✅ சுடுகாட்டில் மயான கொள்ளை திருவிழா கோலாகலம்.. விதவித வேடமணிந்து பக்தர்கள் வழிபாடு..!! | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

✍️ |
Mayana kollai 1 2026 02 cf297ea875adc5d760db8566e12b05a2 Thedalweb சுடுகாட்டில் மயான கொள்ளை திருவிழா கோலாகலம்.. விதவித வேடமணிந்து பக்தர்கள் வழிபாடு..!! | Spirituality News (ஆன்மீக செய்திகள்)
📌 Last Updated:Feb 18, 2026 7:17 AM ISTMayana kollai | அம்மன் கோயில்களில் மயானக் கொள்ளை விழா கோலாகலமாக நடைபெற்ற நிலையில், பக்தர்கள் பல்வேறு வேடமணிந்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.மயான கொள்ளை திருவிழாஏற்காடு, கலவை உள்ளிட்ட பகுதிகளில்…


Last Updated:

Mayana kollai | அம்மன் கோயில்களில் மயானக் கொள்ளை விழா கோலாகலமாக நடைபெற்ற நிலையில், பக்தர்கள் பல்வேறு வேடமணிந்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.

மயான கொள்ளை திருவிழா
மயான கொள்ளை திருவிழா

ஏற்காடு, கலவை உள்ளிட்ட பகுதிகளில் மயானக் கொள்ளை திருவிழா களைகட்டியது.

[ADSENSE-RESPONSIVE-UNIT]

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அம்மன் கோயில்களில் மாசி மாத மயானக் கொள்ளை நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. சேலம் மாவட்டம், ஏற்காடு ஜெரினா காடு பகுதியில் பெரியாண்டிச்சி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்ற நிலையில், அருகில் உள்ள சுடுகாட்டில் மயானக் கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னதாக, மலர் அலங்காரத்தில் அங்காளம்மன் சத்தாபரண ஊர்வலம் நடைபெற்ற நிலையில், பக்தர்கள் சிவன், பெரியாண்டிச்சி, கறுப்பி காட்டேரி போன்ற வேடமணிந்து மிகவும் ஆக்ரோஷமாக ஊர்வலமாக சென்றனர். பக்தர்கள் கருப்பு கோழிகளை பலிகொடுத்த நிலையில், வேடமணிந்து வந்த பக்தர்கள், கோழியை வாயில் கடித்து குதறியபடி சுடுகாடு நோக்கி ஆக்ரோஷமாக சென்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், கலவை பகுதியில் அங்காளம்மன் ஆலய மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது. பொதுமக்கள் தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தும் வகையில் அலகு குத்தியும், பல்வேறு வேடங்கள் அணிந்தும், அலகு குத்தி வாகனங்கள் இழுத்தும் ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து மயானத்தில் படுத்த நிலையில் மண்ணால் அமைக்கப்பட்ட ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு சூறையாடல் நிகழ்ச்சி நடந்தது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே ரகுநாதபுரம் கிராமத்தில் உள்ள அங்காளம்மன் கோயிலில் மயான கொள்ளை திருவிழா நடைபெற்றது. காளி, கருப்பு காளி, பாவாடை ராயன், சிவப்பு காளி, காட்டாரி அம்மன், குறத்தி, பெரியாயி உள்ளிட்ட பல்வேறு வேடமிட்டு பூசாரிகளுடன் ஆக்ரோஷமாக பக்தர்கள் சாமி ஆடினர்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்