கும்பாபிஷேக விழா: 3000 -க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற தீர்த்தக் குட ஊர்வலம்…! | சேலம்

✍️ |
HYP 5623146 cropped 06122025 152115 inshot 20251206 151333229 1 3x2 Thedalweb கும்பாபிஷேக விழா: 3000 -க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற தீர்த்தக் குட ஊர்வலம்...! | சேலம்
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:December 06, 2025 9:01 PM ISTஎடப்பாடி அருகே உள்ள வெள்ளாண்டிவலசு காளியம்மன் கோவில் மகாகும்பாபிஷேக விழாவை முன்னிட்டு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று தீர்த்தக் குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.+ வெள்ளாண்டிவலசு காளியம்மன் கோவில் தீர்த்தக் குடம் ஊர்வலம்.சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே உள்ள வெள்ளாண்டிவலசு காளியம்மன் கோயில் மிகவும் பழமையான அம்மன் கோயில்களில் ஒன்றாகும்

2
இது ஓம் சக்தி காளியம்மன் மற்றும் முனியப்பன் சமேத கோயிலாக விளங்குகிறது

3
குறிப்பாக, மாசி மாதத்தில் இங்கு நடைபெறும் குண்டம் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது, இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்

4
இது அம்மனின் சக்தி மற்றும் நம்பிக்கையை பறைசாற்றுகிறது

5
எனவே, இந்தாண்டு இக்கோவிலில் கும்பாபிஷேக


Last Updated:

எடப்பாடி அருகே உள்ள வெள்ளாண்டிவலசு காளியம்மன் கோவில் மகாகும்பாபிஷேக விழாவை முன்னிட்டு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று தீர்த்தக் குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.

Rapid Read
+

வெள்ளாண்டிவலசு

வெள்ளாண்டிவலசு காளியம்மன் கோவில் தீர்த்தக் குடம் ஊர்வலம்.

சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே உள்ள வெள்ளாண்டிவலசு காளியம்மன் கோயில் மிகவும் பழமையான அம்மன் கோயில்களில் ஒன்றாகும். இது ஓம் சக்தி காளியம்மன் மற்றும் முனியப்பன் சமேத கோயிலாக விளங்குகிறது. குறிப்பாக, மாசி மாதத்தில் இங்கு நடைபெறும் குண்டம் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது, இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். இது அம்மனின் சக்தி மற்றும் நம்பிக்கையை பறைசாற்றுகிறது. எனவே, இந்தாண்டு இக்கோவிலில் கும்பாபிஷேக விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

காளியம்மன்கோவில் மகா கும்பாபிஷேக விழாவானது நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு தீர்த்தக்குடம் ஊர்வலம் நடைபெற்றது. இந்நிகழ்வில், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் கலந்துகொண்டு தீர்த்த குடம் எடுத்துச் சென்றனர். இந்த தீர்த்தக்குட ஊர்வலமானது கல்வடங்கம் காவிரி ஆற்றில் இருந்து புனித நீராடி, அங்கிருந்து தீர்த்தக் குடம் எடுத்துக் கொண்டு எடப்பாடி பேருந்து நிலையம் வழியாக வெள்ளாண்டிவலசு கோவில் வரை பட்டாசு வெடித்து, பம்பை, கேரள செண்டை மேளதாளங்கள் முழங்க காளை மாடுகளுடன் ஊர்வலமாக வந்தனர். அதனை தொடர்ந்து, அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் சுவாமியை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர். மேலும் தீர்த்த குடம் எடுத்து வந்த பக்தர்களுக்கு கோவில் நிர்வாக சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்