🚀 கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவில் தைப்பூச விழா… அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்… | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

✍️ |
HYP 5738678 cropped 01022026 143534 inshot 20260201 143516919 2 Thedalweb கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவில் தைப்பூச விழா... அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்... | Spirituality News (ஆன்மீக செய்திகள்)
📌 Last Updated:Feb 01, 2026 3:29 PM ISTகழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயில் தைப்பூசத் திருவிழாவின் சிகர நிகழ்வாக இன்று நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.+ கழுகுமலைதென்பழனி என்று அழைக்கப்படும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி…


Last Updated:

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயில் தைப்பூசத் திருவிழாவின் சிகர நிகழ்வாக இன்று நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

+
[ADSENSE-RESPONSIVE-UNIT]

கழுகுமலை

கழுகுமலை

தென்பழனி என்று அழைக்கப்படும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் கடந்த மாதம் 23-ம் தேதி தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவிழா நாட்களில் கழுகாசலமூர்த்தி வள்ளி, தெய்வானை, சோமாஸ் கந்தர், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார மகா தீபாராதனை நடந்தது.

ஒவ்வொரு நாள் இரவும் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

இதையொட்டி அதிகாலை கோயில் நடைதிறக்கப்பட்டு கால சந்தி பூஜை, விளா பூஜை, சுப்பிரமணிய பூஜை நடந்தது. இதனை தொடர்ந்து கோ ரதத்தில் விநாயகர் பெருமானும், சட்ட ரதத்தில் சுவாமி கழுகாசலமூர்த்தி, வள்ளி, தெய்வானை அம்மன்களுடன் எழுந்தருளினர்.

தொடர்ந்து தேரோட்டம் தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். பின்னர் கோயிலில் சுவாமி மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது.

திருவிழாவில் நெல்லை, சாத்தூர், விருதுநகர், சிவகாசி, மதுரை, ராஜபாளையம் மற்றும் கோவில்பட்டி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி கழுகாசலமூர்த்தியை தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் 15, 6 அடி என அலகு குத்தி பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

HYP 5738315 cropped 01022026 104838 inshot 20260201 104747516 1 Thedalweb நெல்லுக்கு வேலியிட்ட நெல்லையப்பர்... தைப்பூச திருவிழாவில் திருவிளையாடல் நிகழ்வு... | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

📌 நெல்லுக்கு வேலியிட்ட நெல்லையப்பர்… தைப்பூச திருவிழாவில் திருவிளையாடல் நிகழ்வு… | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 தொடர்ந்து நடைபெற்று வரும் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, திருநெல்வேலி என்ற…

Vinayagar 2026 01 f351a7abc06a224fb3da4399824b20f7 Thedalweb Rasi Palan | தைப்பூசத்தன்று 6 ராசியினருக்கு அடிக்கப்போகுது ஜாக்பாட்.. உங்க ராசிக்கு எப்படி? பிப்ரவரி 01, 2026! | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 Rasi Palan | தைப்பூசத்தன்று 6 ராசியினருக்கு அடிக்கப்போகுது ஜாக்பாட்.. உங்க ராசிக்கு எப்படி? பிப்ரவரி 01, 2026! | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 மீனம்இன்று உங்களுக்குப் புதிய சாத்தியக்கூறுகளின் அறிகுறியைக் கொண்டுவரப் போகிறது 2…