📌 கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம்… திரளான பக்தர்கள் தரிசனம்… | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

✍️ |
HYP 5779569 cropped 22022026 193523 inshot 20260222 193506486 2 Thedalweb கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம்... திரளான பக்தர்கள் தரிசனம்... | Spirituality News (ஆன்மீக செய்திகள்)
📌 Last Updated:Feb 22, 2026 8:25 PM ISTகொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் விழாவில் தமிழ்நாடு, கேரளாவில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.+ கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா குமரி மாவட்டத்தில்…


Last Updated:

கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் விழாவில் தமிழ்நாடு, கேரளாவில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

+
[ADSENSE-RESPONSIVE-UNIT]

கொல்லங்கோடு

கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா 

குமரி மாவட்டத்தில் பச்சிளம் குழந்தைகளுக்கு “தூக்க நேர்ச்சை” நடைபெறும் பிரசித்தி பெற்ற கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

இதில் குமரி மாவட்டம் மற்றும் அண்டை மாநிலமான கேரளாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.

மறு புனரமைப்பு பணிகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, யாகசாலை பூஜைகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தன. இன்று காலை வேத மந்திரங்கள் முழங்க, சிவாச்சாரியர்கள் புனித நீரை கலசங்களில் இருந்து ராஜகோபுரம் மற்றும் விமான கலசங்களுக்கு ஊற்றி மஹா கும்பாபிஷேகத்தை நடத்தினர்.

அதனைத் தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், தீபாராதனை மற்றும் மகா பிரசாதம் வழங்கப்பட்டது. தூக்க நேர்ச்சைக்காக குழந்தைகளைக் கொண்டு வந்த பெற்றோர்கள் சிறப்பு வழிபாடுகளில் கலந்து கொண்டு நேர்ச்சையை நிறைவேற்றினர்.

கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதிய நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன. விழாவை முன்னிட்டு சுற்றுவட்டாரப் பகுதிகளில் பக்தர்களின் வருகையால் திருவிழா சூழல் நிலவியது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

HYP 5779004 cropped 22022026 144123 inshot 20260222 144105957 2 Thedalweb திருச்செந்தூர் காவடி யாத்திரை... கன்னியாகுமரியிலிருந்து உற்சாகமாக கிளம்பிய பக்தர்கள்... | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

💡 திருச்செந்தூர் காவடி யாத்திரை… கன்னியாகுமரியிலிருந்து உற்சாகமாக கிளம்பிய பக்தர்கள்… | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 Last Updated:Feb 22, 2026 6:51 PM ISTபல்லாயிரக்கணக்கான பக்தர்கள்…

salary 1 2026 02 cce12858f439b977dbba593a044d173a Thedalweb நிதி யோகத்தால் இந்த 6 ராசிக்காரர்களின் சம்பளம் அதிகரிக்கப் போகுதாம்.. உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 நிதி யோகத்தால் இந்த 6 ராசிக்காரர்களின் சம்பளம் அதிகரிக்கப் போகுதாம்.. உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ரிஷபம்: இந்த ராசிக்காரர்களுக்கு, பணம் சம்பாதிக்கும் குரு இரண்டாவது வீட்டில்,…