🚀 உலகின் மிக உயரமான கிருஷ்ணர் கோயில் எங்கே இருக்கு தெரியுமா? நம்ம இந்தியால தான்..! | ஆன்மிகம்

✍️ |
temple 2025 12 8275b43d7128693b2d29c275346c0716 3x2 Thedalweb உலகின் மிக உயரமான கிருஷ்ணர் கோயில் எங்கே இருக்கு தெரியுமா? நம்ம இந்தியால தான்..! | ஆன்மிகம்
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
இமயமலையில் உயரத்தில் அமைந்துள்ள இக்கோவில், வழிபாட்டுத் தலமாக மட்டுமல்லாமல், பனி படர்ந்த மலைகள், அமைதியான பள்ளத்தாக்குகள் மற்றும் இயற்கைச் சூழலின் அற்புதமான காட்சிகளையும் வழங்குகிறது

2
இந்தக் கோவிலின் தனித்துவமான இருப்பிடம் பக்தர்களுக்கு சவாலானதாகவும், அதே சமயம் மனநிறைவை அளிக்கும் ஒரு புனிதப் பயணமாகவும் அமைகிறது, எனவே இந்தக் கோவிலானது நம்பிக்கையையும், சாகசத்தையும் ஒன்றிணைக்கிறது என்றே சொல்லலாம்.இந்த புனிதத் தலமான யுல்லா கண்ட கிருஷ்ணா கோயில், ஓர் அமைதியான உறைபனி ஏரியின் நடுவே அமைந்துள்ளது

3
பாரம்பரிய ஹிமாச்சல கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ள இக்கோவிலின் அழகு நம்மை பிரம்மிக்க வைக்கிறது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
பொதுவாக பக்தர்கள் மற்றும் மலையேற்ற ஆர்வலர்கள் சம்மர் சீசனில் இங்கு வருவார்கள்

5
குறிப்பாக கிருஷ்ண ஜெயந்தி சமயத்தில் மேற்கொள்ளப்படும் இந்த மலையேற்றம், வெறும்

📌 இமயமலையில் உயரத்தில் அமைந்துள்ள இக்கோவில், வழிபாட்டுத் தலமாக மட்டுமல்லாமல், பனி படர்ந்த மலைகள், அமைதியான பள்ளத்தாக்குகள் மற்றும் இயற்கைச் சூழலின் அற்புதமான காட்சிகளையும் வழங்குகிறது. இந்தக் கோவிலின் தனித்துவமான இருப்பிடம் பக்தர்களுக்கு சவாலானதாகவும், அதே சமயம் மனநிறைவை…


இமயமலையில் உயரத்தில் அமைந்துள்ள இக்கோவில், வழிபாட்டுத் தலமாக மட்டுமல்லாமல், பனி படர்ந்த மலைகள், அமைதியான பள்ளத்தாக்குகள் மற்றும் இயற்கைச் சூழலின் அற்புதமான காட்சிகளையும் வழங்குகிறது. இந்தக் கோவிலின் தனித்துவமான இருப்பிடம் பக்தர்களுக்கு சவாலானதாகவும், அதே சமயம் மனநிறைவை அளிக்கும் ஒரு புனிதப் பயணமாகவும் அமைகிறது, எனவே இந்தக் கோவிலானது நம்பிக்கையையும், சாகசத்தையும் ஒன்றிணைக்கிறது என்றே சொல்லலாம்.

இந்த புனிதத் தலமான யுல்லா கண்ட கிருஷ்ணா கோயில், ஓர் அமைதியான உறைபனி ஏரியின் நடுவே அமைந்துள்ளது. பாரம்பரிய ஹிமாச்சல கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ள இக்கோவிலின் அழகு நம்மை பிரம்மிக்க வைக்கிறது. பொதுவாக பக்தர்கள் மற்றும் மலையேற்ற ஆர்வலர்கள் சம்மர் சீசனில் இங்கு வருவார்கள். குறிப்பாக கிருஷ்ண ஜெயந்தி சமயத்தில் மேற்கொள்ளப்படும் இந்த மலையேற்றம், வெறும் ஒரு சாகசப் பயணமாக மட்டுமல்லாமல், ஒரு புனித யாத்திரை பயணமாகவும் மாறுகிறது.

இந்தக் கோயிலில் ஜன்மாஷ்டமி பண்டிகை மிகுந்த ஆடம்பரத்துடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடப்படுகிறது. இந்த நேரத்தில், ஏராளமான பக்தர்கள் இங்கு தரிசனத்திற்காக வருகிறார்கள். மேலும், ஹோலி பண்டிகையன்று இங்கு பக்தர்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. கடுமையான பனிப்பொழிவு மற்றும் வானிலை காரணமாக, நவம்பர் முதல் ஏப்ரல் வரை இந்தக் கிருஷ்ணர் கோவிலுக்கான மலையேற்றப் பாதை தடை செய்யப்படும். எனவே இந்தக் கோவிலுக்கு வரும் பக்தர்கள் வெப்பமான காலநிலையில் தான் வருகை தருவார்கள்.

யுல்லா கண்டாவிற்குச் செல்ல சிறந்த நேரம்:

மே முதல் ஜூன் வரை: பசுமையான புல்வெளிகள் மற்றும் மிதமான வெப்பநிலை நிலவும்.

ஜூலை முதல் செப்டம்பர் வரை: அவ்வப்போது மழை பெய்யும், பசுமை இன்னும் அதிகமாகக் காணப்படும்.

அக்டோபர்: பனிப்பொழிவுக்கு முன்பு தெளிவான வானம் மற்றும் தூய்மையான காற்று இருக்கும்.

நவம்பர் முதல் ஏப்ரல் வரை: கடும் பனி காரணமாக இப்பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்படும்.

எப்படிச் செல்வது:

விமானம் மூலம்: சிம்லா விமான நிலையம் செல்ல வேண்டும்.

ரயில் மூலம்: கல்கா ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 270 கி.மீ தொலைவில் உள்ளது. கல்கா ரயில் நிலையத்திலிருந்து சாலை வழியாகவோ அல்லது கல்கா-சிம்லா “டாய் டிரெய்ன்” மூலமாகவோ சிம்லாவை அடையலாம்.

சாலை வழியாக: சிம்லா, சண்டிகர் மற்றும் டெல்லியில் இருந்து ரெகாங் பியோவிற்குச் செல்ல பேருந்து வசதிகள் உள்ளன. ரெகாங் பியோவில் இருந்து யுல்லா கிராமத்திற்குச் சென்று மலையேற்றத்தைத் தொடங்கலாம்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

guru 1 2026 03 85ca86bb53ac912c3f006a9faf68c083 1200x675 Thedalweb குரு பெயர்ச்சியால் செல்வத்தில் திளைக்க போகும் 3 ராசிகள்... உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

📌 குரு பெயர்ச்சியால் செல்வத்தில் திளைக்க போகும் 3 ராசிகள்… உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஜோதிடத்தின்படி, கிரகங்களின் குருவாகவும், அதிர்ஷ்டத்திற்குக் காரணமாகவும் கருதப்படும் குரு, விரைவில்…