்து புனித நீராட கங்கை வந்த பல்கி என்னும் பாண்டிய மன்னனின் கைகளில் கிடைக்கிறது. அந்த விக்கிரகத்தின் கண்டு ஆனந்தம் அடைந்தான் அப்பாண்டிய மன்னன். அதனை தன் ஆட்சிக்குட்பட்ட தென் தமிழகத்திற்கு கொண்டு வந்து தாமிரபரணி நதிக்கரையில் எழுந்தருளச் செய்தான். சுவாமிக்கு அழகிய கருவறையுடன் கூடிய திருக்கோவிலை கட்டி வணங்கி வந்தான். அதுவே தற்போதைய இத்திருக்கோவில்.

மனிதர்களின் ஓராண்டு தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். அதன்படி மார்கழி மாதம் தேவர்களுக்கு விடியற்காலை ஆகும். அதனால் தான் இந்த மாதத்தில் வரும் ஏகாதசி தனி சிறப்பு பெறுகிறது. மார்கழி மாதம் அதிகாலையில் எழுந்து திருப்பாவை பாடி பெருமாளை பின்தொடர்பவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என புராணங்கள் கூறுகின்றன. மாதத்திற்கு இரண்டு ஏகாதசி என வருடத்திற்கு 24 ஏகாதசி இருந்தாலும், மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசி சிறப்பு வாய்ந்தது” என தெரிவித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்