🚀 பழனி முருகன் கோவிலில் களைகட்டிய தைப்பூசத் திருவிழா… லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்… | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

✍️ |
HYP 5738718 cropped 01022026 145555 videoshot 20260201 142951 2 Thedalweb பழனி முருகன் கோவிலில் களைகட்டிய தைப்பூசத் திருவிழா... லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்... | Spirituality News (ஆன்மீக செய்திகள்)
📌 Last Updated:Feb 01, 2026 5:25 PM ISTபுகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழாவைவைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.+ மக்கள் கூட்டம்அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் தைப்பூசத் திருவிழா கடந்த 26-ம்…


Last Updated:

புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழாவைவைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

+
[ADSENSE-RESPONSIVE-UNIT]

மக்கள்

மக்கள் கூட்டம்

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் தைப்பூசத் திருவிழா கடந்த 26-ம் தேதி திங்கட்கிழமை அருள்மிகு பெரியநாயகியம்மன் திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் ஏழாம் நாளான இன்று தைப்பூசத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக பழனி வந்தனர்.

இன்று பழனி கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக சாரை சாரையாக குவிந்த லட்சக்கணக்கான பக்தர்களை குடமுழுக்கு நினைவரங்கம் வழியாக மலைக்கோவிலுக்கு செல்ல அமைக்கப்பட்ட பாதை வழியாக தடுத்து நிறுத்தப்பட்டு கயிற்றைக் கட்டி குழு குழுவாகப் பிரித்து முறையாக அனுமதிக்கப்பட்டனர்.

நெரிசல் ஏற்படாத வகையில் பக்தர்களை மலைக்கோயிலுக்கு அனுமதிக்கும்‌ வகையில் போலீசார் பணிகளை மேற்கொண்டனர். குடமுழுக்கு நினைவரங்கம் வழியாக மேலே சென்று படிப்பாதை வழியாக கீழே இறங்கும் வகையில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தை சமாளிக்கும் வகையில் மலைக்கோவிலில் இருந்து கீழே இறங்கும் பக்தர்கள் அடிவாரம் பகுதியிலுள்ள அனைத்து பகுதிகளிலும் வெளியேறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அடிவாரம் பகுதியில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை, மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

பக்தர்களின் வாகனங்கள் நிறுத்த அனுமதிக்கப்பட்ட இடங்கள் முழுவதும் நிரம்பியதால் பழனி நகர் முழுவதும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது‌. பக்தர்களுக்கு வழி நெடுகிலும் பொதுமக்கள் அன்னதானம் செய்து வருகின்றனர். இன்று மாலை தேரடி வீதியில் உள்ள நான்கு ரத வீதிகளில் தைப்பூச தேரோட்டம் நடைபெற உள்ளது‌.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

HYP 5738678 cropped 01022026 143534 inshot 20260201 143516919 2 Thedalweb கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவில் தைப்பூச விழா... அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்... | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

📌 கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவில் தைப்பூச விழா… அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்… | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

📌 Last Updated:Feb 01, 2026 3:29 PM ISTகழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயில் தைப்பூசத் திருவிழாவின் சிகர நிகழ்வாக…

HYP 5738315 cropped 01022026 104838 inshot 20260201 104747516 1 Thedalweb நெல்லுக்கு வேலியிட்ட நெல்லையப்பர்... தைப்பூச திருவிழாவில் திருவிளையாடல் நிகழ்வு... | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

⚡ நெல்லுக்கு வேலியிட்ட நெல்லையப்பர்… தைப்பூச திருவிழாவில் திருவிளையாடல் நிகழ்வு… | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 தொடர்ந்து நடைபெற்று வரும் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, திருநெல்வேலி என்ற…