📌 திருச்செந்தூர் முருகன் கோயில் மாசி திருவிழா… கொடியேற்றத்துடன் கோலாகல துவக்கம்… | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

✍️ |
HYP 5777910 cropped 21022026 182227 screenshot 20260221 181608 1 Thedalweb திருச்செந்தூர் முருகன் கோயில் மாசி திருவிழா... கொடியேற்றத்துடன் கோலாகல துவக்கம்... | Spirituality News (ஆன்மீக செய்திகள்)
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Feb 21, 2026 7:23 PM ISTதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இந்த ஆண்டுக்கான மாசி திருவிழா இன்றைய தினம் கோலாகலமாக கொடியேற்றத்துடன் தொடங்கியது.+ Maasi thiruvizha முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ஆம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும்

2
குறிப்பாக கந்த சஷ்டி திருவிழா, தைப்பூசம், வைகாசி விசாக திருவிழா, பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, மாசி திருவிழா உள்ளிட்ட விழாக்கள் வெகு விமர்சையாக நடைபெறும்.இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான மாசி திருவிழா இன்றைய தினம் கோலாகலமாக கொடியேற்றத்துடன் தொடங்கியது

3
கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது.அதைத்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

📌 Last Updated:Feb 21, 2026 7:23 PM ISTதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இந்த ஆண்டுக்கான மாசி திருவிழா இன்றைய தினம் கோலாகலமாக கொடியேற்றத்துடன் தொடங்கியது.+ Maasi thiruvizha முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ஆம் படை வீடான திருச்செந்தூர்…


Last Updated:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இந்த ஆண்டுக்கான மாசி திருவிழா இன்றைய தினம் கோலாகலமாக கொடியேற்றத்துடன் தொடங்கியது.

+

Maasi

Maasi thiruvizha 

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ஆம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும். குறிப்பாக கந்த சஷ்டி திருவிழா, தைப்பூசம், வைகாசி விசாக திருவிழா, பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, மாசி திருவிழா உள்ளிட்ட விழாக்கள் வெகு விமர்சையாக நடைபெறும்.

இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான மாசி திருவிழா இன்றைய தினம் கோலாகலமாக கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது.

அதைத் தொடர்ந்து கோவில் கொடிமரம் முன்பு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அதிகாலை 5.15 மணிக்கு கோவில் செப்பு கொடிமரத்தில் மாசித்திருவிழா கொடியை பட்டாச்சாரியார் முத்துக்குமார சுவாமி ஏற்றினார்.

அப்போது அங்கு இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா, கடம்பனுக்கு அரோகரா, வேலனுக்கு அரோகரா என விண்ணை முட்டும் அளவிற்கு கோஷமிட்டனர்.

அதைத் தொடர்ந்து செப்பு கொடிமரத்திற்கு பால், தயிர், பன்னீர், இளநீர், திரவிய பொடி, திருநீறு உள்பட 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. அதைத் தொடர்ந்து அலங்காரமாகி மகா தீபாராதனை நடந்தது.

12 நாட்கள் நடைபெறும் இந்த மாசி திருவிழாவில் 7ஆம் திருநாளான 27ஆம் தேதி சுவாமி சண்முகம் தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும்.

8ஆம் திருநாளான 28ஆம் தேதி அதிகாலையில் சுவாமி சண்முகம் வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி எழுந்தருளி வீதி உலா வருவார். அன்றைய தினம் மதியம் 12 மணிக்கு மேல் பச்சை நிற கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

பின்னர் விழாவின் சிகர நிகழ்ச்சியான 10ஆம் திருநாள் தேரோட்டம் 2ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்று காலை 7 மணிக்கு விநாயகர், சுவாமி, அம்பாள் தனித்தனி தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார்கள். 11 ஆம் திருநாளான 3 ஆம் தேதி இரவு தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

HYP 5777142 cropped 21022026 122716 fa311bea1e6af06002896fb11e 2 Thedalweb நவ கிரகங்களாக 9 ரூபங்களில் காட்சி தரும் பெருமாள்... நவதிருப்பதி வழிபாட்டின் நன்மைகள்...

⚡ நவ கிரகங்களாக 9 ரூபங்களில் காட்சி தரும் பெருமாள்… நவதிருப்பதி வழிபாட்டின் நன்மைகள்…

📌 தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற இந்த நவ திருப்பதியில் பெருமாளே நவ கிரகங்களாக அருள்பாலிப்பது சிறப்பானதாகக்…

images 2026 02 21T162230.329 2026 02 426b7f73c7242e8264c423a591184721 Thedalweb நோன்பை முடிக்கும்போது முஸ்லிம்கள் பேரீச்சம்பழம் சாப்பிடுவது ஏன்? அறிவியலின் ஆச்சரியமூட்டும் தகவல்.. | ஆன்மீகம் போட்டோகேலரி

💡 நோன்பை முடிக்கும்போது முஸ்லிம்கள் பேரீச்சம்பழம் சாப்பிடுவது ஏன்? அறிவியலின் ஆச்சரியமூட்டும் தகவல்.. | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இதில் உள்ள பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் நரம்பு…