📌 பழனி பாதயாத்திரை பக்தர்களுக்கு மருத்துவ சேவை… மத நல்லினக்கத்தை காட்டிய இஸ்லாமியர்கள்… | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

✍️ |
HYP 5735789 cropped 30012026 202014 picsart 260130 200250138 w 1 Thedalweb பழனி பாதயாத்திரை பக்தர்களுக்கு மருத்துவ சேவை... மத நல்லினக்கத்தை காட்டிய இஸ்லாமியர்கள்... | Spirituality News (ஆன்மீக செய்திகள்)
📌 Last Updated:Jan 31, 2026 9:44 AM ISTதிண்டுக்கல் சாலையில் பாதயாத்திரையாக நடந்து வரும் முருக பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் மருத்துவ உதவிகள் செய்தனர்.+ Medical service முருகனின் அறுபடை வீடுகளில் 3ஆம் படை வீடான பழனியில் நடைபெறும் தைப்பூசத்…


Last Updated:

திண்டுக்கல் சாலையில் பாதயாத்திரையாக நடந்து வரும் முருக பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் மருத்துவ உதவிகள் செய்தனர்.

+
[ADSENSE-RESPONSIVE-UNIT]

Medical

Medical service 

முருகனின் அறுபடை வீடுகளில் 3ஆம் படை வீடான பழனியில் நடைபெறும் தைப்பூசத் திருவிழாவிற்காகத் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான முருக பக்தர்கள் பாதயாத்திரையாகப் பழனியை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் பழனி அடுத்த ஆயக்குடி அருகே திண்டுக்கல் சாலையில் பாதயாத்திரையாக நடந்து வரும் முருக பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் மருத்துவ உதவிகள் செய்தனர். ஆயக்குடி காயிதே மில்லத் அறக்கட்டளை மற்றும் ஆயக்குடி ஜமாத் சார்பில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு கால் வலியைப் போக்கக்கூடிய மருந்துகள் மற்றும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இஸ்லாமியர்கள் நெடுந்தூரம் சாலையில் நடந்து வரும் முருக பக்தர்களுக்குக் கால்களில் மருந்துகளைத் தடவி விட்டு சேவை செய்தனர். மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் இந்துக்கள் இஸ்லாமியர்கள் ஒற்றுமையைப் பறைசாற்றும் வகையில் மருத்துவ முகாம் அமைந்தது.

கடந்த நான்கு ஆண்டுகளாக இதுபோன்ற சேவைகளைச் செய்து வருகின்றனர். திருப்பரங்குன்றத்தில் மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையில் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெற்று வரும் நிலையில், மூன்றாம் படைவீடான பழனியில் இஸ்லாமியர்கள் முருக பக்தர்களுக்குச் சேவை செய்யும் நிகழ்வு பலரது பாராட்டையும் பெற்று வருகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்