அஜித் பேசுகையில், ̀̀கூட்டநெரிசலால் தமிழகத்தில் பல விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அந்த கூட்டநெரிசலுக்கு அந்த தனிநபர் மட்டும் பொறுப்பு கிடையாது. நாம் அனைவருமே அதற்கு பொறுப்பு.
நான் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. கூட்டத்தைக் கூட்டுவதில் நாம் இன்று ஆர்வம் காட்டி வருகிறோம். இதனை பெரிய விஷயமாக ஆக்குவதை நாம் நிறுத்த வேண்டும்.
திரையரங்குகளில் மட்டுமே கூட்டநெரிசல் நிகழ்வது ஏன்? சினிமா பிரபலங்கள் இருக்கும் இடங்களில் இப்படியான விஷயங்கள் நிகழ்வது ஏன்?
அது திரைத்துறையைப் பற்றி உலகத்திற்கு தவறான புரிதலை தருகிறது. நாங்கள் இதை விரும்பவில்லை. மக்களின் அன்பு எங்களுக்கு தேவை. அதற்காகத்தான் நாங்கள் கடினமாக உழைக்கிறோம்.
குடும்பத்தைப் பிரிந்து தூக்கமின்றி கடினமாக உழைப்பதும் அதற்காகத்தான். ஆனால், உங்களின் அன்பைக் காட்டுவதற்கு வேறு வழிகள் இருக்கின்றன. ஊடகங்களும் இந்த முதல் நாள் முதல் காட்சியை ஊக்குவிக்கக் கூடாது.” எனக் கூறியிருக்கிறார்.

