நவீன ஒளிப்பதிவை வடிவமைத்த ஒளியின் சக்தி | ஒளி என்பது வெளிச்சமல்ல | power of light that shaped modern cinematography

நவீன ஒளிப்பதிவை வடிவமைத்த ஒளியின் சக்தி | ஒளி என்பது வெளிச்சமல்ல | power of light that shaped modern cinematography


திரைப்பட ஒளிப்பதிவாளரும் எழுத்தாளருமான சி.ஜெ.ராஜ்குமார், ஒளிப்பதிவு துறையில் 13 நூல்களையும், 500-க்கும் மேற்பட்ட தொழில்நுட்பக் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார். நவீன ஒளிப்பதிவின் தொழில்நுட்பங்கள், கலை மற்றும் திரைப்படத்துறையைப் பற்றிய இவருடைய எழுத்துகள், உலகளாவிய அளவில் சினிமா மாணவர்களுக்கும் தொழில்முனைவர்களுக்கும் வழிகாட்டியாக உள்ளன. தற்போது, சினிமா ஃபாக்டரி அகாடமியின் டீனாக பணியாற்றி வருகிறார்.

ளி என்​பது சினி​மா​வின் ஆன்​மா. அது வெறும் வெளிச்​சமல்ல; அது கதை சொல்​லும் மொழி. ஒளி எப்​படிப் பயன்​படுத்​தப்​படு​கிறது என்​பதே ஒளிப்​ப​தி​வின் பரிணா​மப் பயண​மாக மாறி, உணர்ச்​சி, அர்த்​தம் மற்​றும் மாயையை உரு​வாக்​கு​கிறது. இந்​தப் பயணத்​தின் மறக்க முடி​யாத உதா​ரணம், குரு தத் இயக்​கிய ‘காகஸ் கே பூல்’ (1959). ஒளிப்​ப​தி​வாளர் வி.கே.​மூர்த்தி இருண்ட படப்​பிடிப்பு தளத்​தில் ஒரே ஒரு திட​மான ஒளிக்​க​திரைப் பயன்​படுத்தி சினிமா வரலாற்​றில் எப்​போதும் நிலைத்​திருக்​கும், காட்​சியை உரு​வாக்​கி​னார். வெறுமை​யான ஸ்டூடியோ​வில் குரு தத் தனி​யாக அமர்ந்​திருக்​கும் அந்த ஒளிக்​க​திர் தனிமை, அழிந்​து​போகும் புகழ், கலைத் தேடல் ஆகிய​வற்​றைச் சின்​ன​மாக வெளிப்படுத்​தி​யது.

ஒரு ஒளிக்​க​திர், உணர்ச்​சி​யைப் பேச வைக்​கும் சக்​தி​யை, இந்​தக் காட்சி நிரூபித்​தது. அந்த காலத்​திலேயே சத்​யஜித் ரே படங்​களில் சுப்​ரதா மித்ரா, உலகுக்கு ‘பவுன்​ஸ்ட் லைட்​டிங்’ என்ற புதிய பார்​வையை அறி​முகப் படுத்​தி​னார். நேரடி​யாக ஒளி வீசாமல் பிர​திபலிப்​பைப் பயன்​படுத்தி மென்​மை​யான ஒளியை உரு​வாக்​கும் அவருடைய முறை, இயற்கை ஒளி​யின் உண்​மை​யான உணர்​வை, கேமரா முன் கொண்டு வந்​தது. இது உலக ஒளிப்​ப​தி​வின் மொழியையே மாற்​றிய முக்​கிய​மான புது​மை.

17598877181138 Thedalweb நவீன ஒளிப்பதிவை வடிவமைத்த ஒளியின் சக்தி | ஒளி என்பது வெளிச்சமல்ல | power of light that shaped modern cinematography
அஞ்சலி படத்தில்…

இதை விட வேறு​பட்ட, ஆனால் சமமான தாக்​கத்தை ஏற்​படுத்​தி​ய​வர் பாலு மகேந்​தி​ரா. அவர் சாளரங்​கள் வழி​யாக வரும் இயற்கை ஒளியை உள் தளங்​களில் அழகாகப் பயன்​படுத்தி இந்​திய ஒளிப்​ப​திவை மாற்​றி​னார். ‘மூன்​றாம் பிறை’ போன்ற படங்​களில் சாளர ஒளி கதா​பாத்​திரங்​களின் உள்​ளுணர்வை வெளிப்​படுத்​துகிறது. இயற்கை வெளிச்​ச​மும் கவிதை​போல் மென்​மை​யாக​வும் நெருக்​க​மாக​வும் இருக்க முடி​யும் என்​பதை அவர் நிரூபித்​தார்.பாலுமகேந்​திரா சூரிய ஒளி​யின் கவிஞர் எனில் மாருதி ராவ், சந்​திர ஒளி​யின் மாய​வா​தி.

அவரது இரவுக் காட்​சிகள் இருளை​யும் கவிதை​யாக்​கின. சந்​திர ஒளி வெறும் நீல நிறப் பின்​னணி​யாக இல்​லாமல் அடுக்​கு​கள், ஆழம், கனவுத் தன்மை கொண்ட காட்​சிமொழி​யாக மாறியது. பிறகு வந்​தார் பி.சி.ஸ்ரீராம். பாரம்​பரிய ஒளி அமைப்​பின் விதி​களை முறியடித்​து, எதிர்​பா​ராத பின்​னொளி, உள்​தளங்​களுக்கு ஊடுரு​வும் ஒளி மற்​றும் ‘ஃப்​ளேர்’ களை கதை​யின் ஓட்​ட​மாக மாற்றி​னார்.

17598943192006 Thedalweb நவீன ஒளிப்பதிவை வடிவமைத்த ஒளியின் சக்தி | ஒளி என்பது வெளிச்சமல்ல | power of light that shaped modern cinematography
வி.கே.​மூர்த்தி, மது அம்​பாட், பாலு மகேந்​தி​ரா, பி.சி.ஸ்ரீ​ராம்

வெளிச்​சத்தை அவர், ஒரு கலகக்​கார மொழி​யாக மாற்​றி, காட்​சிகளுக்கு உயிரூட்​டி​னார். மது அம்​பாட்​டின் ‘அஞ்​சலி’ அதற்​குச் சிறந்த உதா​ரணம். “ஒளி பின்​னணி​யில்உரு​வான தேவதை” எனக் கூறப்​படும் அந்​தக் குழந்தை பாத்​திரம், லோ கீ லைட்​டிங்​கில் உரு​வானது. மென்​மை​யான ஒளி, நிழல்​கள் மற்​றும் பின்​புலத்​தின் அமை​தி​யுடன் அந்​தக் கதா​பாத்​திரம் நம் நினை​வில் நிலைத்து விடு​கிறது.

இந்த ஒளி மாந்​தர்​கள், ஒளி என்​பது வெறும் தொழில்​நுட்​பத் தேவை அல்ல, அது கதா​பாத்​திரம், உணர்ச்சி மற்​றும் சூழல் என சினி​மாவை வடிவ​மைக்​கும் சக்தி என்​பதை நமக்கு நினை​வூட்​டு​கிறார்​கள். ஒளி மூலம் உண்மை நிலை​யைப் பதிவு செய்​வதற்​காக அல்ல, அதை வடிவ​மைத்து கவிதை​யாக்​கு​வதற்​காகவே ஒளிப்​ப​தி​வாளர் செயற்​படு​கிறார். கலைஞர்​களின் கைகளில் ஒளி, வெறும் வெளிச்​சமல்​ல ; அது சினி​மா​வாக மாறுகிறது.

(புதன்​ தோறும்​ ஒளி ​காட்​டுவோம்​)

'); newWin.print(); newWin.close(); setTimeout(function(){newWin.close();},10); } var emoteStarted = 0; $('.emoteImg').click(function() { var thisId = $(this).attr('data-id'); if(emoteStarted==0){ var totcnt = parseInt($('.emote-votes').attr('data-id')); if(totcnt==0){ $('.emote-votes').html('1 Vote'); $('.emote-votes').css('padding', '2px 5px'); }else{ var newtotcnt = totcnt + 1; $('.emote-votes').html(newtotcnt+' Votes'); } $('.emoteImg').each(function(idx, ele){ var s = parseInt($(this).attr('data-id')); var cnt = parseInt($(this).attr('data-res')); var tot_cnt = parseInt($(this).attr('data-count')) + 1; if(s==thisId){ cnt+=1; } cntPer = (cnt/tot_cnt)*100; var percnt = cntPer.toFixed(); if(s==thisId){ $('#emote-res-txt'+s).addClass('active-1'); $('#emote-res-cnt'+s).addClass('active'); } $('#emote-res-cnt'+s).html(percnt+'%'); $(this).removeClass('emoteImg'); }); emoteStarted = 1; $.ajax({ url: 'https://www.hindutamil.in/comments/ajax/common.php?act=emote&emid='+thisId, type: "POST", data: $('#frmReact').serialize(), success: function(response) { //document.location.reload(); } }); }else{ } }); $(window).scroll(function() { var wTop = $(window).scrollTop(); var homeTemplateHeight = parseInt($('#pgContentPrint').height()-200); var acthomeTemplateHeight = homeTemplateHeight; if(wTop>homeTemplateHeight){ if( related==1 ){ $('#related-div').html( $('.homePageLoader').html() ); $.ajax({ url:'https://api.hindutamil.in/app/index.php?key=GsWbpZpD21Hsd&type=related_article', type:'GET', data : { keywords:'', aid:'1379045' }, dataType:'json', //async: false , success:function(result){ let userData = null; try { userData = JSON.parse(result); } catch (e) { userData = result; } var data = userData['data']; console.log(data); var htmlTxt="

தொடர்புடைய செய்திகள்

"; $.each(data, function (i,k){ var str = k.web_url; var artURL = str.replace("https://www.hindutamil.in/", "https://www.hindutamil.in/"); var artImgURL = k.img.replace("/thumb/", "/medium/"); if(i>=4){ return false; } htmlTxt += ' '; }); htmlTxt += '
'; $('#related-div').html(htmlTxt); } }); related = 2; } } });



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *