💡 எல்லநள்ளி ஐயப்பன் கோவில் தேர் திருவிழா… சாமியே ஐயப்போ கோஷத்துடன் தீ மிதித்த பக்தர்கள்… | ஆன்மிகம்

✍️ |
HYP 5658824 cropped 23122025 185148 inshot 20251223 184227205 2 3x2 Thedalweb எல்லநள்ளி ஐயப்பன் கோவில் தேர் திருவிழா... சாமியே ஐயப்போ கோஷத்துடன் தீ மிதித்த பக்தர்கள்... | ஆன்மிகம்
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Dec 24, 2025 7:44 PM ISTஎல்லநள்ளி ஐயப்பன் கோவில் தேர் திருவிழாவில் திரளான ஐயப்ப பக்தர்கள் சாமியே ஐயப்போ கோஷத்துடன் தீ மிதித்தனர்.+ எல்லநள்ளி ஐயப்பன் கோவில் தேர் திருவிழா..

2
சாமியே ஐயப்போ கோஷத்துடன் தீ மிதித்த பக்தர்கள்…நீலகிரி மாவட்டம் உதகையை அடுத்த எல்லநள்ளி பகுதியில் உள்ள ஐயப்பன் கோவிலில், நடப்பாண்டின், 31ஆம் ஆண்டு மண்டல மஹா உற்சவம் தேர் திருவிழா கடந்த, 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.தினமும், ஐயப்பன், மஞ்சமாதா சிறப்பு பூஜை, அபிஷேக ஆராதனையுடன் ஐயப்பன் பூஜை நடைபெற்றது

3
இதன் முக்கிய நிகழ்ச்சியாகத் தேரோட்ட நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.ஐயப்ப பக்தர்கள் வடம்பிடித்துத் தேர் பவனியை எடுத்துச் சென்றனர்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில், ஐயப்பன்

📌 Last Updated:Dec 24, 2025 7:44 PM ISTஎல்லநள்ளி ஐயப்பன் கோவில் தேர் திருவிழாவில் திரளான ஐயப்ப பக்தர்கள் சாமியே ஐயப்போ கோஷத்துடன் தீ மிதித்தனர்.+ எல்லநள்ளி ஐயப்பன் கோவில் தேர் திருவிழா… சாமியே ஐயப்போ கோஷத்துடன்…


Last Updated:

எல்லநள்ளி ஐயப்பன் கோவில் தேர் திருவிழாவில் திரளான ஐயப்ப பக்தர்கள் சாமியே ஐயப்போ கோஷத்துடன் தீ மிதித்தனர்.

+

எல்லநள்ளி

எல்லநள்ளி ஐயப்பன் கோவில் தேர் திருவிழா… சாமியே ஐயப்போ கோஷத்துடன் தீ மிதித்த பக்தர்கள்…

நீலகிரி மாவட்டம் உதகையை அடுத்த எல்லநள்ளி பகுதியில் உள்ள ஐயப்பன் கோவிலில், நடப்பாண்டின், 31ஆம் ஆண்டு மண்டல மஹா உற்சவம் தேர் திருவிழா கடந்த, 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தினமும், ஐயப்பன், மஞ்சமாதா சிறப்பு பூஜை, அபிஷேக ஆராதனையுடன் ஐயப்பன் பூஜை நடைபெற்றது. இதன் முக்கிய நிகழ்ச்சியாகத் தேரோட்ட நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

ஐயப்ப பக்தர்கள் வடம்பிடித்துத் தேர் பவனியை எடுத்துச் சென்றனர். பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில், ஐயப்பன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். செண்டை மேளம் முழங்க நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்த தேர் பவனி எல்லநள்ளி ஐயப்பன் கோவிலை வந்தடைந்தது.

இதனைத் தொடர்ந்து 3ஆம் ஆண்டு 18ஆம் படி பூஜை நடைபெற்றது. இதில் விரதம் இருந்து படி ஏறி நேர்ச்சை கடனை முடித்துக் கொண்டனர். தொடர்ந்து 11ஆம் ஆண்டு பூ குண்டம் நடைபெற்றது.

இதில் ஐயப்ப பக்தர்கள் தங்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்டனர். மேலும் கோவிலில் நடைபெற்ற நிகழ்வுகளையும் ஐயப்பன் தரிசனத்தையும் காண ஏராளமான பக்தர்கள் சுவாமியே, ஐயப்பா என்ற கோஷத்துடன் வருகை தந்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்