📌 சுவாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தை திருவிழா… கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்… | ஆன்மிகம்

✍️ |
HYP 5708964 cropped 17012026 130709 inshot 20260117 130650579 1 2026 01 4535eeb0c86539882ed0daf1436 Thedalweb சுவாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தை திருவிழா... கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்... | ஆன்மிகம்
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Jan 17, 2026 2:14 PM ISTசுவாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் 11 நாட்கள் நடைபெறும் தை திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது.+ சுவாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தை திருவிழா..

2
கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்…கன்னியாகுமரி மாவட்டத்தில் அய்யா வழி பக்தர்களின் ஆன்மீகத் தலமாக விளங்கும் பிரசித்தி பெற்ற சுவாமி தோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான தை திருவிழா இந்த ஆண்டு இன்று கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது.ஆண்டுதோறும் வைகாசி, ஆவணி மற்றும் தை மாதங்களில் நடைபெறும் திருவிழாக்கள் அய்யா வழி பக்தர்களிடையே பெரும் சிறப்பைப் பெற்றவை

3
அதில் தை மாதத்தில் நடைபெறும் திருவிழா 11 நாட்கள் தொடர்ந்து நடைபெறுவது வழக்கம்.
[ADSENSE-RESPONSIVE-UNIT]

📌 Last Updated:Jan 17, 2026 2:14 PM ISTசுவாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் 11 நாட்கள் நடைபெறும் தை திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது.+ சுவாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தை திருவிழா… கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்…கன்னியாகுமரி…


Last Updated:

சுவாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் 11 நாட்கள் நடைபெறும் தை திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது.

+

சுவாமிதோப்பு

சுவாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தை திருவிழா… கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்…

கன்னியாகுமரி மாவட்டத்தில் அய்யா வழி பக்தர்களின் ஆன்மீகத் தலமாக விளங்கும் பிரசித்தி பெற்ற சுவாமி தோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான தை திருவிழா இந்த ஆண்டு இன்று கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது.

ஆண்டுதோறும் வைகாசி, ஆவணி மற்றும் தை மாதங்களில் நடைபெறும் திருவிழாக்கள் அய்யா வழி பக்தர்களிடையே பெரும் சிறப்பைப் பெற்றவை. அதில் தை மாதத்தில் நடைபெறும் திருவிழா 11 நாட்கள் தொடர்ந்து நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தை திருவிழா இன்று தொடங்கி வரும் 26-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு அய்யா வைகுண்டசாமிக்கு சிறப்பு பணிவிடைகள் நடைபெற்றன. பின்னர் பள்ளியறை திறக்கப்பட்டு, மேளதாளங்கள் முழங்க பதியைச் சுற்றி கொடி பட்டம் ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டது. ஐந்து முறை கொடி மரத்தைச் சுற்றி வலம் வந்த பின்னர், பக்தர்களின் பக்தி முழக்கங்களுக்கு மத்தியில் கொடியேற்றம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கன்னியாகுமரி மாவட்டத்தை மட்டுமல்லாமல், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான அய்யா வழி பக்தர்கள் கலந்து கொண்டனர். தலைப்பாகை அணிந்து, “அய்யா சிவ சிவ அரகரா” என்ற பக்தி கோஷங்களை எழுப்பி அய்யா வைகுண்ட சாமியை வழிபட்டனர்.

11 நாட்கள் நடைபெறும் தை திருவிழாவின் போது, தினமும் சிறப்பு பணிவிடைகள், உச்சிப்படிப்பு, உகப்படிப்பு, வாகன பவனி, அய்யா திருவீதியுலா, சமயச் சொற்பொழிவுகள் மற்றும் அன்ன தர்மம் ஆகியவை தொடர்ந்து நடைபெறுகின்றன. திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக, எட்டாம் திருவிழாவான 23-ஆம் தேதி மாலை, அய்யா வைகுண்ட சாமி வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளி, மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்து, சுவாமி தோப்பு முத்திரி கிணறு அருகே கலிவேட்டையாடுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்த நிகழ்வு அய்யா வழி மரபில் தனித்துவமான ஆன்மீக நிகழ்வாகக் கருதப்படுகிறது. திருவிழாவின் சிகர நிகழ்வாக, 11ஆம் நாள் (26-ஆம் தேதி) பிற்பகல் 12 மணிக்கு, அய்யா பல்லாக்கில் எழுந்தருளி ஊர்வலமாக வந்து, பஞ்சவர்ண தேரில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் தேரோட்டம் நடைபெறுகிறது.

இதில் திரளான அய்யாவழி பக்தர்கள் கலந்து கொண்டு, வெற்றிலை, பாக்கு, எலுமிச்சம் பழம், சுருள் வைத்து வழிபாடு மேற்கொள்வர். தை திருவிழாவை முன்னிட்டு சுவாமிதோப்பு பதியில் ஆன்மீக உற்சாகமும், பக்தி பரவசமும் நிறைந்த சூழல் நிலவுகிறது. பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் திருவிழா குழுவினர் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

Rasi palan 2026 01 fbfafbebcbd94f4b5fba9b3e45db5385 3x2 Thedalweb Weekly Rasi Palan | ஜன., 19 முதல் 25 வரை.. பொங்கலுக்கு பிறகு ஜாக்பாட்.. 4 ராசிகளுக்கு எதிர்பாராத பணவரவு..! | ஆன்மிகம்

⚡ Weekly Rasi Palan | ஜன., 19 முதல் 25 வரை.. பொங்கலுக்கு பிறகு ஜாக்பாட்.. 4 ராசிகளுக்கு எதிர்பாராத பணவரவு..! | ஆன்மிகம்

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 மேஷம்:மேஷ ராசிக்காரர்கள் இந்த வாரம் தங்கள் உடல்நலம் மற்றும் உறவுகளில்…

HYP 5702340 cropped 14012026 092835 img 20251212 200555 waterm 1 3x2 Thedalweb பழனி முருகன் கோவில் தங்க தேருக்கு இணையான நெல்லையப்பர் கோயில் தங்க தேர்... அப்படி என்ன சிறப்பு ? | திருநெல்வேலி

📌 பழனி முருகன் கோவில் தங்க தேருக்கு இணையான நெல்லையப்பர் கோயில் தங்க தேர்… அப்படி என்ன சிறப்பு ? | திருநெல்வேலி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 மொத்தத்தில், நெல்லையப்பர் தங்கத்தேர் என்பது வெறும் ஒரு திருவிழா நிகழ்ச்சி…