கடற்கரையில் நடைபெற்ற கங்கா ஆரத்தி… பயபக்தியுடன் கலந்து கொண்ட பக்தர்கள் ! | புதுச்சேரி

✍️ |
HYP 5622187 cropped 06122025 072549 1764986141557 watermark 06 1 3x2 Thedalweb கடற்கரையில் நடைபெற்ற கங்கா ஆரத்தி... பயபக்தியுடன் கலந்து கொண்ட பக்தர்கள் ! | புதுச்சேரி


Last Updated:

உலக நன்மை வேண்டி பஞ்ச பூதங்களை வணங்குகின்ற வகையில் 7 சப்த கன்னிகளை சாட்சியாக வைத்து 27 சுமங்கலி பெண்களை நட்சத்திரமாக பாவித்து நடைபெற்ற கங்கா ஆரத்தி நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Rapid Read
+

கடற்கரை

கடற்கரை சாலையில் நடைபெற்ற கங்கா ஆரத்தி.

உலக நன்மை, இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களை பாதுகாக்கவும், மழை பொழிந்து விவசாயம் செழிக்க வேண்டி பஞ்சபூதங்களை வணங்குகின்ற வகையில் சுமங்கலி பெண்கள் தீபம் ஏற்றி வணங்கும் கங்கா ஆரத்தி நிகழ்வு கடந்த நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 5-வது ஆண்டாக அலங்கரிக்கப்பட்ட விநாயகர், முருகன் ஆகிய சுவாமிகள் மனக்குள விநாயகர் கோவிலில் இருந்து வீதி உலாவாக  சென்று புதுச்சேரி கடற்கரையில் கங்கா ஆரத்தி நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் 7 குழந்தைகளை சப்த கன்னிகளாக பாவித்து பாத பூஜை செய்தும், 27 சுமங்கலி பெண்களை நட்சத்திரமாக பாவித்து தீபம் ஏற்றி அவர்களுக்கு கொட்டும் மழையில் ஆராதனை செய்யப்பட்டது. இதில் கலந்து கொண்ட சிவாச்சாரியார்கள் சிவ வாத்தியங்கள் முழங்க சுமங்கலி பெண்களுக்கு ஆரத்தி எடுத்து பஞ்சபூதங்களை வணங்கினர். இதில் புதுச்சேரி மட்டுமின்றி சுற்றுப்புறங்களில் இருந்து ஏராளமான சிவனடியார்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து சென்றனர்.

தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. கடற்கரை சாலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி மட்டுமல்லாமல் வெளி மாநில வெளி நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்