💡 “ஆண் சூப்பர் ஸ்டார்களுக்கு 8 மணி நேரம் தான் வேலை; ஆனால்'' – பாலிவுட் குறித்து தீபிகா படுகோனே

✍️ |
``ஆண் சூப்பர் ஸ்டார்களுக்கு 8 மணி நேரம் தான் வேலை; ஆனால்'' - பாலிவுட் குறித்து தீபிகா படுகோனே
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே குழந்தை பிறந்த பிறகு படப்பிடிப்புக்கு வர சில நிபந்தனைகள் விதித்ததாக கூறப்படுகிறது

2
8 மணி நேரம் தான் பணியாற்றுவேன் என்று கூறியதாக தெரிகிறது

3
இந்த நிபந்தனையால் சில முக்கியமான படங்களில் இருந்து தீபிகா படுகோனே நீக்கப்பட்ட சம்பவங்களும் நடந்திருக்கின்றன
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
தீபிகா படுகோனேஇந்த சர்ச்சை குறித்து நடிகை தீபிகா படுகோனே முதல் முறையாக பேசியிருக்கிறார்

5
இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில்,''ஒரு பெண்ணாக இருப்பதால் நான் 8 மணி நேர வேலையை வலியுறுத்துவதாகவே இருக்கட்டும்.ஆனால் இந்திய திரையுலகில் பல சூப்பர் ஸ்டார்கள், ஆண் சூப்பர் ஸ்டார்கள் பல ஆண்டுகளாக 8 மணி நேரம் தான் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்

📌 பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே குழந்தை பிறந்த பிறகு படப்பிடிப்புக்கு வர சில நிபந்தனைகள் விதித்ததாக கூறப்படுகிறது. 8 மணி நேரம் தான் பணியாற்றுவேன் என்று கூறியதாக தெரிகிறது. இந்த நிபந்தனையால் சில முக்கியமான படங்களில் இருந்து…


பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே குழந்தை பிறந்த பிறகு படப்பிடிப்புக்கு வர சில நிபந்தனைகள் விதித்ததாக கூறப்படுகிறது. 8 மணி நேரம் தான் பணியாற்றுவேன் என்று கூறியதாக தெரிகிறது.

இந்த நிபந்தனையால் சில முக்கியமான படங்களில் இருந்து தீபிகா படுகோனே நீக்கப்பட்ட சம்பவங்களும் நடந்திருக்கின்றன.

தீபிகா படுகோனே
தீபிகா படுகோனே

இந்த சர்ச்சை குறித்து நடிகை தீபிகா படுகோனே முதல் முறையாக பேசியிருக்கிறார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில்,

”ஒரு பெண்ணாக இருப்பதால் நான் 8 மணி நேர வேலையை வலியுறுத்துவதாகவே இருக்கட்டும்.

ஆனால் இந்திய திரையுலகில் பல சூப்பர் ஸ்டார்கள், ஆண் சூப்பர் ஸ்டார்கள் பல ஆண்டுகளாக 8 மணி நேரம் தான் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது குறித்து தலைப்புச் செய்திகளாக வெளியில் வருவதில்லை.

நான் இப்போது அவர்களின் பெயர்களைச் சொல்லி இதை முழு விஷயமாக மாற்ற விரும்பவில்லை, ஆனால் பல ஆண்டுகளாக ஆண் நடிகர்கள் 8 மணி நேரம் வேலை செய்வது அனைவரும் வெளிப்படையாக அறிந்த ஒன்று.

அவர்களில் பலர் திங்கள் முதல் வெள்ளி வரை 8 மணி நேரம் மட்டுமே வேலை செய்கிறார்கள், அவர்கள் வார இறுதி நாட்களில் வேலை செய்வதில்லை. பாலிவுட்டில் இவ்விவகாரத்தில் இரட்டை வேடம் போடப்படுகிறது.

இந்திய திரைப்படத் துறை ஒரு ‘தொழில்’ என்று அழைக்கப்பட்டாலும், அது அமைப்புசாரா ஒன்றாகவே இருக்கிறது.

இந்திய திரைப்படத் துறை ஒரு ‘தொழில்’ என்று அழைக்கப்பட்டாலும், உண்மையில் ஒருபோதும் அது தொழில் துறை போன்று செயல்பட்டதில்லை என்பதுதான் பெரிய பிரச்சினை என்று நான் நினைக்கிறேன்.

இது மிகவும் வரையறுக்கப்படாத ஒன்றாக இருக்கிறது. மேலும் சரியான அமைப்புகளையும் கட்டமைப்பையும் நாம் கொண்டு வர வேண்டிய நேரம் இது.

தீபிகா படுகோனே
தீபிகா படுகோனே

இப்போது நிறைய பெண்களும், புதிய தாய்மார்களும் எட்டு மணி நேரம் வேலை செய்யத் தொடங்கி இருப்பதை நான் அறிவேன்.

ஆனால் ஆச்சரியப்படும் விதமாக அவை தலைப்புச் செய்திகளில் வருவதில்லை. எனவே இதைப் பற்றி எனக்கே உறுதியாகத் தெரியவில்லை. நியாயமான வேலை மற்றும் பணி செய்யும் சூழ்நிலைக்காக பல நேரங்களில் போராடி இருக்கிறேன். இது எனக்குப் புதிதல்ல.

சம்பளத்தைப் பொறுத்தவரை, அதனுடன் வரும் எதையும் சமாளிக்க வேண்டியிருந்தது. அதை என்னவென்று அழைப்பது என்று கூட எனக்குத் தெரியவில்லை, ஆனால் நான் எப்போதும் என் போராட்டங்களை அமைதியான முறையில் நடத்துவேன்.

சில விசித்திரமான காரணங்களுக்காக, சில நேரங்களில் அவை பகிரங்கமாகிவிடும். ஆனால் அமைதியாகவும் கண்ணியமாகவும் என் போராட்டங்களை நடத்துவது எனக்குத் தெரிந்த வழி” என்று தெரிவித்தார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

'ஒரு கிடாயின் கருணை மனு'வில் என்னை நடிக்க வைக்க நினைத்தார்' - யோகி பாபு உருக்கம் late director suresh sangaiah wife shares the moment he received the cheque from yoghi babu

🔥 ‘ஒரு கிடாயின் கருணை மனு’வில் என்னை நடிக்க வைக்க நினைத்தார்’ – யோகி பாபு உருக்கம் late director suresh sangaiah wife shares the moment he received the cheque from yoghi babu

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 நேற்று நடந்த இதன் பிரஸ் மீட்டில் பங்கேற்ற யோகி பாபு,…

ஹைக்கூ கவிதைப்போட்டி: "விழாவை லிங்குசாமி நடத்துவதில் உள்ள ஒழுக்கம் பிரமிக்க வைக்குது" - வியக்கும் கவிஞர். | director lingusamy's friend shares his experinece and memories of lingu function

💡 ஹைக்கூ கவிதைப்போட்டி: “விழாவை லிங்குசாமி நடத்துவதில் உள்ள ஒழுக்கம் பிரமிக்க வைக்குது” – வியக்கும் கவிஞர். | director lingusamy’s friend shares his experinece and memories of lingu function

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 கவிக்கோ அப்துல் ரகுமான் பெயரில் இயக்குநரும் கவிஞருமான லிங்குசாமி நடத்தி…