”நான் பணியாற்றிய அத்தனை இயக்குநர்களும் நல்ல இயக்குநர்கள்!” – தோட்டா தரணி | “The directors i have worked are all good directors” – Thotta Tharani

✍️ |
''நான் பணியாற்றிய அத்தனை இயக்குநர்களும் நல்ல இயக்குநர்கள்!" - தோட்டா தரணி | "The directors i have worked are all good directors" - Thotta Tharani


தோட்டா தரணி பேசுகையில், “நான் பணியாற்றிய அத்தனை இயக்குநர்களும் நல்ல இயக்குநர்கள். அதே போலத்தான் தயாரிப்பாளர்களும். அதனால், இந்தப் படம்தான் எனக்கு விருதை பெற்றுத் தந்தது எனச் சொல்ல முடியாது.

நான் பணியாற்றிய அத்தனை இயக்குநர்களும் எனக்கு ஊக்கமளித்திருக்கிறார்கள்.

எனக்கு வாய்ப்புகளும் சரியாக அமைந்தது. இதுவரை நடிகர்கள் இருந்த விருதை வாங்கியிருக்கிறார்கள். தொழில்நுட்ப கலைஞரான எனக்கு இந்த விருது கிடைத்திருப்பதை எண்ணி மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் மகிழ்ச்சியடைவார்கள்.

இதுவரைக்கும் நான் சவாலான படங்கள் பண்ணலனு தான் சொல்வேன்.

தோட்டா தரணி

தோட்டா தரணி

எப்போதும் ஒரு சமயத்திலேயே ஒரு ஓவியத்தை முழுமையாக முடித்துக் கொடுத்துவிடுவேன்.

30 ஆண்டுகளுக்கு முன்பு நானொரு பெரிய பெயின்டிங் செய்தேன். இப்போதிருக்கும் பல வசதிகள் அப்போது கிடையாது. மீக நீளமாக செய்த பெயின்டிங்கை மாலை நேரத்தில் தொடங்கினேன்.

அடுத்த நாள் மதிய வேளையில் அதனை முழுமையாக முடித்துக் கொடுத்துவிட்டேன். அதுதான் நான் வேகமாக முடித்த பெயின்டிங். இந்த மாதிரியான தருணங்கள்ல என்னுடைய தந்தையை நான் மிஸ் செய்கிறேன். எனக்கு எப்போதும் பேப்பர் பென்சில்தான் தெரியும். கம்ப்யூட்டர் பற்றியெல்லாம் எனக்குத் தெரியாது.” எனக் கூறினார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

'கும்கி 2': "நேரம் கிடைக்கும்போதெல்லாம் பயணம் செய்வேன்"- பிரபு சாலமன்| direct prabu soloman on travel

‘கும்கி 2’: “நேரம் கிடைக்கும்போதெல்லாம் பயணம் செய்வேன்”- பிரபு சாலமன்| direct prabu soloman on travel

அவனுக்கு இந்த சமூகத்தால், மனிதர்களால், அரசியலால் வரும் பிரச்னைகளைத் தாண்டி தன்னுடைய நட்பை எப்படி ஒருவன் காப்பாற்றி கொள்கிறான்…