சபேஷ்: சமுத்திரம், தவமாய் தவமிருந்து உள்ளிட்ட 25 படங்களுக்கு மேல் இசையமைத்த இசையமைப்பாளர் சபேஷ் காலமானார் | Sabesh, who composed music for over 25 films including Samuthiram, Thavamai Thavamirundhu, passes away

சபேஷ்: சமுத்திரம், தவமாய் தவமிருந்து உள்ளிட்ட 25 படங்களுக்கு மேல் இசையமைத்த இசையமைப்பாளர் சபேஷ் காலமானார் | Sabesh, who composed music for over 25 films including Samuthiram, Thavamai Thavamirundhu, passes away


பிரபல இசையமைப்பாளர் தேவாவின் சகோதரர் சபேஷ் உடல்நலக் குறைவால் இன்று உயிரிழந்தார்.

ஆரம்ப காலகட்டத்தில் சபேஷ் தனது இன்னொரு சகோதரர் முரளியுடன் சேர்ந்து தேவாவுடன் உதவி இசையமைப்பாளராகப் பல படங்களில் இணைந்து பணியாற்றினார்.

அதன்பின்னர், 2000-ம் ஆண்டு தொடக்கத்திலிருந்து சபேஷும், முரளியும் இணைந்து தனியாகத் திரைப்படங்களுக்கு இசையமைக்கத் தொடங்கினர்.

சபேஷ் - முரளி

சபேஷ் – முரளி

2001-ல் முதல்முறையாக சபேஷ் – முரளி இசை காம்போவில் சரத்குமாரின் `சமுத்திரம்” படம் வெளியானது.

அவற்றைத் தொடர்ந்து, தவமாய் தவமிருந்து, இம்சை அரசன் 23-ம் புலிகேசி, பொக்கிஷம், மாயாண்டி குடும்பத்தார், கோரிப்பாளையம் என 25 படங்களுக்கு மேல் இசையமைத்திருக்கின்றனர்.

இவை தவிர ஜோடி, ஆட்டோகிராஃப் உட்பட 20 படங்களுக்கு மேல் பின்னணி இசை அமைத்திருக்கின்றனர்.

சபேஷ் - முரளி

சபேஷ் – முரளி

தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்கள் சங்கத்தின் தலைவராகவும் சபேஷ் பணியாற்றியிருக்கிறார்.

68 வயதாகும் சபேஷ் சிறுநீரகப் பிரச்னை காரணமாக சமீபத்தில் சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று திடீரென உயிரிழந்தார்.

அவரின் உடல் சென்னை ஆழ்வார் திருநகரில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது.

சபேஷின் மறைவைத் தொடர்ந்து திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *