⚡ ஏரோது அரண்மனையில் Animatronicsஇல் இயங்கும் பொம்மைகள்… அசர வைக்கும் பாலப்பள்ளம் குடில்… | ஆன்மிகம்

✍️ |
HYP 5660018 cropped 24122025 121936 inshot 20251224 121916610 2 3x2 Thedalweb ஏரோது அரண்மனையில் Animatronicsஇல் இயங்கும் பொம்மைகள்... அசர வைக்கும் பாலப்பள்ளம் குடில்... | ஆன்மிகம்
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Dec 24, 2025 2:20 PM ISTPalapallam Kudil: ஆசியாவில் முதன்முறையாக சுமார் 50 விதமான அனிமோட்ரானிக் காட்சியமைப்புகள் இந்த பாலப்பள்ளம் கிறிஸ்துமஸ் குடிலில் அமைக்கப்பட்டுள்ளது.+ ஏரோது அரண்மனையில் Animatronicsஇல் இயங்கும் பொம்மைகள்..

2
அசர வைக்கும் பாலப்பள்ளம் குடில்…இயேசு கிறிஸ்து பிறந்த தினத்தை கிறிஸ்துமஸ் பண்டிகையாக கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25ஆம் தேதி கொண்டாடுகிறார்கள்

3
அந்தவகையில் கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடுவதற்காக மும்முரமாக தயாராகி வருகிறார்கள்.கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக வீடுகள் மற்றும் தேவாலயங்களில் குடில்கள் கட்டுவது, வண்ண விளக்குகளால் அலங்கரித்து ஸ்டார்கள் தொங்க விடுவது போன்ற பல்வேறு பணிகளில் கிறிஸ்தவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
குமரி மாவட்டத்தை பொருத்தவரையில் கிறிஸ்துமஸ் பண்டிகை பிரமாண்டமாக

📌 Last Updated:Dec 24, 2025 2:20 PM ISTPalapallam Kudil: ஆசியாவில் முதன்முறையாக சுமார் 50 விதமான அனிமோட்ரானிக் காட்சியமைப்புகள் இந்த பாலப்பள்ளம் கிறிஸ்துமஸ் குடிலில் அமைக்கப்பட்டுள்ளது.+ ஏரோது அரண்மனையில் Animatronicsஇல் இயங்கும் பொம்மைகள்… அசர வைக்கும்…


Last Updated:

Palapallam Kudil: ஆசியாவில் முதன்முறையாக சுமார் 50 விதமான அனிமோட்ரானிக் காட்சியமைப்புகள் இந்த பாலப்பள்ளம் கிறிஸ்துமஸ் குடிலில் அமைக்கப்பட்டுள்ளது.

+

ஏரோது

ஏரோது அரண்மனையில் Animatronicsஇல் இயங்கும் பொம்மைகள்… அசர வைக்கும் பாலப்பள்ளம் குடில்…

இயேசு கிறிஸ்து பிறந்த தினத்தை கிறிஸ்துமஸ் பண்டிகையாக கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25ஆம் தேதி கொண்டாடுகிறார்கள். அந்தவகையில் கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடுவதற்காக மும்முரமாக தயாராகி வருகிறார்கள்.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக வீடுகள் மற்றும் தேவாலயங்களில் குடில்கள் கட்டுவது, வண்ண விளக்குகளால் அலங்கரித்து ஸ்டார்கள் தொங்க விடுவது போன்ற பல்வேறு பணிகளில் கிறிஸ்தவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். குமரி மாவட்டத்தை பொருத்தவரையில் கிறிஸ்துமஸ் பண்டிகை பிரமாண்டமாக கொண்டாடப்படும் நிலையில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பிரம்மாண்ட குடில்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பல லட்சம் செலவில் கன்னியாகுமரி மாவட்டம் பாலபள்ளத்தில் சினிமா செட் போன்று பிரம்மாண்ட குடில் அமைக்கப்பட்டுள்ளது. ஏரோது அரண்மனை போன்று அமைக்கப்பட்டுள்ள பாலபள்ளம் குடில் கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு நேற்று மாலை ஏழு முப்பது மணி அளவில் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது.

70 அடி உயரத்திலும் 50 அடி அகலத்திலும் அமைக்கப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட குடில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்து வருகிறது. மூன்று தளங்களை கொண்ட இந்த குடிலில் மூன்றாவது தளத்தில் பைபிளில் கூறப்பட்டுள்ள ஏரோது அரண்மனை குறித்த கதைகளில் வரும் கதாபாத்திரத்தின் சிற்பங்கள் இயங்குவது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டு வரை பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும் இந்த குடில் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. இது குறித்து கோவையை சேர்ந்த என்ஜினீயர் சேவியர் ரிச்சர்ட் கூறுகையில், “நான் கோயம்புத்தூரில் உள்ள ஒரு எஞ்சினியரிங் கல்லூரியில் Associate Innovation Officer ஆக பணிபுரிகிறேன்.

கடந்த ஐந்து முதல் ஆறு ஆண்டுகளாக கிறிஸ்துமஸ் குடில் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு, நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இதை உருவாக்கியுள்ளேன். குறிப்பாக, இந்த அனிமோட்ரானிக் (animatronics) குடிலில் எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், 3D பிரிண்டிங், IOT போன்ற பல நவீன தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து முழுமையான வடிவில் உருவாக்கியுள்ளோம்.

ஆசியாவில் முதன்முறையாக நாங்கள் குமரி மாவட்டம் பாலப்பள்ளத்தில் இந்த அனிமோட்ரானிக் கிறிஸ்துமஸ் குடிலை உருவாக்கியிருக்கிறோம். இந்த குடில் சுமார் 50 விதமான அனிமோட்ரானிக் காட்சியமைப்புகளை கொண்டுள்ளது. இயேசு குழந்தைகளை அரவணைக்கும் காட்சி, இராணுவத்தினர் இசைக்கருவி வாசிக்கும் தருணம், நூலகத்தில் புத்தகம் வாசிக்கும் காட்சி போன்ற பல அழகான தருணங்களை நுட்பமாக இணைத்துள்ளோம்.

இதனால் குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் இந்த கிறிஸ்துமஸ் குடிலை பார்த்து தொழில்நுட்பத்தையும் கற்பனைத் திறனையும் மேம்படுத்திக்கொள்ளலாம். இவ்வாறு அவர்களின் சமூக மற்றும் தொழில்நுட்ப அனுபவம் மேலும் வளரும் என்று நாங்கள் நம்புகிறோம்” எனத் தெரிவித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்