✅ தமிழர் திருநாளில் ரஜினி கோவிலில் பொங்கல் விழா… படையப்பா – முத்து அலங்காரத்தில் காட்சி… | தமிழ்நாடு

✍️ |
HYP 5706158 cropped 16012026 001914 img20260115wa0012 watermar 1 3x2 Thedalweb தமிழர் திருநாளில் ரஜினி கோவிலில் பொங்கல் விழா… படையப்பா – முத்து அலங்காரத்தில் காட்சி... | தமிழ்நாடு
📌 Last Updated:Jan 16, 2026 11:55 AM ISTRajinikanth Temple| ‘முத்து’ திரைப்படத்தில் மாட்டு வண்டியில் காய்கறிகளை ஏற்றிச் செல்லும் காட்சியை நினைவூட்டும் வகையில் அலங்காரங்கள் செய்யப்பட்டன.+ மதுரை ரஜினிகாந்த் கோவில்தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு…


Last Updated:

Rajinikanth Temple| ‘முத்து’ திரைப்படத்தில் மாட்டு வண்டியில் காய்கறிகளை ஏற்றிச் செல்லும் காட்சியை நினைவூட்டும் வகையில் அலங்காரங்கள் செய்யப்பட்டன.

+
[ADSENSE-RESPONSIVE-UNIT]

மதுரை

மதுரை ரஜினிகாந்த் கோவில்

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள ரஜினி கோவிலில் பொங்கல் வைத்து வெகு சிறப்பான வழிபாடுகள் நடைபெற்றன. இந்தியாவில் முதன்முறையாக நடிகர் ரஜினிகாந்தின் மூலவர் மற்றும் உற்சவர் திருவுருவச் சிலைகளுடன் அமைக்கப்பட்ட இந்த கோவிலை, ரஜினிகாந்தின் தீவிர பக்தரும், முன்னாள் ராணுவ வீரருமான எஸ்.கார்த்திக் நிறுவியுள்ளார்.

இக்கோவிலில் தினமும் பூஜைகள் நடைபெற்று வரும் நிலையில், ரஜினியை குலதெய்வமாக வணங்கும் அவரது ரசிகர்கள் தங்களது இல்ல நிகழ்வுகள் மற்றும் முக்கியமான தொடக்கங்களை இங்கு வழிபாடு செய்த பின்னரே துவங்குவது வழக்கமாக உள்ளது. இதனை அடுத்து இந்த ஆண்டிற்கான பொங்கல் விழாவை முன்னிட்டு ரஜினி சன்னதியின் முன்பாக நவதானியங்கள் கொண்டு ‘படையப்பா’ திரைப்படத்தில் தோன்றிய ரஜினி உருவம் வடிவமைக்கப்பட்டது. மேலும் ‘முத்து’ திரைப்படத்தில் மாட்டு வண்டியில் காய்கறிகளை ஏற்றிச் செல்லும் காட்சியை நினைவூட்டும் வகையில் அலங்காரங்கள் செய்யப்பட்டன. பாரம்பரிய முறையில் குடில் போன்ற வடிவமைப்பும் அமைக்கப்பட்டு, உற்சவர் சிலை முன்பு பல்வேறு வகையான காய்கறிகள், கனிகள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்து படையலிடப்பட்டது.

கரும்புத் தோரணங்களுடன் வேத மந்திரங்கள் முழங்க, பாரம்பரிய முறையில் பொங்கல் வைத்து வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து கோவிலில் உள்ள ரஜினிகாந்தின் மூலவர் மற்றும் உற்சவர் சிலைகளுக்கு பால், பன்னீர், புஷ்பம், இளநீர், தயிர், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்து தீபாராதனையுடன் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. மூன்றாவது ஆண்டாக தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த பொங்கல் விழாவை, ரஜினியின் தீவிர பக்தரும், திருமங்கலம் ஸ்ரீ ரஜினி கோவில் நிறுவுநருமான எஸ்.கார்த்திக் மற்றும் அவரது குடும்பத்தினர் முன்னின்று நடத்தினர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்