⚡ பக்தி படத்​தில் என்​.எஸ்​.கிருஷ்ணனின் பகுத்​தறிவு கருத்து | ns krishnan rational opinion in devotional film parijatham

✍️ |
பக்தி படத்​தில் என்​.எஸ்​.கிருஷ்ணனின் பகுத்​தறிவு கருத்து | ns krishnan rational opinion in devotional film parijatham
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
பாமா விஜ​யம், நரகாசுவர வதம், கிருஷ்ண துலா​பாரம் ஆகிய மூன்று புராணக் கதைகளைக் கொஞ்​சம் மாற்றி உரு​வான படம், ‘பாரிஜாதம்’

2
முதல் பகுதி நரகாசுரன் கதை

3
தேவர்​களிட​மிருந்து பெற்ற வரங்​களால் யாராலும் வெல்ல முடி​யாத சக்​தி​களைக் கொண்​டிருக்​கிறான், நரகாசுரன்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
அவனை யாராலும் அடக்க முடிய​வில்​லை

5
எப்​படி அடக்​கு​வது என்​றும் தெரியவில்​லை

📌 பாமா விஜ​யம், நரகாசுவர வதம், கிருஷ்ண துலா​பாரம் ஆகிய மூன்று புராணக் கதைகளைக் கொஞ்​சம் மாற்றி உரு​வான படம், ‘பாரிஜாதம்’. முதல் பகுதி நரகாசுரன் கதை. தேவர்​களிட​மிருந்து பெற்ற வரங்​களால் யாராலும் வெல்ல முடி​யாத சக்​தி​களைக் கொண்​டிருக்​கிறான்,…


பாமா விஜ​யம், நரகாசுவர வதம், கிருஷ்ண துலா​பாரம் ஆகிய மூன்று புராணக் கதைகளைக் கொஞ்​சம் மாற்றி உரு​வான படம், ‘பாரிஜாதம்’.

முதல் பகுதி நரகாசுரன் கதை. தேவர்​களிட​மிருந்து பெற்ற வரங்​களால் யாராலும் வெல்ல முடி​யாத சக்​தி​களைக் கொண்​டிருக்​கிறான், நரகாசுரன். அவனை யாராலும் அடக்க முடிய​வில்​லை. எப்​படி அடக்​கு​வது என்​றும் தெரியவில்​லை. அவனுடைய முற்​பிறப்​பில் நரகாசுரனின் தாயாக இருந்த, இப்​போது கிருஷ்ணரின் மனை​வி​களில் ஒரு​வ​ரான பாமா​வால் அடக்க முடி​யும் என்று நினைக்​கிறார் நாரதர். அதற்​கான வேலைகளில் இறங்​கும் அவர், அதைச் செய்து முடிப்​பது ஒரு கதை.

மற்​றொரு கதை​யில் அரிய பாரிஜாதப் பூவை ருக்​மணிக்​குக் கொடுக்​கு​மாறு கிருஷ்ணனிடம் கொடுக்​கிறார் நாரதர். இதனால் பாமாவுக்கு கோபம் வரு​கிறது. கிருஷ்ணன் மீது ருக்​மணி கொண்​டிருக்​கும் பக்தி மற்​றும் காதலை பாமாவுக்கு உணர்த்​து​வது இக்​கதை. மூன்​றாவது பகு​தி​யில் என்​.எஸ்​.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், புளி மூட்டை ராம​சாமி, காகா ராதாகிருஷ்ணன் ஆகியோரின் காமெடி கதை இடம்​பெற்​றது. மூன்று கதை​யிலும் ‘பாரிஜாதம்’ முக்​கிய பங்கு வகிக்​கிறது.

கிருஷ்ண​ராக டி.ஆர்​.ம​காலிங்​க​மும், அவருடைய மனை​வி​கள் சத்​ய​பா​மா​வாக பி.எஸ்​.சரோஜா​வும், ருக்​மணி​யாக எம்​.​வி.​ராஜம்​மா​வும் நடித்​தனர். நாரத​ராக நாகர்​கோ​வில் மகாதேவன் நடித்​தார். அந்த கால​கட்டத்​தில் பிரபல குணச்​சித்​திர நடிக​ராக இருந்த ஆர்​.​பாலசுப்​பிரமணி​யம் நரகாசுர​னாக மிரட்​டி​யிருந்​தார். பத்​மினி – லலிதா சகோ​தரி​களின் நாட்​டிய​மும் படத்தில் உண்​டு. தனது லாவண்யா பிக்​சர்ஸ் சார்​பில் எஸ்​.கே.சுந்​தர​ராம ஐயர் இப்​படத்​தைத் தயாரித்​தார். இளங்​கோவன் திரைக்​கதை, வசனம் எழு​தி​னார்.

கே.எஸ்​.கோ​பால​கிருஷ்ணன் (கற்பகம் படத்தை இயக்கியவர் அல்ல) இயக்​கிய இந்​தப் படத்​துக்கு சி.ஆர்​.சுப்​பு​ராமன், எஸ்​.​வி.வெங்​கட்​ராமன் ஆகியோர் இசையமைத்​தனர். படத்​தில் 21 பாடல்​கள். கம்​ப​தாசன், சந்​தானகிருஷ்ண நாயுடு, பாப​நாசம் சிவன், உடுமலை நாராயணக​வி, கே.டி.சந்​தானம் பாடல்​கள் எழு​தினர்.

என்​.எஸ்​.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் இணைந்து ‘பாரிஜாதப் பூ’ என்ற பாடலைப் பாடினர். அப்​பாடல் அப்​போது ரசிக்​கப்​பட்​டது. பசு​வின் பெரு​மை​யைச் சொல்​லும் பாடல் ஒன்​றை​யும் பாடி​யிருக்​கிறார் என்​.எஸ்​.கிருஷ்ணன். ‘பாது​காக்​கணும் பாங்கு பார்க்​கணும் பழக்கி வைக்​கணும்’ என்ற பாடல் அப்​போது ஹிட் லிஸ்​டில் இருந்​தது. பக்தி படம் என்​றாலும் பகுத்​தறிவு கருத்​துகளைக் கொண்டு என்​.எஸ்​.கிருஷ்ணன் அமைத்​திருந்த நையாண்டி நகைச்​சுவைக் காட்​சிகள் அப்​போது ரசிக்​கப்​பட்​டன. போலி நாரத​ராக புளிமூட்டை ராம​சாமி நடித்​தார். ‘பாரிஜாதம்’ பூவுக்​குப் பாரி​யும் சாத​மும் என அவர் கொடுக்​கும் விளக்​கம் குபீர் நகைச்​சுவை. ஜித்​தன் பானர்ஜி ஒளிப்​ப​திவு செய்​தார். 1950-ம்​ ஆண்​டு இதே தேதி​யில்​ (நவ.9) வெளி​யான இந்​தப்​ படம்​, வரவேற்​பைப்​ பெற்​றது.

'); newWin.print(); newWin.close(); setTimeout(function(){newWin.close();},10); } var emoteStarted = 0; $('.emoteImg').click(function() { var thisId = $(this).attr('data-id'); if(emoteStarted==0){ var totcnt = parseInt($('.emote-votes').attr('data-id')); if(totcnt==0){ $('.emote-votes').html('1 Vote'); $('.emote-votes').css('padding', '2px 5px'); }else{ var newtotcnt = totcnt + 1; $('.emote-votes').html(newtotcnt+' Votes'); } $('.emoteImg').each(function(idx, ele){ var s = parseInt($(this).attr('data-id')); var cnt = parseInt($(this).attr('data-res')); var tot_cnt = parseInt($(this).attr('data-count')) + 1; if(s==thisId){ cnt+=1; } cntPer = (cnt/tot_cnt)*100; var percnt = cntPer.toFixed(); if(s==thisId){ $('#emote-res-txt'+s).addClass('active-1'); $('#emote-res-cnt'+s).addClass('active'); } $('#emote-res-cnt'+s).html(percnt+'%'); $(this).removeClass('emoteImg'); }); emoteStarted = 1; $.ajax({ url: 'https://www.hindutamil.in/comments/ajax/common.php?act=emote&emid='+thisId, type: "POST", data: $('#frmReact').serialize(), success: function(response) { //document.location.reload(); } }); }else{ } }); $(window).scroll(function() { var wTop = $(window).scrollTop(); var homeTemplateHeight = parseInt($('#pgContentPrint').height()-200); var acthomeTemplateHeight = homeTemplateHeight; if(wTop>homeTemplateHeight){ if( related==1 ){ $('#related-div').html( $('.homePageLoader').html() ); $.ajax({ url:'https://api.hindutamil.in/app/index.php?key=GsWbpZpD21Hsd&type=related_article', type:'GET', data : { keywords:'', aid:'1382688' }, dataType:'json', //async: false , success:function(result){ let userData = null; try { userData = JSON.parse(result); } catch (e) { userData = result; } var data = userData['data']; console.log(data); var htmlTxt="

தொடர்புடைய செய்திகள்

"; $.each(data, function (i,k){ var str = k.web_url; var artURL = str.replace("https://www.hindutamil.in/", "https://www.hindutamil.in/"); var artImgURL = k.img.replace("/thumb/", "/medium/"); if(i>=4){ return false; } htmlTxt += ' '; }); htmlTxt += '
'; $('#related-div').html(htmlTxt); } }); related = 2; } } });



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

Trisha; 2026லும் பிசியான த்ரிஷா. சிரஞ்சீவி, சூர்யா படங்கள், மீண்டும் போலீஸ் கதை - அசத்தும் த்ரிஷா trisha movie line ups and shoot update

📌 Trisha; 2026லும் பிசியான த்ரிஷா. சிரஞ்சீவி, சூர்யா படங்கள், மீண்டும் போலீஸ் கதை – அசத்தும் த்ரிஷா trisha movie line ups and shoot update

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 சினிமாவில் வெள்ளிவிழா ஆண்டை நெருங்குகிறார் த்ரிஷா 2 கடந்த 2025ல்…

சல்லியர்கள் : ``PVR தமிழ் மண் சார்ந்த கதையைப் புறக்கணிக்கிறது" - தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி | Salliyars: "PVR is ignoring stories rooted in Tamil culture" - Producer Suresh Kamatchi

📌 சல்லியர்கள் : “PVR தமிழ் மண் சார்ந்த கதையைப் புறக்கணிக்கிறது” – தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி | Salliyars: “PVR is ignoring stories rooted in Tamil culture” – Producer Suresh Kamatchi

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இப்படி வேறு மாநிலத்தின் மண்சார்ந்த படத்தைப் புறக்கணித்தால் என்னவாகும் 2…