⚡ இந்த நாட்களில் திருத்தணி கோயில் போறீங்களா…? அப்போ இதை அவசியம் தெரிஞ்சுக்கோங்க..! | ஆன்மிகம்

✍️ |
thiruththani 2026 01 4ec0559a78663138f450a99c2f7b5540 3x2 Thedalweb இந்த நாட்களில் திருத்தணி கோயில் போறீங்களா...? அப்போ இதை அவசியம் தெரிஞ்சுக்கோங்க..! | ஆன்மிகம்
📌 Last Updated:Jan 14, 2026 7:33 PM ISTதை மாத விசேஷ நாட்கள் மற்றும் அரசு விடுமுறை தினங்களை முன்னிட்டு, திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சார்பில் முக்கியமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.News18தை மாத விசேஷ நாட்கள்…


Last Updated:

தை மாத விசேஷ நாட்கள் மற்றும் அரசு விடுமுறை தினங்களை முன்னிட்டு, திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சார்பில் முக்கியமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News18
News18

தை மாத விசேஷ நாட்கள் மற்றும் அரசு விடுமுறை தினங்களை முன்னிட்டு, திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக போக்குவரத்து மாற்றங்கள் மற்றும் சிறப்பு ஏற்பாடுகளைத் திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

[ADSENSE-RESPONSIVE-UNIT]

கோயில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ஜனவரி 17, 26, 27 (தை கிருத்திகை), 28 (முகூர்த்த நாள்) மற்றும் பிப்ரவரி 1 (தைப்பூசம்) ஆகிய நாட்களில் பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் நெரிசலற்ற தரிசனத்தை உறுதி செய்ய பின்வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

மலைப்பாதை நுழைவு வாயிலிலிருந்து மலைக்கோயில் படாசெட்டிக்குளம் வரை, திருக்கோயில் சார்பாக இலவச பேருந்துகள் இயக்கப்படும் எனவும் மேற்கண்ட விசேஷ நாட்களில் மலைக்கோயிலுக்கு ஆட்டோக்கள் செல்ல அனுமதி இல்லை எனவும் கூறியுள்ளது. மேலும், மலைக்கோயிலில் உள்ள இடவசதியைப் பொறுத்து, பக்தர்கள் ஓட்டி வரும் கார்கள் அனுமதிக்கப்படும் எனவும் இருசக்கர வாகனங்கள் வழக்கம்போல் மலைக்கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கப்படும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

வெளியூர்களிலிருந்து வரும் இதர பேருந்துகளை நிறுத்துவதற்குத் திருக்கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் கட்டணமில்லா வாகன நிறுத்த வசதி செய்யப்பட்டுள்ளதாகவும்பக்தர்கள் இந்த நடைமுறைகளுக்கு ஒத்துழைப்பு நல்கி, முருகப்பெருமானை சிரமமின்றி தரிசனம் செய்யுமாறும் திருக்கோயில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்