📌 ஊட்டி எல்க்ஹில் முருகன் கோவில் தேர் திருவிழா… திரளான பக்தர்கள் வழிபாடு… | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

✍️ |
HYP 5738997 cropped 01022026 173025 inshot 20260201 172055129 1 Thedalweb ஊட்டி எல்க்ஹில் முருகன் கோவில் தேர் திருவிழா... திரளான பக்தர்கள் வழிபாடு... | Spirituality News (ஆன்மீக செய்திகள்)
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Feb 01, 2026 7:21 PM ISTஊட்டி எல்க்ஹில் முருகன் கோவிலில் நடைபெற்ற தைப்பூச திருத்தேர் ஊர்வல நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.+ எல்க்ஹில்ஊட்டியில் இயற்கை எழில் சூழ்ந்த பகுதியான திருமால் குன்றம் என்று அழைக்கப்படும் எல்க்ஹில் மலையில் எழுந்தருளியுள்ள 95 ஆண்டுகள் பழமையான பால தண்டாயுதபாணி சுவாமி கோயில் உள்ளது.இக்கோயில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது

2
இந்த கோயிலில் பிரபலமான மலேசியா முருகன் கோயிலில் உள்ளதை போன்ற 63 அடி உயர முருகன் சிலை உள்ளது.இங்கு ஆண்டுதோறும் தைப்பூசத்தன்று நடக்கும் தைப்பூச திருத்தேர் ஊர்வலம் பிரசித்தி பெற்றதாகும்

3
இந்த ஆண்டுக்கான தைப்பூச விழாவினை முன்னிட்டு பல்வேறு சிறப்பு பூஜைகள், அபிஷேக
[ADSENSE-RESPONSIVE-UNIT]

📌 Last Updated:Feb 01, 2026 7:21 PM ISTஊட்டி எல்க்ஹில் முருகன் கோவிலில் நடைபெற்ற தைப்பூச திருத்தேர் ஊர்வல நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.+ எல்க்ஹில்ஊட்டியில் இயற்கை எழில் சூழ்ந்த பகுதியான திருமால்…


Last Updated:

ஊட்டி எல்க்ஹில் முருகன் கோவிலில் நடைபெற்ற தைப்பூச திருத்தேர் ஊர்வல நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

+

எல்க்ஹில்

எல்க்ஹில்

ஊட்டியில் இயற்கை எழில் சூழ்ந்த பகுதியான திருமால் குன்றம் என்று அழைக்கப்படும் எல்க்ஹில் மலையில் எழுந்தருளியுள்ள 95 ஆண்டுகள் பழமையான பால தண்டாயுதபாணி சுவாமி கோயில் உள்ளது.

இக்கோயில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோயிலில் பிரபலமான மலேசியா முருகன் கோயிலில் உள்ளதை போன்ற 63 அடி உயர முருகன் சிலை உள்ளது.

இங்கு ஆண்டுதோறும் தைப்பூசத்தன்று நடக்கும் தைப்பூச திருத்தேர் ஊர்வலம் பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டுக்கான தைப்பூச விழாவினை முன்னிட்டு பல்வேறு சிறப்பு பூஜைகள், அபிஷேக பூஜைகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூச திருத்தேர் ஊர்வல நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் நீலகிரி மாவட்ட பாஜக தலைவர் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர், மேலும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த முருகன் தேரை வடம் பிடித்து துவக்கி வைத்தார்.

கோயிலில் இருந்து புறப்பட்ட தேர் அங்கிருந்து உதகை நகரில் மாரியம்மன் கோயில், பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக ஊர்வலம் வந்து மீண்டும் மாலையில் கோயிலை சென்றடையும். இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தாிசனம் செய்தனர்.

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து பக்தர் சரவணன் தெரிவிக்கையில், “நீலகையில் புகழ்பெற்ற விளங்கக்கூடிய திருமால் குன்றம் என்று அழைக்கக்கூடிய ஜலகண்டேஸ்வரி உடனமர் ஜலகண்டேஸ்வரர் பாலதண்டாயுதபாணி திருக்கோவில் தைப்பூசம் திருவிழா விமர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

பாத விநாயகரை வணங்கி ஆறுபடை வீடுகள் வழியாக குன்றின் மீது இருக்கக்கூடிய திருமால் முருகனை வழிபடுகின்றனர். பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வருகை பிரிந்து முருகனை வழிபடுகின்றனர்.

காலை 6 மணி முதல் அபிஷேகங்கள் மற்றும் அலங்காரங்களுடன் வெள்ளிக்கவசம் பூட்டப்பட்டு முருகன் ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்தார். காலையிலிருந்து சுமார் 11 மணி வரையிலும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை புரிந்திருப்பார்கள்” எனத் தெரிவித்தார்.

மேலும் முருக பக்தர் சுரேஷ் தெரிவிக்கையில், “இன்றைய தினம் ஊட்டி எல்க்ஹில் முருகன் கோவிலில் தைப்பூசம் திருவிழா விமர்ச்சயாக நடைபெற்று வருகிறது. இந்த கோவிலின் சிறப்பு என்னவென்றால் மலேசியாவில் உள்ளதை போல இந்த கோவிலிலும் மிகப் பிரமாண்டமான முருகர் சிலையை வடிவமைக்கப்பட்டுள்ளது. மலேசியா செல்ல முடியாதவர்களும் இந்த கோவிலுக்கு வந்து வணங்கி காணிக்கை செலுத்து வழிபடுகின்றனர்.

சிறந்த முறையில் அன்னதானமும் நடைபெற்று வருகிறது. வருட வருடம் ஏராளமான பக்தர்கள் வருகை புரிவார்கள். இந்த ஆண்டு அதனை காட்டிலும் ஒரு படை அதிகமான பக்தர்கள் வருகை புரிந்த வண்ணமே உள்ளார்கள்” எனத் தெரிவித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

HYP 5738718 cropped 01022026 145555 videoshot 20260201 142951 2 Thedalweb பழனி முருகன் கோவிலில் களைகட்டிய தைப்பூசத் திருவிழா... லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்... | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

🔥 பழனி முருகன் கோவிலில் களைகட்டிய தைப்பூசத் திருவிழா… லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்… | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

📌 Last Updated:Feb 01, 2026 5:25 PM ISTபுகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழாவைவைக் காண…

HYP 5738678 cropped 01022026 143534 inshot 20260201 143516919 2 Thedalweb கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவில் தைப்பூச விழா... அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்... | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

🔥 கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவில் தைப்பூச விழா… அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்… | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

📌 Last Updated:Feb 01, 2026 3:29 PM ISTகழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயில் தைப்பூசத் திருவிழாவின் சிகர நிகழ்வாக…