🚀 இஸ்ரேல் – ஈரான் போர்: "கத்தாரில் நான் சென்றதுதான் கடைசி விமானம்" – சந்தோஷ் நாராயணன் பதிவு

✍️ |
இஸ்ரேல் - ஈரான் போர்: "கத்தாரில் நான் சென்றதுதான் கடைசி விமானம்" - சந்தோஷ் நாராயணன் பதிவு
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா நாடுகள் போர் தொடுத்து வருகிறது

2
ஈரானின் அணு சக்தி மையங்கள், அணு சக்தி உள்கட்டமைப்புகள், ராணுவ தளங்கள் என பல்வேறு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது

3
இந்தத் தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி அவரது குடும்பத்தினர், ஈரான் பாதுகாப்புத்துறை மந்திரி அமீர், ஈரான் புரட்சிப்படை தளபதி முகமது உள்ளிட்ட பலர் கொல்லப்பட்டனர்.இஸ்ரேல் – ஈரான் தாக்குதல் இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளங்கள் அமைந்துள்ள நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
இந்த மோதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது

5
வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தாரும் ஈரானிய தாக்குதலால் பாதிப்பு அடைந்திருக்கிறது.

📌 ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா நாடுகள் போர் தொடுத்து வருகிறது. ஈரானின் அணு சக்தி மையங்கள், அணு சக்தி உள்கட்டமைப்புகள், ராணுவ தளங்கள் என பல்வேறு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இந்தத் தாக்குதலில் ஈரான் உச்ச…


ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா நாடுகள் போர் தொடுத்து வருகிறது. ஈரானின் அணு சக்தி மையங்கள், அணு சக்தி உள்கட்டமைப்புகள், ராணுவ தளங்கள் என பல்வேறு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

இந்தத் தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி அவரது குடும்பத்தினர், ஈரான் பாதுகாப்புத்துறை மந்திரி அமீர், ஈரான் புரட்சிப்படை தளபதி முகமது உள்ளிட்ட பலர் கொல்லப்பட்டனர்.

இஸ்ரேல் - ஈரான் தாக்குதல்
இஸ்ரேல் – ஈரான் தாக்குதல்

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளங்கள் அமைந்துள்ள நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த மோதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தாரும் ஈரானிய தாக்குதலால் பாதிப்பு அடைந்திருக்கிறது.

இந்நிலையில், கத்தாரில் நிலவும் பதற்றமான சூழ்நிலையால், அங்கிருந்து புறப்பட்ட கடைசி விமானத்தில் தப்பி அமெரிக்கா சென்றுள்ளதாக பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப்பதிவில், “மத்திய கிழக்கு நாடுகளின் விமான நிலையங்கள் முழுமையாக மூடப்படுவதற்குச் சற்று நேரத்திற்கு முன்பு அங்கிருந்து புறப்பட்ட கடைசி கத்தார் விமானம் நான் பயணித்த விமானமாகத் தான் இருக்கும்.

சந்தோஷ் நாராயணன்
சந்தோஷ் நாராயணன்

அங்குள்ள (கத்தார்) எனது சகோதர சகோதரிகளின் பாதுகாப்புக்காக இறைவனைப் பிரார்த்திக்கிறேன். நான் பாதுகாப்பாக அமெரிக்கா வந்து சேர்ந்துவிட்டேன். உங்களின் அக்கறையான மெசேஜ்களுக்கும் பிரார்த்தனைகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்” என்று பதிவிட்டிருக்கிறார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

காதல் ரீசெட் ரிப்பீட்: "இந்தப் படம் என் வாழ்கையில் கடைசி நிமிடம் வரை மறக்க முடியாத படம்"- எம்.எஸ்.பாஸ்கர்| M. S. Bhaskar has said this movie will remain unforgettable in his life until his very last moment.

🔥 காதல் ரீசெட் ரிப்பீட்: “இந்தப் படம் என் வாழ்கையில் கடைசி நிமிடம் வரை மறக்க முடியாத படம்”- எம்.எஸ்.பாஸ்கர்| M. S. Bhaskar has said this movie will remain unforgettable in his life until his very last moment.

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இயக்குநர் ஏ.எல் விஜய் இயக்கத்தில் "காதல் ரீசெட் ரிப்பீட்' படம்…

"‘மின்னலே’ திரைப்படத்திற்கும் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ திரைப்படத்திற்கும் சில ஒற்றுமைகள் இருக்கின்றன!" - ஹாரிஸ் ஜெயராஜ் |"There are some similarities between 'Minnale' and 'Kadal Reset Repeat'!" - Harris Jayaraj

💡 “‘மின்னலே’ திரைப்படத்திற்கும் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ திரைப்படத்திற்கும் சில ஒற்றுமைகள் இருக்கின்றன!” – ஹாரிஸ் ஜெயராஜ் |”There are some similarities between ‘Minnale’ and ‘Kadal Reset Repeat’!” – Harris Jayaraj

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் பேசுகையில், “1999-ல் கௌதம் மேனன் என்னைத்…