🔥 சபரிமலை கட்டுக்கடங்காத கூட்டம் செயற்கையாக உருவாக்கப்பட்டதா..? மத்திய உளவுப்பிரிவு விசாரணை! | ஆன்மிகம்

✍️ |
sabarimalai 1 2026 01 99577e361929d3ea53df49dad9dd7f57 3x2 Thedalweb சபரிமலை கட்டுக்கடங்காத கூட்டம் செயற்கையாக உருவாக்கப்பட்டதா..? மத்திய உளவுப்பிரிவு விசாரணை! | ஆன்மிகம்
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Jan 11, 2026 7:37 AM ISTசபரிமலை ஐயப்பன் கோயிலில் மகர விளக்கு சீசனில் ஏற்பட்ட நெரிசல் குறித்து மத்திய உளவுப்பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.News18சபரிமலையில் நடப்பு மகர விளக்கு சீசனில் ஏற்பட்ட கட்டுக்கடங்காத கூட்டம், காவல் துறையால் செயற்கையாக உருவாக்கப்பட்டதா என்று மத்திய உளவுப்பிரிவு விசாரணை மேற்கொண்டு வருகிறது.சபரிமலை ஐயப்பன் கோயிலில் நீதிமன்ற உத்தரவின்படி நாள் ஒன்றுக்கு 80 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது

2
ஆனால், கடந்த 4, 5 மற்றும் 6-ஆம் தேதிகளில் ஒவ்வொரு நாளும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் திரண்டதால் கடுமையான நெரிசல் ஏற்பட்டது

3
இதில் பலரும் மயக்கமடைந்த நிலையில், பக்தர்களின் வருகையைக் கட்டுப்படுத்தாமல் காவல் துறையே நெரிசலை
[ADSENSE-RESPONSIVE-UNIT]

📌 Last Updated:Jan 11, 2026 7:37 AM ISTசபரிமலை ஐயப்பன் கோயிலில் மகர விளக்கு சீசனில் ஏற்பட்ட நெரிசல் குறித்து மத்திய உளவுப்பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.News18சபரிமலையில் நடப்பு மகர விளக்கு சீசனில் ஏற்பட்ட கட்டுக்கடங்காத கூட்டம்,…


Last Updated:

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகர விளக்கு சீசனில் ஏற்பட்ட நெரிசல் குறித்து மத்திய உளவுப்பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.

News18
News18

சபரிமலையில் நடப்பு மகர விளக்கு சீசனில் ஏற்பட்ட கட்டுக்கடங்காத கூட்டம், காவல் துறையால் செயற்கையாக உருவாக்கப்பட்டதா என்று மத்திய உளவுப்பிரிவு விசாரணை மேற்கொண்டு வருகிறது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நீதிமன்ற உத்தரவின்படி நாள் ஒன்றுக்கு 80 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், கடந்த 4, 5 மற்றும் 6-ஆம் தேதிகளில் ஒவ்வொரு நாளும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் திரண்டதால் கடுமையான நெரிசல் ஏற்பட்டது. இதில் பலரும் மயக்கமடைந்த நிலையில், பக்தர்களின் வருகையைக் கட்டுப்படுத்தாமல் காவல் துறையே நெரிசலை உருவாக்கியதா என்பது குறித்து சிறப்பு ஆணையர் ஆர். ஜெயகிருஷ்ணன் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்திருந்தார்.

அதில், நிலக்கல்லில் உடனடி முன்பதிவுக்காக வந்த பக்தர்களை காவல் துறை பம்பைக்குச் செல்ல அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பம்பையில் உடனடி முன்பதிவு வசதி இல்லாததால், பெரும் எண்ணிக்கையிலான பக்தர்கள் திரண்டு நெரிசல் ஏற்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், நிலைமை மோசமடைந்ததால், எந்தக் கட்டுப்பாடும் இன்றி சன்னிதானத்திற்குள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதாகவும் சிறப்பு ஆணையர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஏடிஜிபி எஸ். ஸ்ரீஜித் உள்ளிட்ட மூத்த காவல் துறை அதிகாரிகள் இருந்தபோதே கடுமையான நெரிசல் ஏற்பட்ட நிலையில், அசம்பாவிதம் நடந்திருந்தால் அதற்கு தேவசம் போர்டும், காவல் துறையும் மட்டுமே முழு காரணமாக இருந்திருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள உளவுப் பிரிவு, விசாரணை மேற்கொண்டு வருகிறது.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்