🚀 காலம் மாறினாலும் வழிபாடு மாறவில்லை… கிடாவெட்டி படையலுடன் அம்மன் வழிபாடு… | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

✍️ |
HYP 5749362 cropped 07022026 003957 videocapture 2026020700394 2 Thedalweb காலம் மாறினாலும் வழிபாடு மாறவில்லை... கிடாவெட்டி படையலுடன் அம்மன் வழிபாடு... | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
📌 Last Updated:Feb 08, 2026 9:37 AM ISTசிவகாசி மக்களின் தனித்துவமான ஆன்மிக பாரம்பரியமாக இவ்வழிபாடு விளங்குகிறது.+ சிவகாசி பத்ரகாளியம்மன் கோவில்சிவகாசியில் உலக நன்மைக்காக பத்ரகாளியம்மனுக்கு 300 பெண்கள் குடும்பத்துடன் பாரம்பரிய பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.சிவகாசியில்…


Last Updated:

சிவகாசி மக்களின் தனித்துவமான ஆன்மிக பாரம்பரியமாக இவ்வழிபாடு விளங்குகிறது.

+
[ADSENSE-RESPONSIVE-UNIT]

சிவகாசி

சிவகாசி பத்ரகாளியம்மன் கோவில்

சிவகாசியில் உலக நன்மைக்காக பத்ரகாளியம்மனுக்கு 300 பெண்கள் குடும்பத்துடன் பாரம்பரிய பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.

சிவகாசியில் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் வளாகத்தில், உலக நன்மை, தொழில் வளம் மற்றும் சமூக ஒற்றுமை வேண்டி சுமார் 300 பெண்கள் தங்களது குடும்பத்தினருடன் இணைந்து சிறப்பு பொங்கல் வழிபாட்டில் ஈடுபட்டனர். நூற்றாண்டுகளாக தொடரும் இந்த பாரம்பரிய வழிபாடு, தை மாதத்தின் 3-ம் செவ்வாய்க்கிழமை ஒவ்வொரு ஆண்டும் ஒற்றுமையாக நடத்தப்பட்டு வருகிறது.

இதையொட்டி, அதிகாலை முதலே பெண்கள் பொங்கல் பானைகளை தலையில் சுமந்தபடி, மேள தாளத்துடன் சிவகாசி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக குடும்பத்தோடு ஊர்வலமாகச் சென்றனர். பக்தி பரவசத்துடன் நடைபெற்ற இந்த ஊர்வலம், பத்ரகாளியம்மன் கோவில் வளாகத்தை வந்தடைந்தது. பின்னர், வரிசையாக அமர்ந்து பொங்கல் பானைகளில் பொங்கல் வைத்து, குலவையிட்டு அம்மனை வணங்கி வழிபாடு செய்தனர். தொடர்ந்து கிடா வெட்டி, அம்மனுக்குப் படையலிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

உலக நன்மைக்காகவும், சிவகாசியின் பட்டாசு, அச்சு, தீப்பெட்டி உள்ளிட்ட தொழில்கள் மேலும் வளர்ச்சி பெறவும், சமூக ஒற்றுமை நிலைத்திருக்கவும் ஜாதி பேதமின்றி ஒன்றிணைந்து இவ்வழிபாட்டை நடத்தி வருவதாக பெண் பக்தர்கள் தெரிவித்தனர். தலைமுறை தலைமுறையாக அம்மன் மீது வைத்துள்ள ஆழ்ந்த நம்பிக்கையுடன் இந்த வழிபாடு தொடர்வதாகவும் அவர்கள் கூறினர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

HYP 5755190 cropped 10022026 100424 images 9 20260210t09572947 2 Thedalweb திருச்செந்தூர் முருகன் கோவில் மாசி திருவிழா... தேரோட்டம் என்னைக்குன்னு தெரியுமா..? | ஆன்மீகம் போட்டோகேலரி

📌 திருச்செந்தூர் முருகன் கோவில் மாசி திருவிழா… தேரோட்டம் என்னைக்குன்னு தெரியுமா..? | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 மார்ச் 4 ஆம் தேதி மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியுடன் மாசித்…

Train 5 2026 02 bd9f84215d921fca7954153f9aaa8f90 Thedalweb IRCTC Tour | 11 நாட்கள் அட்டகாச ஆன்மீக டூர்.. ரயில்வேயின் சூப்பர் திட்டம்.. எந்த ஊர்களுக்கு போகலாம்? டிக்கெட் எவ்வளவு?

✅ IRCTC Tour | 11 நாட்கள் அட்டகாச ஆன்மீக டூர்.. ரயில்வேயின் சூப்பர் திட்டம்.. எந்த ஊர்களுக்கு போகலாம்? டிக்கெட் எவ்வளவு?

📌 ஆன்மீக டூர் செல்ல வேண்டும் என காத்திருக்கும் பக்தர்களுக்கு வரபிரசாதமாக ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. Source link…

Tirupati ticket 2026 02 2d52af274c947f68dacdc67f2d83f98a Thedalweb Tirupati | திருப்பதி பக்தர்களுக்கு குட்நியூஸ்.. ஈஸியாக நிமிடத்தில் டிக்கெட் புக் செய்யலாம்.. இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க..! | ஆன்மீகம் போட்டோகேலரி

💡 Tirupati | திருப்பதி பக்தர்களுக்கு குட்நியூஸ்.. ஈஸியாக நிமிடத்தில் டிக்கெட் புக் செய்யலாம்.. இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க..! | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்த சேவையில் திருமலை மட்டுமல்லாமல், ஸ்ரீசைலம், கனிபாகம், அன்னவரம், விஜயவாடா,…