📌 ஆண்கள் மட்டும் பங்கேற்ற வினோத திருவிழா… 1,000 கிலோ கறியுடன் தடபுடலாக நடைபெற்ற விருந்து | ஆன்மிகம்

✍️ |
HYP 5682009 cropped 04012026 145045 20260104 144921 watermark 1 3x2 Thedalweb ஆண்கள் மட்டும் பங்கேற்ற வினோத திருவிழா... 1,000 கிலோ கறியுடன் தடபுடலாக நடைபெற்ற விருந்து | ஆன்மிகம்
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Jan 04, 2026 5:33 PM ISTஇந்த திருவிழாவில் 2000 கிலோ அரிசி, 60 கிடாய்கள் வெட்டப்பட்டு 1000 கிலோ கறி சமைத்து கறி விருந்து படையல் செய்யப்பட்டு அதை ஆண்கள் மட்டும் சமைத்து சாப்பிட்டனர்.+ திருமங்கலம் திருவிழாமதுரையில் திருமங்கலம் பகுதியில் உள்ள அனுப்பானடி கிராமத்தின் காவல் தெய்வமாக கரும்பாறை முத்தையாகோவில் கருதப்படுகின்றது

2
கரும்பாறை வடிவில் உள்ள முத்தையா கருப்பசாமி இடம் குழந்தை வரம், வேலைவாய்ப்பு, உடல் ஆரோக்கியத்திற்காக வேண்டிக் கொண்டு பக்தர்கள் கருப்பு நிற வெள்ளாடுகளை நேர்ந்து விடுவது வழக்கம்.ஆண்டுதோறும் ஜனவரி மாதம் முதல் வாரம் பயபக்தியுடன் வளர்க்கப்படும் ஆடுகளை கருப்புசாமிக்கு படையலிடும் திருவிழா நடைபெறும்

3
இதில் ஆண்கள் மட்டுமே பங்கேற்பார்கள்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
படையலின்போது கருப்பசாமி உக்கிரத்துடன் இருப்பார் என்ற

📌 Last Updated:Jan 04, 2026 5:33 PM ISTஇந்த திருவிழாவில் 2000 கிலோ அரிசி, 60 கிடாய்கள் வெட்டப்பட்டு 1000 கிலோ கறி சமைத்து கறி விருந்து படையல் செய்யப்பட்டு அதை ஆண்கள் மட்டும் சமைத்து சாப்பிட்டனர்.+…


Last Updated:

இந்த திருவிழாவில் 2000 கிலோ அரிசி, 60 கிடாய்கள் வெட்டப்பட்டு 1000 கிலோ கறி சமைத்து கறி விருந்து படையல் செய்யப்பட்டு அதை ஆண்கள் மட்டும் சமைத்து சாப்பிட்டனர்.

Rapid Read
+

திருமங்கலம்

திருமங்கலம் திருவிழா

மதுரையில் திருமங்கலம் பகுதியில் உள்ள அனுப்பானடி கிராமத்தின் காவல் தெய்வமாக கரும்பாறை முத்தையாகோவில் கருதப்படுகின்றது. கரும்பாறை வடிவில் உள்ள முத்தையா கருப்பசாமி இடம் குழந்தை வரம், வேலைவாய்ப்பு, உடல் ஆரோக்கியத்திற்காக வேண்டிக் கொண்டு பக்தர்கள் கருப்பு நிற வெள்ளாடுகளை நேர்ந்து விடுவது வழக்கம்.

ஆண்டுதோறும் ஜனவரி மாதம் முதல் வாரம் பயபக்தியுடன் வளர்க்கப்படும் ஆடுகளை கருப்புசாமிக்கு படையலிடும் திருவிழா நடைபெறும். இதில் ஆண்கள் மட்டுமே பங்கேற்பார்கள். படையலின்போது கருப்பசாமி உக்கிரத்துடன் இருப்பார் என்ற நம்பிக்கையால் பெண்களுக்கு அனுமதி கொடுப்பதில்லை.

இதையும் வாசிக்க: Pongal Gift : தை பொங்கல் பரிசு ₹3000 பணம்… ஒரு நாளில் எத்தனை பேருக்கு டோக்கன்… எப்படி பெறுவது?

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான திருவிழாவை முன்னிட்டு கோவிலைச் சுற்றியுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கருப்பு நிற கிடாய்களை நேர்த்திக்கடனாகச் செலுத்துவார்கள். இந்த திருவிழாவானது நேற்று நள்ளிரவு 1 மணிக்கு கோவிலில் கிடாய் வெட்டப்பட்டது. இந்த திருவிழாவில் 2000 கிலோ அரிசி, 60 கிடாய்கள் வெட்டப்பட்டு 1000 கிலோ கறி சமைத்து கறி விருந்து படையல் செய்யப்பட்டு அதை ஆண்கள் மட்டும் சமைத்து சாப்பிட்டனர். இதற்காக கரடிக்கல், செக்கானூரணி, மேலஉரப்பனூர் உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆண்கள் மட்டுமே இதில் கலந்து கொண்டனர்.

கறி விருந்து முடிந்தவுடன் இலையை எடுக்க மாட்டார்கள். இலை காய்ந்தபின்னர் ஒரு வாரம் கழித்து பெண்கள் அந்தப் பகுதிக்கு சாமி கும்பிட வருவார்கள். இந்த விநோத திருவிழாவில் சுற்றுப்புற கிராம மக்கள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்